Lankamuslim.org

One World One Ummah

Archive for the ‘உலக செய்திகள்’ Category

இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் எகிப்து

leave a comment »

OurUmmah: எகிப்தில் நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எகிப்து  தேர்தல் திணைக்களம் வெளியிட்டது. அதன்படி பதிவான 2.3 கோடி வாக்குகளில் இஹ்வான் வேட்பாளர் முஹம்மது முர்ஸிக்கு 58 லட்சம் வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார் . முபாரக் ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷபீக் 55 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் .  முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வுக்கு 41 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார்.விரிவாக

Written by lankamuslim

May 30, 2012 at 8:58 pm

சிரியாவில் ஒரே நாளில் 34 குழந்தைகள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் படுகொலை

with 2 comments

சர்வாதிகாரி பஷார் அல் ஆசாத்தின் இராணுவம்  ஒரே நாளில் 34 குழந்தைகள் உட்பட நூற்றுக் கணக்கானவர்களை படுகொலை செய்துள்ளது. சிரியா மக்கள் எழுச்சிக்கு எதிராக சர்வாதிகாரி பஷார் அல் ஆசாத் மிக கடுமையான ஒடுக்கு முறையை மேற்கொண்டு இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 27, 2012 at 8:16 pm

இஹ்வான் வேட்பாளர் முன்னிலையில்

with one comment

எகிப்தில் நேற்று முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிட்ட வேட்பாளர்களின் வாக்குகள் தொடர்ந்து கணக்கிடப்படுகிறது இது வரைவேளியாகியுள்ள தகவலில் பிரகாரம் இஹ்வான் வேட்பாளர் முஹம்மத் முர்ஸி 25 வீத வாக்குகளையும் அஹமத் ஷபீக் 23 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். Misr 25 TV – LIVE Read the rest of this entry »

Written by lankamuslim

May 25, 2012 at 4:11 pm

எகிப்தில் ஜனாதிபதியை தெரிவு செய்ய இன்று இரண்டாவது நாளாக மக்கள் வாக்குபதிவு

leave a comment »

எகிப்து ஜனாதிபதி தேர்தலின் முதல் நாள் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.இரண்டு தினங்கள் கொண்ட தேர்தலில் இன்றைய தினத்திலும் மக்கள் வாக்குபதிவுகளை ஆரம்பித்துள்ளனர் . Read the rest of this entry »

Written by lankamuslim

May 24, 2012 at 10:49 am

எகிப்தில் நாளை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தேர்தல்

leave a comment »

நாளை புதன்கிழமை நாளை மறுதினம் வியாழகிழமை 23,24 ஆகிய நாட்களில்  உலகின் கூடிய கவனத்தை பெற்றுவரும் எகிப்து ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. அந்த தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். Read the rest of this entry »

Written by lankamuslim

May 22, 2012 at 8:00 pm

ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பொதுமக்கள் படுகொலை அதிகரிப்பு

leave a comment »

ஆப்கானிஸ்தானின் பக்திஸ் மாகாணத்தில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் 14 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

May 9, 2012 at 8:50 pm

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி OUT

leave a comment »

OurUmmah: பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி தோல்வியை தழுவினார்.  அதேவேளை பிரான்ஸ் இஸ்லாமிய அமைப்புகளின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய இஸ்லாமிய சிந்தனையாளர் தாரிக் ரமழான் ‘பிரான்சை பிரிக்க வேண்டாம் பிரான்சை ஒன்று படுத்துங்கள்’ என்று சர்கோசியை  .விரிவாக

Written by lankamuslim

May 7, 2012 at 10:49 am

கலாநிதி யூசுப் அல் கர்ழாவி தூனிஸியா சென்றுள்ளார்

leave a comment »

சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி யூசுப் அல் கர்ழாவி தூனிஸியாவிற்கு சென்றுள்ளார். ராஷித் அல் கனூஷி தலைமையிலான ஆளும் தரப்பான அந்நஹ்ழா வின் அழைப்பை ஏற்று கர்ளாவி ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டு தூனிஸியாவிற்கு சென்றுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

May 5, 2012 at 4:02 pm

நான் இன்னும் ஜனாதிபதியின் வாயை பார்த்தவாறுதான் இருக்கிறேன்

with 2 comments

இஷாம் மார்க்
ஒரு முஸ்லிம் வாலிபனின் ஆதங்கம் :தம்புள்ளை ஹைரியா பள்ளிவாயல் எங்கள் நாட்டு ஜனாதிபதி கொரியா விஜயம் மேற்கொள்ள முன்பு நடைபெற்றதை எல்லோரும் அறிவார்கள். அந்த விடயத்தின் பின்பு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு கிடையில் ஒரு பதற்றம் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத கலக்கம். Read the rest of this entry »

Written by lankamuslim

May 2, 2012 at 2:41 pm

எகிப்து இராணுவ நிர்வாகத்தின் மீது சந்தேகம் வலுக்கிறது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் மஹுமூத் ஹுசைன் அதிஉயர் ஜனாதிபதி தேர்தல் ஆணையத்தின் -SPEC- எமது வேட்பாளர் கைராத் அல் ஷாத்திரை நீக்கக் எடுக்கப்பட்ட தீர்மானம் சந்தேகத்திற்கு இடமான அரசியல் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால் கைராத் அல் ஷாத்திர் தேர்தலில் போட்டியிட  100 வீதம்  சட்டத் தகமை கொண்டுள்ளதாக சட்ட வல்லுனர்கள்  ஆராய்ந்து உறுதிப் படுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் .விரிவாக…

Written by lankamuslim

April 16, 2012 at 5:29 pm

எகிப்தின் 10 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தடை

leave a comment »

எகிப்தில் மே மாதம் 23 ,24 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் ஜனதிபதி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த 23 பேர்களில் முக்கிய அரசியல் கட்சிகளில் வேட்பாளர்களான இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் வேட்பாளர் கைராத் அல் ஷாத்திர், மற்றும் சலபிகள் கட்சியான அன் நூர் சார்பாக வழக்கறிஞரும், மார்க்க பேச்சாளருமான ஹாஸிம் அபூ இஸ்மாயீல் மற்றும் சர்ச்சைக்குரிய Read the rest of this entry »

Written by lankamuslim

April 15, 2012 at 8:00 am

ஈரானுடன் துருக்கியில் ஆறு நாடுகள் பேச்சு

leave a comment »

ஈரான் அணுத்திட்டம் தொடர்பில் மேற்கு நாடுகள் கிளப்பியுள்ள பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈரானும் ஆறு முக்கிய வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெறுகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

April 15, 2012 at 7:50 am

தேர்தல் களத்தில் 22 வேட்பாளர்களுடன் ஹுஸ்னி முபாரக்கின் முன்னாள் உளவு தலைவரும்

leave a comment »

மக்கள் எழுச்சியின் பின்னர் எகிப்தில் நடைபெறும் முதலாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களாக 23 வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் வேட்பாளர் கைரத் ஷாதிர், அரபு லீக்கின் முன்னாள் தலைவர் அம்ர் மூஸா, Read the rest of this entry »

Written by lankamuslim

April 10, 2012 at 9:30 pm

அஷ்ஷஹீத் உஸாமா மனைவிகள் மற்றும் குழந்தைகள் புதிய வீடியோ

leave a comment »

OurUmmah: அஷ்ஷஹீத் உஸாமா பின்லாதின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ள பங்களா வீட்டுவீடியோ ஒன்றை அல் அரபியா தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துள்ளது. இஸ்லாமபாத்தில் புறநகரப் பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் அஷ்ஷஹீத் உஸாமா பின்லாதின் மனைவிகளும் குழந்தைகளுமாக 8 பேர் வைக்கப்பட்டுள்ளனர். விரிவாக ..

Written by lankamuslim

April 10, 2012 at 8:21 am

பனிச்சரிவில் சிக்கியுள்ள பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்

leave a comment »

பாகிஸ்தான் சியாச்சின் பனிமலை இராணுவ தளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் நூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. Video Read the rest of this entry »

Written by lankamuslim

April 7, 2012 at 3:44 pm

இஹ்வானுல் முஸ்லிமூன் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை நிறுத்துகிறது

leave a comment »

OurUmmah: எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக பொறியியலாளரும், அதன் துணைத் தலைவருமான தெரிவு செய்யப்பட்டுள்ளார் என இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் பொது வழிகாட்டியான முஹம்மத் பதி நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.விரிவாக…

Written by lankamuslim

April 1, 2012 at 10:54 pm

முஸ்லிம் என்ற காரணத்தால் அமெரிக்காவில் முஸ்லிம் பெண் அடித்து படுகொலை

with 2 comments

அமெரிக்க கலிபோனியா மாநிலத்தில் ஒரு முஸ்லிம் பெண், முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றது . Shaima Alawadi என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து  தலையில் இரும்பால் அடித்து படுகொலை செய்துவிட்டு, “ நீங்கள் பயங்கரவாதிக்ள உங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றுவிடுங்கள் ” “go back to your country, you terrorist.” Video Read the rest of this entry »

Written by lankamuslim

March 25, 2012 at 5:14 pm

இஸ்ரேலும் ஐநா மனித உரிமை பேரவையும்

leave a comment »

இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஐ.நா. உத்தரவிட்டுள்ளது .இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள் பலஸ்தீன மக்களின் உரிமைகளை எவ்வாறு மீறுகிறது ? என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்களை Read the rest of this entry »

Written by lankamuslim

March 24, 2012 at 8:54 pm

மோடிக்கு மகுடம் சூட்ட முனைகிறதா அமெரிக்க ஊடகம் ?

leave a comment »

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டைம் பத்திகை மார்ச் 16ஆம் திகதி வெளியிட்ட  அதன்இதழின்   முதற்பக்கத்தில் குஜராத் முதலவர்  நரேந்திர மோடியின் படத்தை  வெளியிட்டுள்ளது. மோடி 2002 ஆண்டு பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் படுகொலைக்கு பிரதான காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவன் என்பது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

Written by lankamuslim

March 18, 2012 at 1:56 pm

பெல்ஜியம் தலைநகர் மஸ்ஜித் மீது தாக்குதல் இமாம் வபாத்

with one comment

பெல்ஜியம் தலைநகர் பிரசல்சிலுள்ள மஸ்ஜித் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மஸ்ஜித் இமாம் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் காயமடைந்தார்.இந்த பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை மஸ்ஜித் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

March 13, 2012 at 10:45 pm

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை தாக்குதலில் காஸாவில் 18 பேர் பலி

leave a comment »

OurUmmah: கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை மேற்கொண்டுவரும் காஸாமீதான கொலைவெறித் தாக்குதல்களில் இதுவரை 18 பலஸ்தீன் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் 12 வயதுக் குழந்தையும் அடங்கும். காஸாமீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்விமானத் தாக்குதல்கள் செல் தாக்குதல்கள் விரிவாக

Written by lankamuslim

March 12, 2012 at 11:31 am

அமெரிக்க சிப்பாயின் கொலைவெறியாட்டம் 16 பேர் படுகொலை

leave a comment »

OurUmmah: ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள அமெரிக்க சிப்பாய் ஒருவன் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து கொலை வெறியாட்டம் நடத்தியதில் சிறுவர் ,சிறுமியர் ,பெண்கள் வயோதிபர்கள் அடங்கலாக 16 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த கொலை வெறியாட்டத்தில் ஐந்து பேர் படு காயமடைந்துள்ளர்.விரிவாக…

Written by lankamuslim

March 11, 2012 at 10:00 pm

ஈரானிடம் இஸ்ரேல் வாங்கிக்கட்டப் போகும் நேரம் நெருங்குவதாக தகவல்

leave a comment »

OurUmmah:அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைப்பு- American Israel Public Affairs Committee (AIPAC) யின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நெதன்யாஹூ ஈரான் அணுவாயுதத்தை தயாரிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும், நாங்கள் அதிகம் காத்திருந்து விட்டோம் இராஜதந்திரம் செயல்படும் என்று காத்திருந்தோம் , பொருளாதார தடை செயல்படும் என்று காத்திருந்தோம் ஆனால் இனியும் எம்மவர் காத்திருக்க முடியாது விரிவாக…

Written by lankamuslim

March 7, 2012 at 11:25 am

ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்கா ,மற்றும் இஸ்ரேல்

with one comment

துருக்கி மற்றும் இந்தியா, சீனா நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவைக் குறைத்துக் கொள்ளும்படி மிகவும் அழுத்தமாக அமெரிக்கா கோரியுள்ளதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் சபையில்  கிளின்டன் பேசிய ஹிலாரி துருக்கி மற்றும் இந்தியா, சீனா   நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவைக் குறைக்க வேண்டும் என, அமெரிக்கா அழுத்தமாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.  Read the rest of this entry »

Written by lankamuslim

February 29, 2012 at 9:20 pm

ஷியா முஸ்லிம்கள் மீது மற்றுமொரு சியோனிசத் தாக்குதல்

leave a comment »

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் 18 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் ,வாகனத் தொடரணியாகச் சென்ற நான்கு பஸ்களை , இராணுவச் சீருடை அணிந்த துப்பாக்கித்தாரிகள் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்திய போதே இவர்கள் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில்  பயணம் செய்து கொண்டிருந்தவர்களின் அடையாள ஆவணங்களை சோதித்த பிறகு, அந்த ஆயுததாரிகள் ஷியா முஸ்லிம்களை தனிமைப்படுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர் Read the rest of this entry »

Written by lankamuslim

February 29, 2012 at 10:04 am

29 பேர் உயிரிழப்புடன் தொடரும் ஆப்கான் மக்களின் ஆர்பாட்டம்

with 2 comments

ஆப்கானிஸ்தானி ஐந்தாவது நாளாக இடம்பெற்றுவரும் அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இது வரை 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் 34 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிகிழமை மட்டும் 11 பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வபாத்தாகியுள்ளனர்.Video Read the rest of this entry »

Written by lankamuslim

February 25, 2012 at 5:07 pm

7000 உயிரிழப்புடன் தொடரும் சிரியா மக்கள் போராட்டம்

leave a comment »

சிரியா சர்வாதிகாரி ஆஸாதிக்கும் அவரின் கட்சியான பாஸ் கட்சிக்கும் எதிரான மக்கள் ஆர்பாட்டங்கள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்துள்ளது. கடந்த வருடன் மார்ச் மாதம் தொடங்கிய மக்கள் ஆர்ப்பாட்டம் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வருகின்றது. இதுவை 7000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மக்கள் ஆர்பாட்டங்களை பஷர் அல் ஆஸாத் நிர்வாகம் Read the rest of this entry »

Written by lankamuslim

February 25, 2012 at 3:46 pm

ஒபாமாவின் மன்னிப்பு கோரல் போதுமானதா ?

leave a comment »

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத் தளத்தில் அல் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

February 24, 2012 at 12:11 am

அல் குர்ஆன் பிரதிகளை எரித்த அமெரிக்க படைக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இன்று ஏழுபேர் வபாத்

leave a comment »

ஆப்கானிஸ்தானி இன்று இடம்பெற்ற அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது ஆப்கான் கர்சாய் படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஏழு பேர் வபாத்தாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 6:55 pm

பிரபல ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் கொலை

leave a comment »

மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது நடந்த ஷெல் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.Video Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 6:35 pm

யெமனுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு அப்துல்லாஹ் ஸாலிஹிக்கு முடிவு

leave a comment »

OurUmmah: நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது. இடம்பெற்ற இத்தேர்தலில் போட்டியிடும் ஒரே வேட்பாளரான உப ஜனாதிபதி அப்துர் ரப் மன்ஸூர் ஹாதி மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்று உத்தியோகபூர்மாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.  உத்தியோகபூர் முடிவு வெளியாக சில நாட்கள் ஆகும் என்று யெமன் செய்திகள் தெரிவித்துள்ளது.   விரிவாக …

Written by lankamuslim

February 22, 2012 at 10:27 am

அத்னானை விடுவிக்க ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இணக்கம் !!

leave a comment »

OurUmmah: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமில் -administrative detention-விசாரணை இல்லாமல் சிறையில் வதைக்கப்பட்டு வந்த பலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார். ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறப்போகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் Special Rapporteur on the situation of human rights in the Palestinian territories occupied since 1967.விரிவாக….

Written by lankamuslim

February 22, 2012 at 9:00 am

ஈரானை இப்போது தாக்கவேண்டாமாம் இஸ்ரேலை கோரும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன்

leave a comment »

மேற்கு மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் மோதும் நிலை அதிகரித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது . ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும், மேற்கும் களமிறங்கியுள்ள இந்த நிலையில் ஈரான் இரண்டு போர்க் கப்பல்களை  சுவஸ் கால்வாயின்-Suez Canal-  ஊடாக  சிரியா தார்தூஸ் துறைமுகத்திற்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் ஈரான் தானும் எதற்கும் தயார் என்று தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

February 20, 2012 at 7:29 pm

வடகிழக்குத் தமிழரும் முஸ்லிம்களும் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்

with one comment

எம்.ஐ.எம்.முஹிதீன்
கடந்த ஜனவரி மாதம் 21 திகதி நாம்  பதிவு செய்திருந்த இந்த ஆக்கத்தை மீண்டும் இன்று பதிவு செய்கிறோம்: *கிழக்கு மாகாணம் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண் டுமானால் இலங்கை-இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக்கூறப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும்.

Written by lankamuslim

February 19, 2012 at 11:43 am

இஸ்ரேலிய வதைமுகாமில் உண்ணாவிரதம் : நாட்கள் 63

leave a comment »

ஏ. அப்துல்லாஹ் : இஸ்ரேல் வதைமுகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலஸ்தீன் விடுதலைப் போராளி அத்னான் என்பவருக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் மேற்கு கரையிலும், ராமல்லாவிலும் பேரணிகள் நடத்தியுள்ளனர். விசாரணை இல்லாமல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வதைமுகாமில் அடைக்கப்பட்டுள்ள 33 வயதான காதர் அத்னான் 63 தினங்களாக வதை முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். Read the rest of this entry »

Written by lankamuslim

February 19, 2012 at 11:26 am

இந்திய முஸ்லிம்கள 10 வீத தனி இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

leave a comment »

இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் 14.02.12 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Video Read the rest of this entry »

Written by lankamuslim

February 15, 2012 at 3:34 pm

இஸ்ரேலிய தூதரக வாகன குண்டு வெடிப்பு : ஊடக பரப்புரைகள் ஆரம்பம்

with 3 comments

இஸ்ரேல், அமெரிக்கா அதன் நேசநாடுகள் ஈரானை குறிவைத்து அரசியல் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டு வரும் வேளையில், இந்தியாவிலும், ஜோர்ஜியாவிலும், இஸ்ரேலிய தூதரக வாகனங்களை இலக்கு வைத்து இரு குண்டுத் தாக்குதல் முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேற்குலக ஊடகங்களில் ஈரானை தெளிவான பயங்கரவாதிதான் என்று சித்தரிக்கும் பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

February 13, 2012 at 11:42 pm

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கைது செய்து இழுத்து செல்லப்பட்டார்

leave a comment »

இணைப்பு-2: மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டதை தொடர்ந்து ஒரு வீதி  ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஒரு வர்த்தக நிலையத்தில் மறைந்திருந்த அவரும் அவரின் ஆதரவாளர்களும் இராணுவத்தால் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். Video Read the rest of this entry »

Written by lankamuslim

February 9, 2012 at 8:06 pm

சட்டப் பேரவையில் செல்போனில் ஆபாசப் படம் பார்த்த அமைச்சர்கள் ராஜினாமா

leave a comment »

கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வருக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது அமைச்சர்கள் லக்ஷ்மன் சவதி, சிசி பாட்டீல், கிருஷ்ண பாலேமர் ஆகியோர் தங்களது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டு இருந்ததை சட்டபேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிறுவனங்கள் வெளிப்படுத்தின. Read the rest of this entry »

Written by lankamuslim

February 8, 2012 at 11:26 am

மாலைத்தீவில் துணை ஜனாதிபதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்பு

leave a comment »

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் பதவி விலகியதை அடுத்து மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

February 7, 2012 at 10:13 pm

ஈரானை இஸ்ரேல் தாக்கும் சாத்தியம் ?

leave a comment »

ஈரானைத் தாக்க முயற்சிக்கவோ அல்லது அதன் அணுத்திட்டத்தி்ற்கு எதிராக தடைகளை விதிக்கவோ கூடாது என்று ஈரானின் அதியுயர் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தம்மை அச்சுறுத்துவதோ அல்லது தம்மீது தாக்குதல் நடத்துவதோ அமெரிக்காவிற்கு எதிரான அச்சுறுத்தலாகவே வந்துமுடியும் என்றும் ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அல் கமேய்னி கூறியுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

February 5, 2012 at 4:00 am

குவைத் பாராளுமன்றத்தை இஸ்லாமிய அரசியல் கட்சி கைப்பற்றியுள்ளது

leave a comment »

OurUmmah: குவைத்தில் நேற்று இடம்பற்ற பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது , கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட மக்கள் ஆர்பாட்டத்தை தொடர்ந்து அதன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற்றது . இதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது மொத்தமாக 50 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 34 ஆசனங்களை இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி விரிவாக…

Written by lankamuslim

February 3, 2012 at 11:19 pm

ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூனின் துரோகம்

leave a comment »

OurUmmah: அமெரிக்காவின் கைப்பாவை என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன், காஸா பகுதிக்கு சென்றபோதும் அங்கு இஸ்ரேலிய வதை முகாம்களில் வைக்கபட்டுள்ள கைதிகளின் உறவினர்களையும் ,இஸ்ரேலிய சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களையும் சந்திக்க மறுத்துள்ளதுடன் அந்த வதையுறும் மக்களின் எந்த பிரதிநிதியையும் தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதியையும் மறுத்துள்ளார். விரிவாக …

Written by lankamuslim

February 3, 2012 at 11:16 pm

எகி்ப்து மக்கள் எழுச்சி ஏற்படுத்தாத இழப்பை விளையாட்டு ஏற்படுத்தியுள்ளது !!

leave a comment »

OurUmmah: எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாள் துக்க தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் காரணமாக   74 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் விரிவாக…

Written by lankamuslim

February 2, 2012 at 9:13 pm

சில நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி விரைவில் நிறுத்தப்படும்: ஈரான்

leave a comment »

“சில நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி விரைவில் நிறுத்தப்படும்’ என, ஈரான் எண்ணெய் வள அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் எண்ணெய் வள அமைச்சர் ருஸ்தும் கசொமி அளித்த பேட்டியில்,”சில நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் எண்ணெய் நிறுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவை எந்த நாடுகள் என அவர் குறிப்பிடவில்லை. கடந்த 23 ஆம் திகதி ஐரோப்பிய யூனியன், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது Read the rest of this entry »

Written by lankamuslim

January 30, 2012 at 11:15 pm

அமீர்கான்: சிறையில் சீரழிக்கப்பட்ட 14 ஆண்டுகால வாழ்க்கை

leave a comment »

இந்திய முஸ்லிம் வாலிபன் அமீர்கான்: எந்த குற்றமும் செய்யாமல் பள்ளிப் பருவத்தில்(19-வயதில்) கைது. 14 ஆண்டுகள் தனிமைச் சிறை வாழ்வு. 20 ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள். தளர்வாதத்தால் சோர்ந்து போன தாய். மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து மனம் உடைந்து மாரடைப்பால் மரணமடைந்த தந்தை.-இந்தியாவில் ஓர் அப்பாவி Read the rest of this entry »

Written by lankamuslim

January 30, 2012 at 8:00 am

உஸாமாவை காட்டி கொடுத்தவர் மீது தேசதுரோக குற்றமும் அமெரிக்காவின் கவலையும்

leave a comment »

OurUmmah: அஷ்-ஷஹீத் உஸாமா பின்லாதின் இரகசிய இருப்பிடம் குறித்து அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கு தகவல் வழங்கியதற்காக பாகிஸ்தான் நிர்வாகம் கைது செய்துள்ள மருத்துவரான ஷகீல் அப்ரிடி கைது செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கவலை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகர் மீது அத்துமீறி நுழைந்த அமெரிக்க சிப்பாயிகள்  விரிவாக….

Written by lankamuslim

January 28, 2012 at 10:30 pm

ஈரான் மீது தடை விதித்தால் மேற்குலக நாடுகளுக்குத்தான் பாதிப்பு: ஐ.எம்.எப்

leave a comment »

ஈரான் மீது தடை விதித்தால் மேற்குலக நாடுகளுக்குதான் பாதிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு சக்தி திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் மேற்குலக நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க திட்டமிடுகின்றன. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் Read the rest of this entry »

Written by lankamuslim

January 28, 2012 at 9:18 am

மக்கள் எழுச்சியின் பின்னர் முதல் முறையாக எகிப்தின் புதிய பாராளுமன்றம் பதவியேற்பு

leave a comment »

