Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூன் 3rd, 2009

வவுனியா – யாழ். ரயில் பாதையை 2010இல் பூர்த்திசெய்ய திட்டம்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான 159 கிலோமீற்றர் ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் 2010ம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சுத் தெரிவித்துள்ளது.வவுனியா – யாழ். ரயில் பாதையை பூர்த்தி செய்வதற்கு 14 பில்லியன் ரூபா செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கிற்கான ரயில் பாதையையும் ரயில் நிலையங்களையும் அமைப்பதற்கான நிதியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இதற்குச் சகல மக்களும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் எனப் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் ஊடாக வடபகுதிக்கான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 6ம் திகதி வவுனியாவிலிருந்து தாண்டிக்குளம் வரை ரயில் சேவை நடைபெறவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Ilakku.com

Advertisements

Written by lankamuslim

ஜூன் 3, 2009 at 4:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டிருப்புப் பிரதேசத்தில் பாரிய தேடுதல்

அம்பாறை மாவட்டம் கல்முனை பாண்டிருப்புப் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்று இன்று இடம்பெற்றுள்ளது. பொலீசாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேகத்தின்பேரில் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியவர்கள் என்று படையினர் தெரிவித்துள்ளனர்.

Written by lankamuslim

ஜூன் 3, 2009 at 4:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது