Archive for the ‘ஹதீஸ்’ Category
அபூபக்கர் (றழி) அவர்களை முஸ்லிம்கள் கிலாபத்தின் ஆட்சி தலைவராக நியமித்தபோது
அபூபக்கர் (றழி) தனது பதவியேற்பு உரையில்:
“உங்களின் பொருப்பாளனாக நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். நான் உங்களைவிட மேலானவன் அல்ல. உங்களின் விடயத்தில் நான் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் போதெல்லாம் எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நான் அவனுக்கு மாறு செய்தால் என்னை திருத்திவிடுங்கள்” என அனைவரையும் வேண்டிகொள்கிறேன் என்றார்கள்
மனிதர்கள் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்:ஹதீஸ்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மனிதர்கள் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.
ஸஹீஹுல் புகாரி
ஹதீஸ் எண்: 7376
காபிர்களை பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்

சிந்தனைக்கு ஒரு செய்தி
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது (எனக்குப் பின் வருகின்ற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன். அல்லாஹ்வின் பொறுப்பிலும், அவனது தூதர் (ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ளவர்களின் (முஸ்லிமல்லாதவர்களின்) ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும். அவர்களுடைய சக்திக்கேற்பவே தவிரபாரத்தை அவர்கள் மீது சுமத்தக் கூடாது.
ஸஹீஹுல் புகாரி
ஹதீஸ் எண்: 3052
தற்போதைய பாரசீகப் பேரரசன் குஸ்ரூ அழிந்து விடுவான்:சிந்தனைக்கு ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வம்சம் அரசன்) எவனும் இருக்க மாட்டான். -தற்போதைய ரோமப் பேரரசன்- சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் -வம்ச அரசன்- எவனும் இருக்கமாட்டான். அவ்விருவரின் கருவூலஙகளும் அல்லாஹ்வின் பாதையில் -போரிடுவோரிடையே- பஙகிடப்பட்டு விடும். இதை அபூஹுரைரா (ரலி) அவதர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹுல் புகாரி
ஹதீஸ் எண்: 3027