இணைப்பு-2 எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபை நேற்று பதவி ஏற்றுள்ளது. இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பெற்றுள்ள எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான உத்தியோகபூர்வமாக  நேற்று பதவியேற்றுள்ளது. இது எகிப்திலும் ஏணைய நாடுகளிலும்    மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபை மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 498 உறுப்பினர்களையும் இராணுவ நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 உறுப்பினர்களையும் கொண்ட 508 மொத்த உறுப்பினர்களுடன் Video Read the rest of this entry »

Written by lankamuslim

January 24, 2012 at 8:10 am

தடை தாண்டுமா ஈரான்

leave a comment »

மேற்கு நாடுகள் ஈரான் மீது ”அமெரிக்காவின் வழிகாட்டலிலும் இஸ்ரேலின் தூண்டளினாலும்” மற்றுமொரு பொருளாதார தடையை விதித்துள்ளது , அந்த பொருளாதர தடை அறிவிப்பில்  மேற்கு நாடுகள் ஈரானிடமிருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது . ஆனால் ஈரான் பொருளாதார தன்னிறைவை கொண்ட நாடு அதனால் ஈரானை இந்த தடை பாதிக்க போவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அமெரிக்காவும் , இஸ்ரேலும் ஐரோப்பிய நாடுகளில் Read the rest of this entry »

Written by lankamuslim

January 24, 2012 at 8:07 am

இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா ?

leave a comment »

OurUmmah: ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்றதாக தெரிவித்து சில உயர் இராணுவ அதிகாரிகளை ஷேக் ஹஸீனா அரசு கைது செய்துள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் தீவிர சிந்தனையை கொண்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்துள்ளார். இதனை எதிர் தரப்பினர் ஆளும் தரப்பின் நாடகம் என்று தெரிவித்துள்ளனர். விரிவாக….

Written by lankamuslim

January 21, 2012 at 10:59 am

பாகிஸ்தான் அரச மற்றும் இராணுவ முறுகல் நிலை

leave a comment »

பாகிதான் பாதுகாப்புச் செயலரின் பதவி நீக்கம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாகிதான் இராணுவம் கூறியுள்ளது என்று  சர்வதேச செய்திகள் தெரிவிக்கிறது.  இருந்தாலும் நாட்டில் இராணுவப் புரட்சியின் மூலம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 12, 2012 at 11:18 am

ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை

with one comment

OurUmmah: ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணு விஞ்ஞானிகள் படுகொலை வரிசையில் மற்றுமொரு அணுத்துறை விஞ்ஞானி கார் குண்டின் மூலம் கொல்லப்பட்டுள்ளார். ஈரான் நதான்ஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள யுரேனிய செறிவாக்கல் மையத்தில் பணியாற்றிய அணு விஞ்ஞானி முஸ்தபா அஹ்மதி ரோஷன் இன்று படுகொலைச் செய்யப்பட்துள்ளார். விரிவாக….

Written by lankamuslim

January 11, 2012 at 11:01 pm

சல்மான் ருஷ்டிக்கு தடை இல்லை: இந்திய மத்திய அரசு

leave a comment »

சர்ச்சைக்குரிய வியாபர எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் இந்திய வருகையை தடைச்செய்ய இயலாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.வியாபர எழுத்தாளர் என்று பெயர் பெற்ற சல்மான் ருஷ்டியிடம் வம்சாவழியை சார்ந்தவர்களுக்கு அளிக்கும் பெர்ஸன் ஒப் இந்தியன் அனுமதி இருப்பதால் இத்தகைய அனுமதி அட்டையை வைத்திருப்பவர்களுக்கு Read the rest of this entry »

Written by lankamuslim

January 11, 2012 at 10:21 am

எகிப்தில் மூன்றாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி

leave a comment »

OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் இஹ்வானுல் முஸ்லிமீன் மற்றும் அன் நூர் கட்சி ஆகியன 62.2.வீதமான வாக்குகளை பெற்றுள்ளது என்று எகிப்தின்  தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது . இது தவிர மற்றுமொரு இஸ்லாமிய கட்சியான அல் வசத் என்ற கட்சி 2 வீதமான வாக்குகளை கைப்பற்றியுள்ளது.விரிவாக…

Written by lankamuslim

January 9, 2012 at 9:00 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers