Archive for மே 2009
தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்து வடக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் திட்டம் – இராணுவத் தளபதி சரத்பொன்சேகா
இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்க்கும் நோக்கில் முல்லைத்தீவில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டி லிருந்து மீட்கப்பட்ட வடமாகாணத்தின் பாது காப்பு மேலும் பலப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து இந்த மாகாணத்தின் பாதுகாப்பை அவர்கள் மூலமே உறுதிப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள வாரஇதழொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டி யொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணம் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அந்த மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து கிழக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது போன்றே இந்த நடவடிக்கையும் அமையுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தை இராணுவம் ஆரம்பித்த போது 1,20,000 படை வீரர்களே இருந்ததாகவும் அது யுத்த காலத்துக்குள்ளேயே 2,00,000 ஆக அதிகரிக்கப்பட்டதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, அரச தொலைக் காட்சி சேவை ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார்.
படை வீரர்களின் எண்ணிக்கையை மூன்று இலட்சமாக அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்க்கும் நோக்கில் முல்லைத்தீவில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி
வடக்கிலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் வகையில் முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவிக்கின்றார்.
இந்த காணி ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைக்கபடப்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் முதற் கட்டமாக 1000 தமிழ் இளைஞர் யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட விருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.
இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்த்தின் பின்னரே இந்த ஆட்சேர்ப்பிற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் தேவை ஏற்பட்டால் அதற்கு முன்னதாகவே பின்னனி ஆராயப்பட்டு ஆட்சேர்ப்புகள் இடம் பெறலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதே வேளை பொலிஸ் தகவல்களின் படி கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் ஆகிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் பிரிவு புதிதாக ஏற்படுத்தப்பட்டு அதற்கான பிரதி பொலிஸ் மா அதிபரும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் விடுவிக்கப்டப்ட பிரதேசத்தில் முழங்காவில், சிலாவத்துறை, விடத்தல் தீவு, மடு மற்றும் இலுப்பக்கடவை ஆகிய இடங்களில் 5 பொலிஸ் நிலையங்கள் திறக்கபபட்டுள்ளன. இதனைத் தவிர புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மாங்குளம் மற்றும் ஒமந்தை ஆகிய இடங்களில் ஏற்கனவே பொலிஸ் நிலையங்கள் திறக்கபபட்டு விட்டன.
நாச்சிக் குடா, பூநகரி, வெல்லான்குளம் முருகண்டி ,மல்லாவி ,கணகராயன்குளம் ,புளியன்குளம் ,முல்லைத்தீவு, அலம்பில், குமணமலை, ஒட்டிசுட்டான், நெடுங்கேனி, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி , ஆணையிறவு, பரந்தன், இரனைமடு, சாலை மற்றும் கொக்காவில் உட்பட 21 பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவிருப்பதாகவுமபொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத் தகவல்களின் படி ஆரம்பத்தில் தற்காலிககட்டிடங்களில் இவை இயங்கும் நிரந்தர கட்டிடம்அமைப்பதற்காக தலா 200 எக்கர் காணி தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள,இதனை அரசாங்கத்திடம் பெறவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
thenee.com
யாழ். மாநகர சபைக்கு சிங்கள முதல்வர்!: கனடிய ‘கீதவாணி’ வானொலியின் விஷமத்தனம்!!
கனடாவில் ஒலிபரப்பாகும் புலிகளின் பிரச்சார வானொலிகளில் ஒன்றான ‘கீதவாணி’, தனது மே 29, 2009 திகதிய காலைச்செய்தியில் மிகப்பெரிய பொய்யொன்றை அவிழ்த்துவிட்டுள்ளது. அதாவது, யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக (Mayor) அரசாங்கம் நியமிக்கப்போவதாகவும், அவர் கொழும்பில் இருந்து செயற்படுவார் என்றும், அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், முன்பு யாழ்.மாநகர சபை முதல்வராக இருந்து, (புலிகளால் கொலைசெய்யப்பட்ட) அல்பிரட் துரையப்பாவும் அவ்வாறு நியமிக்கட்டவர் என்றும், அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டது. யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை என்பனவற்றுக்கு தேர்தல் நடாத்துவதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டதைத் தொடர்ந்தே, கீதவாணி இந்தப் புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொட்டியுள்ளது.
இந்தச்செய்தியை செவிமடுக்கும் கனடாவில் வாழ்கின்ற (புலிகளின் அபிமானத்துக்குரிய) ‘இளையோர் சமூகம்’ என்ன முடிவுக்கு வந்திருப்பார்கள்? ‘யாழ்.மாநகர சபை முதல்வர் என்பவர் மக்களால் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படுபவர் அல்ல, இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர் முன்னர் யாழ்.மாகரசபை முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பாவும் அவ்வாறு நியமிக்கப்பட்டவர் தான் அத்துடன் அல்பிரட் துரையப்பாவும் ஒரு சிங்களவர் என்றபடியால்தான் அவரை இலங்கை அரசாங்கம் அப்போது முதல்வராக நியமித்தது’ என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்!
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வாழ்கின்ற ஒரு இலட்சத்து, நான்காயிரம் வாக்காளர்களை முட்டாள்களாகவும், கனடாவில் வாழ்கின்ற சுமார் இரண்டரை லட்சம் தமிழர்களை படுமுட்டாள்களாகவும் நினைத்துக்கொண்டு, கீதவாணி செய்துள்ள இந்த விஷமத்தனத்துக்கு, அதன் தீவிர புலிச்சார்பு நிலையைத்தவிர வேறு எந்தக்காரணமும் இல்லை.
வன்னி யுத்தம் நடைபெற்ற இறுதிநாட்களில் கீதவாணி செய்துவந்த பொய்ப்பிரசாரங்களுக்கும், விஷமத்தனங்களுக்கும் அளவு கணக்கே இல்லை. இந்த வானொலியின் உரிமையாளரான நடா.ராஜ்குமார் என்பவர், தினசரி மதியவேளையில் நேயர்களுடன் நடாத்தும் நேரடி உரையாடலில், புலிகளுக்கு சாதகமான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, நேயர்கள் என்ற போர்வையில் புலி ஆதரவாளர்களின் அப்பட்டமான வன்செயல் கருத்துகளை ஒலிபரப்பி, கனடா வாழ் தமிழ் சமூகத்தை வன்முறை உணர்வுகளுக்கு தூண்டிவந்துள்ளார். ஒருமுறை இவர் கொடுத்த தலைப்பில் கருத்து தெரிவித்த புலி ஆதரவாளர் ஒருவர், ‘ராஜீவ் காந்தியைக் கொன்றது போல, தமிழக முதல்வர் கருணாநிதியையும் எப்பொழுதோ கொன்றிருக்க வேண்டும்’ என அப்பட்டமாகத் தெரிவித்து, கீதவாணியில் அது வெளிப்படையாக ஒலிபரப்பப்பட்டது. இது போன்ற வன்முறையை தூண்டிவிடும் கருத்துக்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, கருணா, பிள்ளையான், மகிந்த ராஜபக்ச போன்றோரைப் பற்றியும் தாராளமாக கூறப்பட்டு வந்துள்ளன.
கனடாவில் அண்மைக்காலங்களில் புலிகளால் நடாத்தப்பட்ட வீதி ஆர்ப்பாட்டங்களின் போது, பல வன்முறைச் சம்பவங்களும், சட்டமீறல் சம்பவங்களும் நடைபெற்றதற்கு, கீதவாணி வானொலியில் ராஜ்குமார் போன்றவர்களும், இன்னொரு கனடிய தமிழ் வானொலியான (இளையபாரதியின்) ‘கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்’ செய்தி வாசிக்கும் புலிகளின் மிகத்தீவிர விசுவாசியான (பருத்தித்துறையில் உள்ள இ.போ.ச பஸ் டிப்போவில் முன்பு பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய) தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் என்பவரும், செய்துவந்த புலிசார்பு வன்முறைப் பிரச்சாரங்களும் காரணமாகும். அத்துடன் புலிகளால் நடாத்தப்படும் சி.எம்.ஆர் (Canadian Multicultural Radio) வானொலியும், கனடாவில் வெளிவருகின்ற 15க்கும் அதிகமான புலி ஆதரவு இலவசப் பத்திரிகைகளும், புலிகளுக்கு ஆதரவான பொய்ச்செய்திகளை வெளியிட்டு கனடிய தமிழ்மக்களின் காதில் பூச்சுற்றி அவர்களை முட்டாள்களாக்கி வந்துள்ளன.
அண்மையில் கீதவாணி வானொலி உரிமையாளர் ராஜ்குமார், சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்ரபோல், மற்றும் இலங்கை, இந்திய அரசுகளால் தேடப்பட்டு வரும் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் (கே.பி) என்பவரையும், புலிகளின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் எனக் கூறிக்கொள்ளும் தயா மோகன் என்பவரையும் நேரடியாகப் பேட்டிகண்டு ஒலிபரப்பினார். எனவே இதிலிருந்து ஒரு உண்மை தெரியவருகிறது. கீதவாணி வானொலி உரிமையாளருக்கு கே.பியின் இருப்பிடம் ஓரளவுக்கு தெரிந்திருப்பதுடன், அந்த மிகப்பெரிய பயங்கரவாதியின் நேர்காணலை ஒலிபரப்பும் துணிச்சலும் அவருக்கு இருக்கின்றது. எனவே கனடிய அரசும், இலங்கை அரசும் கனடாவில் செயல்படுகின்ற புலிச்சார்பு வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் விடயத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இல்லையென்றால் இந்த ஊடகங்கள் கனடிய தமிழ் சமூகத்தை ஒரு வன்முறை மனோபாவமுள்ள சமூகமாக மாற்றி, ஓரளவு உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமைதிப்பூங்காவாகத் திகழ்கின்ற கனடாவை நெருக்கடிக்குள் ஆழ்த்தக்கூடும்.
அத்துடன், கனடாவில் வாழ்கின்ற தமிழ்மக்கள் இந்த ஊடகங்கள் செய்கின்ற பொய்ப்பிரசாரங்களை இனிமேலும் நம்பி ஏமாறுகிற நிலையிலிருந்தும் விடுபடவேண்டும். புலித்தலைமை முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியவர்களும் கோழைகளைப்போல இலங்கை அரசாங்கத்திடம் உயிர்ப்பிச்சை கேட்டு நிற்கின்றனர். இந்த நிலையில், கனடாவில் செயற்படுகின்ற தமிழ் ஊடக மாபியாக்களுக்குப் பின்னால் புலிகள் நிற்கிறார்கள் என அஞ்சி, கனடிய தமிழ் வர்த்தகர்கள் இந்த ஊடகங்களுக்கு விளம்பரம் வழங்குவதையும் கைவிட வேண்டும். கனடிய தமிழ் சமூகத்தை புலிகள் தொடக்கி வைத்த வன்முறைச் சிந்தனையிலிருந்து விடுவிப்பது, ஜனநாயக சிந்தனையுள்ள ஒவ்வொரு கனடிய தமிழனினதும் கடமையாகும்.
theneeweb.de
வடக்கு தேர்தலில் ஜ.ம.சு.கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தமிழ்கட்சிகள் மறுப்பு!
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறுவிடுத்த கோரிக்கையை அரசுக்கு அதரவு வழங்கும் ஈ.பி.டி.பி. உட்பட ஏனைய மூன்று தமிழ் கட்சிகள் நிராகரித்துள்ளன.
ஈ.பி.டி.பி., புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய நான்கு கட்சிகளையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், அரசாங்கத்தின் கோரிக்கையை அக்கட்சிகள் நிராகரித்துள்ளன.
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறு தம்மிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டணியிலேயே போட்டியிடப்போவதாகக் கூறினார்.
எனினும், வன்னியிலிருந்து பலர் இடம்பெயர்ந்திருப்பதால் தமது உறவினர்கள் எங்கு உள்ளனர் என்று தெரியாத நிலையில் பெரும்பாலான மக்கள் இருப்பதால் தேர்தல் நடத்துவதற்கு இது சிறந்த தருணம் இல்லையெனவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலில் தமது கட்சி தனித்துப்போட்டியிடவிருப்பதாக ஈ.பி.டி.பி. தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். இந்த இரண்டு தேர்தல்களையும் நடத்துவதற்கு அரசாங்கத்தால் இயலுமாயின் வடக்கியிலுள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்களை அரசாங்கத்தால் நடத்த இயலுமென நம்புவதாக அவர் தெரிவித்தார்.
“இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கு இது சரியான தருணமா என்பது பற்றி நாம் எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ஆராய்ந்து வருகிறோம்” என்றார் அமைச்சர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எனினும்இ புதிய கூட்டணியில் போட்டியிடத் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
neruppu.com
துரோகிகளின் பட்டியல்..
விடுதலைப் புலி ஆதரவாளர்களின் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே போகப்போகிறது. அடுத்து தயா மோகனைத் துரோகியாக்குவதா? இல்லையா?? என்ற அரை குறைக் குழப்பத்தில் இப்போது புலி ஆதரவாளர்கள் திக்கு முக்காடுகிறார்கள். பத்மநாதனின் தலைமையை ஏற்பதா இல்லையா எனும் குழப்பமே இன்னும் தீர்ந்தபாடில்லை, அதற்குள் தயாமோகனையும் துரோகியாக்குவதா? இல்லையா? எனும் திடீர்க் குழப்பம் உள் நுழைந்து விட்டது. பி.பி.சிக்கு அவர் “செவ்வி” கொடுத்தது தான் காரணமாம் என்றால் காறித் துப்பத்தான் முடியும், பி.பிசி நம்மை செவ்வி எடுக்காதா என்று அவர்கள் அலைந்து திரிந்த காலத்தை மறந்து விட்டாலும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
எனவே தயா மோகன் என்ன சொன்னார் என்பது இங்கு முக்கியம் பெறுகிறது..
புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்ற இந்த நிலையில் அங்கு இருப்பவர்களின் மன நிலை எப்படியிருக்கிறது? அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி அமையும்? என்று கேட்கப்பட்ட போது
“எமது தேசியத் தலைவர் வீரச்சாவடைந்தபோதும் கூட, வீரச்சாவடையவதற்கு முன்னர் கூட ” எமது மக்களுக்காக… என்று தனது பதிலை திட காத்திரமாக பி.பி.சி வானலையில் அவர் ஒலிக்க விட, அதிலிருந்து இந்தப் புதிய குழப்பத்திற்குள்ளாகிறார்கள் புலி ஆதரவாளர்கள்.
தயா மோகன், புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட உயர்மட்ட உறுப்பினர். அவர் பி.பி.சிக்கு வழங்கிய இந்த செவ்வியில் புலிகளின் எதிர்காலம் குறித்து என்ன பேசினாரோ இல்லையோ தீவிர புலி ஆதரவாளர்களைக் கோபப்படுத்தும் வகையில் இரண்டு விடயங்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.
1. பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது 2. அவர் இறக்க முன் பத்மநாதனிடம் பல விடயங்களைக் கூறிப் பொறுப்பளித்தது, இதன் மூலம் தாம் இப்போது பத்மநாதனின் வழிகாட்டலில் தான் நடந்துகொள்கிறோம் என்பது.
இது தீவிர புலி ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியாத விடயம்.
ஏன்?
தீவிர புலி ஆதரவு என்பது ஒரு மாய வித்தை மாத்திரமே. அப்படியொன்று நிஜத்தில் இருந்திருக்கும் என்றால், அதன் அடிப்படையை மற்றவர்கள் நம்பும் போது மக்கள நலன் அங்கே இருந்திருக்காது என்கிற உண்மையையும் சேர்த்துத்தான் நம்ப வேண்டும்.
எனவே, தீவிர புலி ஆதரவு அல்லது மக்கள் நலன் சார்ந்த ஆதரவு, இந்த இரண்டில் ஒன்றுதான் நிஜமாக இருக்க முடியும்.
இந்த சர்ச்சைக்குள் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று தான் புலிகளின் கொள்கை வகுப்பாளர்கள், தம் பிரச்சாரத் தளபதிகள் மூலம் புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள் எனும் வடிகட்டிய மாற்று வழியை முன்வைத்தார்கள்.
எனினும், அது அவர்கள் அளவில் மாத்திரம் தான் நிலைபெற்றதே தவிர, சர்வதேசத்தின் கண்களில் உண்மைக்குப் புறம்பாண வடிகட்டிய பொய்யாக மட்டுமே தென்பட்டது.
மக்கள்தான் புலிகள், புலிகள் தான் மக்கள் என்றால் புலிகளை விட்டுவிட்டு இந்த மக்கள் ஓடி வந்திருக்கக்கூடாது என்கிற அடிப்படை உண்மை ஒரு புறமும், ஓடி வந்து அகதியாகப் பதிந்த நாடுகளில் ” புலி எங்கள் பிள்ளைகளைக் பிடிக்கிறது ” என்று இவர்கள் தஞ்சம் கோரியிருக்கக்கூடாது எனும் எதர்த்தமான உண்மையும் எதிராகச் சாட்சியளிக்கும் காரணத்தினால் சர்வதேசம் இதை எப்போதும் நம்பவில்லை.
புலிகளின் ஆதரவாளர்களிடம் மட்டுமே இந்தக் கொள்கை எடுபட்ட காரணத்தினால் அவர்கள் தாம் சார்ந்த சமூகத்திலிருந்தே ஆதரவாளர்களையும், எதிர்ப்பாளர்களையும் அடையாளங் காண ஆரம்பித்தார்கள்.
ஆதரவானவர்கள் வாய் மூடியவர்களாகவும், எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் எதிரிகளாகவும் காணப்பட்டார்கள்.
இதில் எதிரிகள் “துரோகிகள்” என்று வர்ணிக்கப்பட்டார்கள், தமது சமூக ஒன்று கூடல்களிலிருந்து கூட விலக்கிப் பார்க்கப்பட்டார்கள், மீறியும் எதிரானவர்கள் ஒன்று கூடினால் அவர்களது சுதந்திரங்கள் மறுக்கப்பட்டன, குழப்பப்பட்டன, அவர்கள் கூடும் இடங்கள் எல்லாம் கூச்சலிடப்பட்டன, இணையங்கள் எங்கும் அவர்கள் படங்கள், பெயர்கள் வெளியாகி நாறடிக்கப்பட்டன, ஒரு மனிதனை எதிர்ப்பதற்காக அவன் குடும்பத்தின் மானமே ஏலமிடப்பட்டன என்று இந்த அடாவடித்தனம் கட்டு மீறிப் போனது.
இத்தனைக்கும் காரணம் அவர்களது “துரோகிகளின் பட்டியல்” ஆகும்.
தமிழ்ச் சமூகத்தின் புத்திஜீவிகளை அழிப்பதற்கு முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த “துரோகிகளின் பட்டியல்” , 30 வருட காலங்கள் அவர்களுக்கிருந்த “அந்த” அடையாளத்தைப் பேணுவதற்காகப் போராடிய!? அதன் தலைவர்களையும் மெல்ல வந்து சேர்கிறது.
இது “தம்மால் வளர்க்கப்பட்ட மனிதர்களின்” அரசியல் அறிவை அவர்கள் அறிந்து கொள்ளும் அதிஷ்டமா துரதிஷ்டமா என்பதை துரோகிகளாக்கப்பட்டவர்கள் உணர்ந்துகொள்வதே சாலச் சிறந்தது.
ஒவ்வொரு தடவையும் “துரோகி” ப் பட்டங்கள் சூட்டப்படும் அவசரத்தில் தம் வண்டவாளங்கள் கசிந்துவிடுமோ என்கிற பயம்தான் புலிகளுக்கு இருந்ததே தவிர, அவர்கள் மக்களுக்கு எதிராக எதையும் செய்ததற்காக அந்தத் துரோகிப்பட்டங்கள் சூட்டப்பட்டதில்லை.
இப்பொழுதும் தயா மோகனும் இந்தப் பட்டியிலில் இணைவது மூலம் பட்டியல் நீள்கிறதே என்கிற கவலை சில புலி ஆதரவாளர்களுக்கு இருந்தாலும், தற்போதைய கால சூழ்நிலையில் இவர் உண்மையில் துரோகியாக்கப்பட வேண்டியவரா இல்லையா எனும் கேள்வியும் ஒரு சிலர் மனதில் எழுகிறது.
ஆம் அவர் துரோகியாக்கப்பட வேண்டும் என்று யாராவது சொல்வதானால், அதற்கு முன் பிரபாகரனை துரோகி, அதுவும் இனத்தை அழித்த மகா துரோகி என்று சொல்லும் வரலாற்றுக் கடமை அவர்களுக்கு இருக்கிறது.
அதற்குப் பல உதாரணங்கள் இருந்தாலும், மிகக் குறுகிய அளவில்
- ஊரான் பிள்ளையையெல்லாம் பழிகொடுத்தாலும் தன் உயிருக்காக எதிரியின் காலில் விழுந்தமை
- “தமிழன்” அழிகிறான், “தமிழன்” அழிகிறான் என்று உலகத்தையே கதற வைத்துவிட்டு அதே தமிழர்களைச் சுற்றிவர வைத்து பின்னால் சென்று ஒளிந்து கொண்டமை
- அவர்கள் பிள்ளைகளையும், உறவினர்களையும் கட்டாயப்படுத்தி ஆயுதந்தூக்க வைத்து, போய் அவர்கள் நாடாளுமன்றங்கள் முன் நின்றாவது இந்த யுத்தத்தை நிறுத்தித் தாருங்கள் என்று மக்களை எல்லாம் வலிந்து அனுப்பிவைத்துவிட்டு, நோர்வேக்காரன் மூலமாகவும், இங்கிலாந்து பத்திரிகைக்காரர்கள் மூலமாகவும் தன் உயிரைக் காப்பாற்ற விழுந்து விழுந்து துடித்தமை.
- சரணா? அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று மக்களை உசுப்பேற்றி விடட்டுகூறி விட்டு அதே இராணுவத்தின் கையில் போய் வழி தவறிய முயல் போல் மரணத்தைப் பெற்றுக்கொண்டமை
இப்படி பல காரணங்கள் இருக்கிறது, இவற்றை நாம் பட்டியலிட்டால் நம் மீது புலி ஆதரவாளர்களுக்குக் கோபம் வரும், ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நாம் வலியுறுத்தி வந்ததுபோன்று மிக அருகில் வைத்து அதுவும் தலையில் தாக்கப்பட்டு கோழை போல இறந்து கிடக்கும் தம் தலைவரின் சென்சார் செய்யப்படாத புகைப்படங்களைப் பார்த்த பின்னாவது அந்தக் கோபம் அடங்க வேண்டும்.
உள்ளவனுக்கெல்லாம் சயனைட் மாட்டிவிட்ட தலைவன், இறுதியில் தனது உயிருக்காக எவ்வளவு போராடி, எப்பேற்பட்ட மாவீரனாக மடிந்திருக்கிறான் என்பதை சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.
இராணுவம் நயவஞ்சமாகக் கொன்றதோ இல்லையோ, அந்த இராணுவத்திடம் போய் சரணடைந்த அந்தத் தருணத்திலும் சரி, அதற்கான திட்டம் தீட்டிய முழுப் போர்க் காலத்திலும் சரி, பிரபாகரன் தன்னை நம்பிய மக்களுக்கு செய்தது வடி கட்டிய நயவஞ்சகம், துரோகம் மாத்திரமே.
மாவீரனாவான் என்று வீரத்துடன் பார்த்திருந்த தன் ஆதரவாளர்களையும் ஏமாற்றி, தன் மீது பந்தயங்கட்டியவர்கள் எப்படியாவது தன்னை சயனைட் அடிக்க வைத்துவிடுவார்கள் என்று பயந்து ஓடிச்சென்று இராணுவத்தின் கைகளில் சரணடைந்தது துரோகமில்லையா?
அதற்கு முன்னதாக நடேசனையும், புலித்தேவனையும் காவு கொடுத்தது துரோகமில்லையா?
இறுதி நேரத்திலும் சூசையை வைத்து பிலிம் காட்டியது துரோகமில்லையா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு துரோகமிழைத்து விட்டு இப்போது சத்தமே இல்லாமல் பொட்டம்மான் ஓடி விட்டாரே அதுவும் கூடத்தான் துரோகம், வேலையெல்லாம் முடிந்து சர்வதேச வலைப்பின்னல்களை எல்லாம் அவிழித்துவிட்டு அவரும் ஒரு ஏரிக்கரையில் மிதக்கும் நாள் வரும் போதுதான் அவரது துரோகமும் இவர்களுக்குத் தெரிய வரும்.
ஒருவேளை தன் துரோகத்திற்குப் பரிசாக தன் உடல் வெளியே தெரியும் அளவுக்கு எதையும் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்க, அதை அவரையை கைப்பற்றிய “இவர்களது” புலனாய்வுத்துறை ஏற்றுக்கொண்டால், ஆகக்குறைந்தது பிரபாகரனை விட வீரமாக பொட்டம்மான் வீர மரணம் அடைந்ததாக புலி வரலாறு பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
ஆதரவாளர்கள் உசுப்பேற்றப்பட்டார்களே தவிர, பெருந் தலைகள் எல்லோரும் தம் உயிருக்குப் பயந்து துப்பாக்கியின் துணையில் வாழ்ந்த ஏமாற்றுக்காரர்களே.
பிரபாகரனின் பெற்றோரும் இப்போது அரச நிவாரண முகாம்களில் நலமாக இருக்கிறார்களாம்.
இறுதியில் நலம் குறைந்து போனது, அவர்களை நம்பி அல்லது அவர்களின் அடக்கு முறையில் தம் பிள்ளைகளைப் பறி கொடுத்த அப்பாவி மக்கள் மாத்திரமே.
குளிர்,மழை பாராது தெருக்களில் காலம் கழித்து மன அளவிலாவது நலம் குறைந்து போன அந்த மக்களுக்கு இந்த விடுதலை வீரர்கள் இதுவரை தம் வரலாறு மூலம் நிரூபித்தது என்ன?
இனிமேலும் அவர்கள் வந்து தம் முன்னால் எதைக்கொண்டு அவர்களை வெளியேற்ற வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்று இவர்கள் சிந்திக்கும் போது இந்த மக்களுக்கு இருக்கப்போகும் தெரிவுதான் என்ன? என்று சிந்தித்தால் அன்றைய எதிரி இன்றைய நண்பனாகும் தேவையைக் காலம் உணர்த்திச் சொல்லும்.
இதன் அடிப்படையில் புலிகளின் துரோகப் பட்டியல் மறு சீரமைக்கப்பட்டு மக்களால் ஒதுக்கப்பட்ட இன விரோதிகளாக அவர்களே மாற்றப்படுவது திண்ணம்.
அதிகாரம், ஆளுமை, வசதி வாய்ப்பு என்று எல்லாமே வந்திருந்த போதும் கூட இவர்கள் மக்களை சுதந்திரமாக மூச்சு விடவில்லை, மாறாக தொடர்ந்தும் மக்களை ஒரு பதட்டத்துடன், உணர்வு மேலோங்கிய ஒரு மந்தை நிலையில் வைத்து பரிபாலனம் செய்வதிலேயே குறியாக இருந்தார்கள்.
எனவே, மக்களின் நலன் அடிப்படையில் வைத்து நேர் கோட்டில் சிந்திக்கும் போது இந்தக் கோழை வரலாற்றுக்காக மக்கள் உள்ளங்களில் சப்பாணி கொட்டி அமர்ந்து கொள்ள அத்தனையையும் செய்த அவர்களே துரோகிகளாக உரு மாற்றம் பெருவார்கள்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தலித் மக்களுக்கு நேர்ந்த கொடுமையான ஒரு புகைப்படத்தை வைத்து அது இலங்கையில் நடந்த ஒரு விடயம், அதுவும் பாதிரியார் ஒருவர் கண்டு சொன்னார் என்று இவர்கள் கதை கட்ட, அதை எத்தனை பேர் சேர்ந்து “பொய்” என நிரூபித்திருந்தும், இன்றும் நம்பும் “அறிவாளிகள்” கண்களில் தலையில் வெட்டுக்காயத்துடன் பிரபாகரன் இறந்து போன படம் கிடைக்க இன்னும் அரை நூற்றாண்டாவது செல்லும்.
athirady.org
What Next for the Muslims of Sri Lanka
|
|||
Sri Lanka’s 26 year old war is finally over. An ending that heralds an era free of suicide bombings, insecurity, and extravagant defense budgets. After what seemed like an eternity to many Sri Lankans, the world witnessed a truly mass celebration when the country’s Sinhala, Tamil and Muslim peoples set aside differences of every kind to welcome the end to war. Still it’s neither unusual nor unbecoming to find those who wonder ‘what next?’. After all realistically speaking, an end to war does not automatically transform into an end to the racial hostilities that laid the foundation for war. The Muslim dimension of the war and more recently, victory is sometimes underplayed, festering feelings of marginalization and insecurity in the Muslim community. It’s easy to feel overpowered and impotent at moments like this, and simply resign the fate of oneself and one’s community to a handful of Muslim politicians. These realities however should not be allowed to dampen the opportunity presented by this victory that has brought the country’s main ethnicities together in
triumphant celebration. In short, these moments of togetherness offer the perfect opportunity for Muslims to demonstrate their patriotism, build bridges with other ethnicities, and heal past wounds left over by Sinhala-Muslim and Tamil-Muslim communal disharmony. After all it is a fact that Muslims of Sri Lanka are in a privileged position as a result of being bilingual, in a country where language has long been a barrier in national reconciliation between the Sinhalese and Tamils.Having said that, I present ten ways in which YOU and I and every Sri Lankan Muslim can use this moment to lay the footing for long-lasting ethnic harmony.
|
islamonline.net
புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்களின் அனைத்து விபரங்களும் கிடைத்துள்ளதாக இலங்கை படைத்தரப்பு அறிவிப்பு

புலிகள் இலங்கையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதியுதவிகளை வழங்கிய புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த சகல தகவல்களும் தமக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். முல்லைத்தீவில் புலிகளின் மறைவிடம் ஒன்றில் இருந்து, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இலங்கைக்கான பொறுப்பாளர் கஸ்ரோ என்றழைக்கப்படும் வீரகத்தி மணிவண்ணன் உள்ளிட்ட 18 நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களின் பெயர் விபரங்களை அடங்கிய பட்டியல் ஒன்றை தாம் மீட்டுள்ளதாகவும் படைத்தரப்பு கூறியுள்ளது. கனடா, சுவிஸர்லாந்து, ஜெர்மனி, ஒல்லாந்து, மொரீசியஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ், சுவிடன், பிரித்தானியா, தென்னாபிரிக்கா, ஒஸ்ரியா, இத்தாலி மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் நிதியுதவிகளை சேகரிப்போர் மற்றும் அவற்றின் பொறுப்பாளர்கள் குறித்த தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது
Ilakku.com
புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் ஒருவர் பல திடுக்கிடும் தகவல்களை வழங்கி வருகின்றார்!
புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் ஒருவர் தவிர ஏனையோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், படையினரின் விசாரணைக்கு உள்ளாகிவருவதுடன் பல்வேறு அதிர்ச்சி தகவல்களையும் வழங்கி வருகின்றார்.
கொழும்பில் தங்கியிருந்து தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டவர்கள் தொடர்பாகவும் அதற்கு உதவியவர்கள் குறித்தும் பல தகவல்களை வழங்கியுள்ளார். இவர் வழங்கிய தகவலின் பிரகாரமே கொழும்பில் பிரபல வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது மட்டுமல்ல மேலும் பல உறுப்பினர்கள் குறித்தும் சரணடைந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ள புலிகள் தொடர்பாகவும் தகவல்களை வழங்கி வருகின்றார் இவரது தகவலின் பிரகாரமே புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை புலிகளின் முக்கியஸ்தர்களான எழிலன், புதுவை ரத்தினதுரை, கரிகாலன், ஞானம், இளம்பரிதி, யோகி போன்ற புலிகளின் முக்கியஸ்தர்களும் படையினரிடம் சரணடைந்த நிலையில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. அந்த ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம் நிவாரண முகாம்களில் தேடுதல் மேற்கொண்ட படையினர் புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளர் தமிழினி, பிரபாகரனின் பெற்றோர் ஆகியோரையும் மேலும் பல புலி உறுப்பினர்களையும் கைது செய்துள்ள படையினருக்கு மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வழங்கி வருவதாக தெரியவருகின்றது.