Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூன் 1st, 2009

Stupid in America :”முட்டாள் அமெரிக்கா!”

அமெரிக்க மாணவர்களின் புத்திசாதுர்யம், திறமை, கல்வித்தகமை என்பன மிக மோசமாக உள்ளன. பிற நாட்டு மாணவர்களுடன் ஒப்பிடும் போது, மிகக் குறைவாக சித்தியடைகின்றனர். வறிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கூட, அமெரிக்கர்களை விட விவேகமானவர்களாக உள்ளனர். வகுப்பறைகளில் ஒழுங்கீனம் நிலவுகின்றது. ஆசிரியர்களால் மாணவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை.

ஆசிரியர்கள் மத்தியிலும் ஒழுக்கமின்மை நிலவுகின்றது. அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதில்லை என்பது அதைவிடக் கொடுமை. இந்த கல்விச் சீர்குலைவுக்கு, பாடசாலைகள் நிதிப்பற்றாக்குறையை, காரணமாக கூறுகின்றனர். உண்மை என்ன? அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி தயாரித்து ஒளிபரப்பிய ஆவணப்படத்தைப் பாருங்கள்:

Stupid in America

விருந்தினர்

Advertisements

Written by lankamuslim

ஜூன் 1, 2009 at 5:38 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்

மத்திய-கிழக்கில் இஸ்ரேல் உருவாகுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, 1928ல் சோவியத் யூனியனில், ஸ்டாலினால் யூத சுயாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இன்று மறக்கப்பட்டு விட்ட, பலர் அறிந்திருக்காத, “பிரோபிஜான்” என்ற பெயரிடப்பட்ட சோவியத் யூதர்களின் தாயகம், இன்று வரை நிலைத்து நிற்கின்றது. 70 வருடங்களுக்கு முன்னர், ரஷ்யாவின் ஆசியப்பகுதியில், ஸ்டாலின் வழங்கிய சைபீரிய நிலத்தில், பல்லாயிரக்கணக்கான சோவியத் யூதர்கள் சென்று குடியேறினார்கள்.

பல வருட  உழைப்பின் பலனாக பிரோபஜான் நகரம் உருவாகியது. இன்று வரை யூதர்கள், தமது மொழி, கலாச்சார தனித்துவங்களை அந்தப் பிராந்தியத்தில் பேணி வருகின்றனர்.

அதனை இங்கே இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கும் போதே தெரியவரும்

விருந்தினர்

Written by lankamuslim

ஜூன் 1, 2009 at 5:24 பிப

சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்

leave a comment »

ஐரோப்பா பிற கண்டங்கள் மீது புனிதப்போரை ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. இந்தப்போரின் நோக்கம் மதம் பரப்புவதல்ல, மாறாக லிபரலிசம்(அல்லது தாராளவாதம்) என்ற சித்தாந்தத்தை பரப்புவது. அதற்கு காரணம், தாம் மட்டுமே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 1, 2009 at 5:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தென்கிழக்காசியாவின் அறிவுக் களஞ்சியமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட தினம் வைகாசி மாதம் முப்பத்தோராம் நாள் நள்ளிரவு


jaffna20library201 வைகாசி மாதம் முப்பத்தோராம் நாள் நள்ளிரவு தமிழ் பேசும் மக்களின் வாழ்வில் என்றும் மறக்க முடியாத துன்பம் தோய்ந்த ஒரு நாளாகும். தென்கிழக்கு ஆசியாவின் அறிவுச் சுரங்கமாகத் திகழ்ந்த யாழ். பொது நூலகம் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி காடையர்களால் எரியூட்டப்பட்டது. தமிழரின் வரலாற்றுச் சிறப்பைக் கூறும் ஓலைச் சுவடிகள் முதற்கொண்டு சுமார் 97000 அரிய நூல்கள் இதில் எரிந்து சாம்பராயின. 1933ம் ஆண்டு சிறிய நூலகமாகத் தொடங்கப்பட்ட இது பின்னர் வடிவமைக்கப்பட்டு 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் முதல் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டது.

வரலாறு தத்துவம் இலக்கியம் மொழி கலாச்சாரம் எனப் பலவிதமான விடயங்களும் அடங்கிய அறிவுக் களஞ்சியமாக இந்நூலகம் திகழ்ந்தது. மேற்படி எரிக்கப்பட்ட நூலகமானது கடந்த 1998ம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரினால் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மீள நிர்மாணிக்கப்பட்டு, நூலகத்துக்கு சுமார் 25000 புத்தகங்களும் சேகரித்து கொடுக்கப்பட்டு மீண்டும் 2003ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நூலகப் புனரமைப்புக்கு கடந்த 2000ம் ஆண்டு வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக இருந்த ஈபிடிபியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிதி உதவிகளை வழங்கியதுடன் புனரமைப்பு பணிகளை துரிதமாக நிறைவு செய்வதற்கும் அதனை மீள இயக்குவதற்கும் பல வழிகளிலும் உதவி இருந்தார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Ilakku.com

Written by lankamuslim

ஜூன் 1, 2009 at 8:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலிகளின் சர்வதேச மட்டத்திலான பரந்துபட்ட வலையமைப்பை முற்றாகஅழிக்க உதவுமாறு இலங்கை உலக நாடுகளிடம் கோரிக்கை!!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த பயங்கரவாத செயற்பாடுகள் முறியடிக்கப்பட்டு வெற்றி பிரகடனப்படுத்தப் பட்டுள்ள நிலையில், புலிகளின் சர்வதேச மட்டத்திலான பரந்துபட்ட வலையமைப்பை முற்றாகஅழிக்க உதவுமாறு இலங்கை உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இங்கிலாந்தின் தந்திரோபாய கற்கைக்கான சர்வதேச நிறுவன அனுசரணையுடன் சிங்கப்பூரில் வருடாந்த உயர்மட்ட பாதுகாப்புப் பேரவை நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்ற வெளிவிவகார அமை;சசர் ரோகித்த போகொல்லாகம இலங்கை சார்பாக Nமுற்படி வேண்டுகோளை உலக நாடுகளிடம் முன்வைத்தார். புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் உலக நாடுகளிலுள்ள அவர்களது ஆதரவு அமைப்புகள் அப்படியே உள்ளன. புலிகள் இயக்கத்தை மீண்டும் செயற்படுத்துவதற்காக இந்த அமைப்புக்களைச் சேர்ந்த பெரும்பாலான செயலாளிகள் சில முக்கிய நகரங்களில் கூட்டம் கூட்டி வருகின்றனர். புலிகளின் இந்த உலக வலையமைப்பை கண்டுபிடிப்பதற்காக அனைத்து சர்வதேச சமூகமும் இலங்கை அரசுக்கு உதவ வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

athirady.org

Written by lankamuslim

ஜூன் 1, 2009 at 8:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது