Lankamuslim.org

One World One Ummah

Archive for the ‘பலஸ்தீன்’ Category

காஸா எல்லையை எகிப்து நிரந்தரமாக திறக்கின்றது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.

எகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது விரிவாக

Written by lankamuslim

May 26, 2011 at 8:31 pm

முஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

காஸா இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவ முற்றுகைக்குள் 1.6 மில்லியன் பாலஸ்தீனிய காஸா மக்கள் போதுமான எந்த உணவு , மருந்து , மருத்துவம் எதுவும் இன்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில் பெண்கள் , சிறுவர் , சிறுமியர் ,வயோதிபர் என்ற பாகுபாடுகள் இன்றி வதைக்க படுகின்றனர் .  வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான , மின்சாரம், தண்ணீர், உணவு, மருந்து, சமையல் வாயு, எதுவுமே காஸா வுக்குள் இஸ்ரேலியஆக்கிரமிப்பு படையால் அனுமதிக்க படுவதில்லை இரண்டு வருடங்களுக்கு முன்னர் S.S. Free GAZA என்ற கப்பல்கள் 2008 ஆம் ஆண்டில் காஸாவை அடைந்தது அதன் பின்னர் எந்த நிவாரண உதவி கப்பல்களும் அனுமதிக்க படவில்லை மருத்துவமனைகளில் சிகிச்சை இன்றி குழந்தைகளின் இறப்புவீதம் மிக மேசமாக அதிகரித்துள்ளது. நான்கு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வது என்பது மிகவும் கடினமாக மாறிவருகின்றது காஸா  வில் 70 வீதமானவர்கள் மிகவும் மோசமான வறுமை நிலையில் போதுமான உணவு இன்றி உள்ளனர் முஸ்லிம் எகிப்து காஸாவின் பக்கமுள்ள தனது எல்லையை மூடி காஸா முஸ்லிம்களை பட்னி போட்டு கொலை செய்ய இஸ்ரேலுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றது எகிப்து ஜனாதிபதி ஹு சனி முபாரக் ஒரு முஸ்லிம் உம்மாவின் துரோகியாக தன்னை அடையாளபடுத்தினார் காஸா மக்கள் வேறு வழி இன்றி காஸா வுக்கும் எகிப்துக்கும் இடையில் நிலக் கீழ் சுரங்கம் Video விரிவாக பார்க்க…

Written by lankamuslim

June 10, 2010 at 3:33 pm

பலஸ்தீன மக்கள் அகதிகளாக்கப்பட்ட தினம் :கலதாரியில்

leave a comment »

இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவராலயம் அல் நகபா என்று அழைக்கபடும்  பலஸ்தீன  மக்கள் இஸ்ரேல பயங்கரவாதத்தால்  அகதிகளாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று  மாலை புகைப்படக் கண்காட்சி ஒன்றை   ஏற்பாடு செய்திருந்தது. புகைப்படக் கண்காட்சியை இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் டாக்டர் அன்வர் அல் அகார் ஆரம்பித்து வைத்து உரையாறியுள்ளார்  அங்கு பலஸ்தீன மக்களில் அவலங்களை சித்தரிக்கும் படங்களும்  , பலஸ்தீன மக்களின் பூர்விகத்தை  எடுத்து காட்டும் சான்றுகளும் காட்சிக்கு வைக்க பட்டிருந்தது , கடந்த புதன் கிழமை – 2010 மே மாதம் 12ம் திகதி  இலங்கைக்கான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தூதுவர் ஏற்பாடு செய்த  விழா ஒன்றுக்காக  விருந்துபசாரம் ஒன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்படிருந்து  இந்த நிகழ்வை ஆட்சேபித்து ஆர்பாட்டம் ஒன்று  கோல் பேஸ் ஹோட்டலில் முன்பாக நடைபெற்றது

பயங்கரவாத நாடான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகாரசபை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள பஸ்தான் காலனியை முற்றுமுழுதாக நிர்மூலமாக்குவதற்கான திட்டங்களில் முழுமூச்சாக இறங்கியுள்ளது’ என்று ஹமாஸ் பேச்சாளரான பவ்ஸி பர்ஹூம் குற்றஞ்சாட்டியுள்ளார் Read the rest of this entry »

Written by lankamuslim

May 21, 2010 at 11:21 pm

இன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க படுகின்றது

leave a comment »

Palestinian prisoners in Israeli vehicle before their release

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஷ்டிக்க உலகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்களை ,பலஸ்தீன பொது அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தது  தமது அறிக்கையில் 34 வது பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் முக்கியமான கால கட்டத்தில் வர இருப்பதாகவும் இந்த தினத்தை இஸ்ரேல சிறைகளில் வதைக்க படும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் பற்றிய விழிபுனர்வுகான வாரமாக கருதி வாரம் முழுவதும் கைதிகள் பற்றிய விழிபுணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யுமாறும் ஏப்ரல் மாதம் 17 திகதி அன்று பலஸ்தீன் அரசியல் கைதிகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக பட்டங்களை ஏற்றுமாறும் கூறியிருந்தது

இஸ்ரேலிய சிறைகளில் 7300 கும் அதிகமான் அரசியல் கைதிகள் வதைக்க படுகின்றார்கள் இவர்களில் 33 பேர் பெண்கள் , 300 பேர் சிறுவர்கள் , இவர்களில் 400 பேர் ஜெருசலத்தில் இருந்தும் , 745 பேர் காஸ பகுதியில் இருந்தும் , 6155 பேர் மேற்கு கறை பிரதேசத்தில் இருந்தும் இஸ்ரேலிய வதை முகாம்களில்   வதையுருகின்றனர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடனேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – இன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க பட்டுவருகின்றது விரிவாக பார்க்க…

Written by lankamuslim

April 17, 2010 at 9:52 pm

இன்று பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் இரு வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்

leave a comment »

கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு பாலஸ்தீன மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான ஜெரூசலம், மேற்கு கரை போன்ற பகுதிகளில் அந்த மக்களுக்கும், அவர்களின் புனிதத் தலங்களுக்கும் எதிராக மிக மோசமான பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருகின்றது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய அராஜகங்கள் அல் குத்ஸ் மஸ்ஜித் பகுதியிலும் அதிகரித்துள்ளது இஸ்ரேலிய அராஜகங்கள்,எதிர்த்து மக்கள் மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. மேற்கு கரை பகுதியில் இன்று இடம் பெற்ற இஸ்ரேலிய அராஜக துப்பாக்கி தாக்குதலில் இரு பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் விரிவாக பார்க்க…

Written by lankamuslim

March 21, 2010 at 8:45 pm

இஸ்ரேலுக்கு துருக்கியின் கடும் எச்சரிக்கை

leave a comment »

http://merryabla64.files.wordpress.com/2009/01/erdogan-davos-photo-afp.jpg?w=155&h=103

துருக்கியப் பிரதமர் ரெசெப் தையிப் அர்டோகன் Recep Tayyip Erdogan, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார் இஸ்ரேல், காஸாவில் செய்யும் பொதுமக்களை படுகொலை, பொஸ்பரஸ் குண்டு தாக்குதல்கள் என்பன வற்றை அங்காரா அமைதியாக பார்த்துகொண்டு இருக்காது என எச்சரித்துள்ளார் மேலும் அவரின் எச்சரிகையில் காஸாவில் உட்கட்டமைப்பை  நிர்மூலமாக்கி, அதனை ஒரு திறந்த சிறைச்சாலையாக மாற்றிக் கொண்டிருப்பதை அங்காரா கண்களை மூடி அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை’ என்று எச்சரித்துள்ளார் . விரிவாக பார்க்க

Written by lankamuslim

February 2, 2010 at 6:34 pm

பலஸ்தீன் அகதிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது

leave a comment »

அனைத்துக் கனேடியர்கள் சார்பிலும்  மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன் ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது.

கடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கனடாவின் ஹார்பர் அரசாங்கம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவித்துள்ளது.

1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட UNRWA உலகெங்கிலுமுள்ள பலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் மிகப் பிரதானமான அமைப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. ஹார்பர் அரசின் இந்தத் தீர்மானம், பலஸ்தீன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பில் பாரம்பரியமாக மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கிவரும் கனடாவின் நடுநிலைமைப் போக்கினைத் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது. விரிவாக பார்க்க..

Written by lankamuslim

January 31, 2010 at 6:21 pm

ஹமாஸ் உயர் பீட உறுப்பினர் இஸ்ரேல் உளவு ஏஜண்டுகளால் துபாயில் படுகொலை

leave a comment »

http://poralikall.files.wordpress.com/2010/01/mahood3.jpg?w=120&h=128பலஸ்தீன் விடுதலை  போராட்டத்தின் முக்கிய போராளிகளில்  ஒருவரும் ஹமாஸ்  இராணுவ கட்டமைப்பான  இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் உயர் நிலை உறுப்புரிமை பெற்றவருமான   மஹ்மூத் அப்துறவூப் அல் மப்ஹூஹ் -Mahmoud Abdul Raouf al-Mabhouh- துபாயி  நாட்டில் இவர்  தலையில் நவீன கருவி ஒன்றினால் மின்சாரம் செலுத்தபட்டு கொலை செய்யபட்டார்       இந்த  கொலையின்  பின்னணியில் இஸ்ரேல் உளவு பிரிவான  மொசாட்-Mossad-இருபதாக  ஹமாஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் அடக்கு முறைக்கு எதிரான    முதல் இன்திபாழாவின் போதும்  இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தை  சேர்ந்த இருவரை கைப்பற்றிய நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்காற்றியுள்ளார் இவர் 1989 முதல் சிரியாவில் வாழ்ந்து வந்தார். விரிவாக பார்க்க..

Written by lankamuslim

January 30, 2010 at 11:40 pm

நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் இருளில் மூழ்கும் காஸா

leave a comment »

மின்சாரம் துண்டிக்கப்பட்டால் இவர்களை போன்ற நோயாளிச் சிறார்களின் கதி?

ஐரோப்பிய யூனியன்  எரிபொருளுக்கான  தனது நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளதால் இதுவரை காஸாவில் இயங்கிவந்த ஒரேயொரு மின்னுற்பத்தி நிலையமும் எதிர்வரும் வியாழக்கிழமை (28.01.2010) முதல் இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளதென பலஸ்தீன் எரிசக்தி அதிகாரசபையின் பிரதித் தலைவர் கினான் உபைத் தெரிவித்துள்ளார்.

அவர் பலஸ்தீன் ஊடகமையத்தினூடே வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த இக்கட்டான நிலையிலிருந்து காஸா மக்களைப் பாதுகாக்குமுகமாகத் துரித நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு அரபுநாடுகளையும் உலகெங்கிலுமுள்ள சுயாதீன அமைப்புக்களையும் நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். விரிவாக பார்க்க….

Written by lankamuslim

January 26, 2010 at 11:40 pm

அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் 55,000 பலஸ்தீனர்களும் இஸ்ரேலுக்குக் கூஜாதூக்கும் எகிப்தும்

with one comment

காஸா எல்லையை மறித்து எகிப்து எழுப்பிவரும் மாபெரும் இரும்புச் சுவர்

ஆக்கிரமிக்கப்பட்ட   ஜெரூசல நகருக்குக் கிழக்குப் பகுதியைச் சுற்றியுள்ள பிராந்தியம் இஸ்ரேலிய பிரிவினைச் சுவரினால் துண்டாடப்பட்டுள்ளமையால், அப்பிரதேசங்களில் வசித்துவரும் 55,000 பலஸ்தீனர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அடிப்படை வசதிகள் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று சமய விவகாரங்களுக்கான பலஸ்தீன் அமைச்சர் கலாநிதி தாலிப் அபூ ஷஅர் தெரிவித்துள்ளார்.

கலாநிதி அபூ ஷஅர் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில், மேற்படி பிரதேசங்களில் வாழ்ந்துவரும் பலஸ்தீன் மக்கள் வேறுவழியின்றித் தாமாகவே தமது வீடுகளையும் நிலங்களையும் கைவிட்டுச் செல்வதற்கு நிர்ப்பந்திப்பதே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் ‘பலஸ்தீனரைத் தனிமைப்படுத்தும் கொள்கை’யின் அடிப்படை நோக்கமாகும் என்று விபரித்துள்ளார். விரிவாகக் பார்க்க..

Written by lankamuslim

January 24, 2010 at 2:16 pm

யூதக் குடியேற்றவாசிகளின் அடாவடித்தனத்திக்கும் ஆக்கிரமிப்புப் படையின் ..

leave a comment »

அடாவடித்தனம் புரியும் யூதக் குடியேற்றவாசிகள்

யூதக் குடியேற்றவாசிகளின் அடாவடித்தனத்திக்கும் ஆக்கிரமிப்புப் படையின் அட்டூழியங்களுக்கும் நடுவில் தவிக்கும் பலஸ்தீனர்கள்

கல்கிலியா – கடந்த வியாழக்கிழமை (14.01.2010) அதிகாலை கல்கிலியா பிரதேசத்தின் இமாதின் கிராமத்தினுள்  அத்துமீறிப் பிரவேசித்த ஆயுதந்தாங்கிய யூதக் குடியேற்றவாசிகளின் அட்டகாச நடவடிக்கைகளால் முழுக்கிராமமும் அல்லோலகல்லோலமடைந்தது. இதே கிராமத்தினுள் கடந்த இரு வாரகாலமாக இவர்களின் அட்டகாசம் கட்டுமீறிப்போவதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கிராம மக்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த சமயத்தில் அயலில் உள்ள யூதக் குடியேற்றத்திலிருந்து திடீரென்று மேற்படிக் கிராமத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளான யூதக்குடியேற்றவாசிகள் தமது அட்டகாசங்களை அரங்கேற்றிவிட்டுப் பின்வாங்கிச் செல்கையில், மூன்று கார்களையும் ஒரு டிரக்டர் வண்டியையும் தீவைத்துக் கொளுத்தினர் என சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.விரிவாக பார்க்க …

Written by lankamuslim

January 17, 2010 at 2:33 pm

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் எதேச்சதிகாரம்: அநாதரவுநிலையில் 50,000 பலஸ்தீனர்கள்

leave a comment »

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் –  மேற்குக் கரையிலிருந்து கிழக்கு ஜெரூசலத்தைத் துண்டாடும் பிரிவினைச் சுவருக்கு அப்பால் வசிக்கின்ற அனைத்துப் பலஸ்தீனர்களும் இனிமேல் ஜெரூசலவாசிகளாகக் கருதப்படமாட்டார்கள் என்ற தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை முடிவுசெய்துள்ளது.

மேற்படி பிரதேசத்தில் வசித்துவரும் மக்கள் ஜெரூசல நகரவாசிகளுக்குரிய நீலநிற அடையாள அட்டைகளைக் கொண்டிருந்த போதிலும், இனிமேல் அவர்கள் அந்நகரவாசிகளாகக் கருதப்பட மாட்டார்கள் என இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஜெரூசல நகரசபையின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய நாளேடு ஹாரெட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.விரிவாக பார்க்க

Written by lankamuslim

January 15, 2010 at 11:24 pm

எகிப்தின் அடாவடித்தனத்தை எதிர்த்து ஐரோப்பாவிலும் துருக்கியிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

leave a comment »

அமெரிக்க பொம்மை ஹுஸ்னி முபாரக்

கடந்த செவ்வாய்க்கிழமை (05.01.2010) இரவு அல் அரிஷில் இருந்த லைஃப் லைன் -3 சர்வதேச நிவாரண உதவிக்குழு உறுப்பினர்கள்மீது எகிப்தியப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடாவடித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்குமுகமாக ஐரோப்பியத் தலைநகரங்களிலுள்ள எகிப்தியத் தூதுவராலயங்கள் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பாவிலுள்ள பலஸ்தீன் ஆதரவாளர் கூட்டணி அழைப்புவிடுத்துள்ளது. 14 ஐரோப்பிய அமைப்புக்களை உள்ளடக்கிய மேற்படி கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பாவின் பல பாகங்களிலும் தாம் மேற்கொள்ளவிருக்கும் எதிர்ப்புப் பேரணிகள் யாவும் ஒரே நேரத்தில் இடம்பெறும் என்றும் விரிவாக பார்க்க…

Written by lankamuslim

January 8, 2010 at 10:59 am

2009 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை 1,594 பலஸ்தீனர்களைப் படுகொலை செய்துள்ளது

leave a comment »

http://www.freepalastine.com/wp-content/uploads/2009/12/Gaza-children1.jpg

ரமல்லா – 2009 ஆம்  ஆண்டு 473 குழந்தைகள், 126 பெண்கள் உட்பட 1594 பலஸ்தீனர்களைகாஸா மீதான இஸ்ரேலிய யுத்தத்தில் உயிருடன் எரிந்துபோன பலஸ்தீன் குழந்தைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கொன்று குவித்துள்ளது என Tadamun எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை (30.12.2009) மேற்படி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 1460 பேர் காஸா மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும், ஏனைய 134 பேரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்குக் கரை, காஸா பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதும் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்துவரும் அரபு- இஸ்ரேலிய மோதல் வரலாற்றில் கடந்த ஜனவரி மாதம் மிக மோசமான படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள மாதமாகும். அந்த மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 30 பேர் என்ற வீதத்தில் 1076 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. விரிவாக பார்க்க…

Written by lankamuslim

January 3, 2010 at 3:40 pm

ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள்…

leave a comment »

2008 டிசம்பர் மாதத்தின் அந்தக் கடைசி நாட்கள் உங்கள் ஞாபகத் தை மெல்லத் தட்டி திறந்து பாருங்கள். உலகின் மனசாட்சி செத்துப்போய்விட்ட ஒரு தருணத்தில் எதேச்சதிகார ஆதிக்கச் சக்திகளின் கொடூரமான மறுபக்கத்தைத் தோலுரித்துக் காட்டிய அந்தப் இருபத்தி இரண்டு நாட்கள்… இன்றுவரை கடலெனப் பெருகி ஓடும் எம் சொந்தங்களின் ரத்தம் இந்தப் புகைப்படங்களை நினைவிருக்கிறதா? இவை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவோ ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காகவோ பற்பல வர்ணங்களில் வெடித்துச் சிதறும் வானவெடிகளா? இல்லை. விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 29, 2009 at 8:41 pm

இஸ்ரேல் பயங்கரவாத ஆக்கிரமிப்பு இராணுவ தாக்குதல் ஒரு வருட பூர்த்தி

leave a comment »

பலஸ்தீன   காஸா பகுதி மீது இஸ்ரேல் பயங்கரவாதிகள் கண்முடித்தனமான, போர் விதிமுறைகளுக்கு எதிரான பயங்கர வாத ஆக்கிரமிப்பு  இராணுவத் தாக்குதல் நடத்தி.  ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி கொன்று குவித்து   கொல்லபட்டவர்களின்   உறுப்புகளை திருடி அமெரிக்காவுகும் ஐரோப்பிய நாடுகளுக்கு இலவசமாக விநியோகம்  செய்து     கொலை தாண்டவம் ஆடி  ஒரு வருடம்  பூர்த்தி அடைகின்றது தற்போதைய நிலையில், பாலஸ்தீன நிலப்பரப்புகளில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம்  தொடர்ந்து கடைபிடித்துவரும் கொலைகள் , உடல் உறுப்பு திருட்டு , மற்றும் பொருளாதார தடைகள் என்பன தொடர்கிறது அங்கே உடல் உறுப்பு திருட்டுகளை தான் செய்வதை வேறு வழி இல்லாமல் ஒத்து கொண்டுள்ளது     ஆனால் அதை பற்றி பெரிதாக கருதாத  ஐ.நா   பொது சுகாதார சேவைகள் அழிந்துபோகும் ஓர் அபாய நிலையை உருவாக்கியுள்ளதாக .மட்டும்  ஐ.நா மன்றத்தின்  கூறுகிறது  விரிவாக பார்க்க.

Written by lankamuslim

December 28, 2009 at 5:31 pm

ஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்

மத்திய-கிழக்கில் இஸ்ரேல் உருவாகுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, 1928ல் சோவியத் யூனியனில், ஸ்டாலினால் யூத சுயாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இன்று மறக்கப்பட்டு விட்ட, பலர் அறிந்திருக்காத, “பிரோபிஜான்” என்ற பெயரிடப்பட்ட சோவியத் யூதர்களின் தாயகம், இன்று வரை நிலைத்து நிற்கின்றது. 70 வருடங்களுக்கு முன்னர், ரஷ்யாவின் ஆசியப்பகுதியில், ஸ்டாலின் வழங்கிய சைபீரிய நிலத்தில், பல்லாயிரக்கணக்கான சோவியத் யூதர்கள் சென்று குடியேறினார்கள்.

பல வருட  உழைப்பின் பலனாக பிரோபஜான் நகரம் உருவாகியது. இன்று வரை யூதர்கள், தமது மொழி, கலாச்சார தனித்துவங்களை அந்தப் பிராந்தியத்தில் பேணி வருகின்றனர்.

அதனை இங்கே இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கும் போதே தெரியவரும்

விருந்தினர்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers