Lankamuslim.org

பாராளுமன்றத்தில் : பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவோர் அல்லாஹ்வினால் அழிக்கப்படுவர்

with 7 comments

hunais farookமுஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற பள்ளிவாசல்களை தாக்கி அழிக்கின்ற இனவாதிகளும் அவர்களின் பின்னால் இருந்து செயற்பட்டு வரும் அரசியல்வாதிகளும் இத்தகைய செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத்தவறுவோரும் அல்லாஹ்வினால் அழிக்கப்படுவர் என்பதை இந்த பாராளுமன்றத்தில் சாபமிட்டுக்கூறுகிறேன் என ஆளும் கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி.யான ஹுனைஸ் பாருக் இன்று  சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முன்னாள் எம்.பி.யான மொஹமட் மஹ்ரூப் மீதான அனுதாப பிரேணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹுனைஸ் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். அவ்வாறு செயற்பட்ட புலிகளுக்கு இறுதியில் என்ன நடந்தது? விடுதலைப்புலிகள் இருந்த இடமே தெரியாது அல்லாஹ் அழித்தான்.

விடுதலைப்புலிகள் போன்றதொரு நிலையில் இன்று தீவிரவாதிகளும் இனவாதிகளும் இணைந்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்கள் மீது அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களின் பின்னணியில் அரச தரப்பு அரசியல்வாதிகளே செயற்பட்டு வருகின்றனர்.

மாகாண அமைச்சர் ஒருவர் தான் மஹியங்கனைப் பள்ளிவாசல் மூடப்படுவதற்கு காரணமாகவும் இருந்தார். பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக இல்லை.

முஸ்லிம்கள் மீது கைவைத்து பள்ளிவாசல்களை தாக்கிய விடுதலைப்புலிகள் எப்படி அழிக்கப்பட்டனரோ அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் பள்ளிவாசல் மீதும் முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்துவோர் அவர்களின் பின்னணியில் இருந்து செயற்படும் அரசியல்வாதிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதோர் மற்றும் இத்தகைய இனவாத செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காதோர் என சகலரும் அல்லாஹ்வினால் அழிக்கப்படுவார்கள்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பவன் என்ற ரீதியில் நான் கூறியமை நடந்தே தீரும் என்று இந்த சபையில் சாபமிட்டுக் கூறுகிறேன். ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பு திறக்கும் போதும் ஐவேளை தொழுகையின் போதும் இதற்காக பிரார்த்திக்குமாறு கேட்கிறேன் என்றார்.-விடிவெள்ளி

Written by lankamuslim

July 26, 2013 at 10:31 pm

7 Responses

Subscribe to comments with RSS.

 1. முற்றிலும் உண்மை என்பதை நடைமுறை காட்டுகிறது தம்புள்ளை பள்ளி மீது தாக்குதல் நடாத்தி காவியுடையை திறந்து காட்டியவர் அண்மையில் தன்னைத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்மை அனைவரும் அறிந்தவையே

  Umar Farook

  July 27, 2013 at 1:45 am

 2. saafam ungalukkum serthu thaane hunai farook mp?( arasa tharappu ennum podhu neengalum adakkapaduhureerhal)

  sidddeekksss

  July 27, 2013 at 2:15 am

 3. அல்ஹம்துலில்லா ஒரு ஈமானுள்ள முஸ்லீம் என்பதை நிரூபித்து விட்டீர்கள் பயப்படாதீர்கள் அல்லா உங்களைப் பாதுகப்பன்.

  mohamed ALI

  July 27, 2013 at 4:42 am

 4. Every action has equal and opposite reaction.

  Attacking, insulting, lying, derogating on others without acceptable reasons are punishable offenses in Allah’s view. He will punish those in this world and in hereinafter. All will meet an end. King Pharaoh and his entire crowd had been destroyed and his body is preserved by Allah and can be seen in Cairo Museum.

  10:92 – This day shall We save thee in thy, that thou mayest be a Sign to those who come after thee! But verily, many among mankind are heedless of Our Signs.

  Holy Quran says, 33:57 – Those who annoy Allah and His Messenger – Allah has cursed them in this world and has prepared for them a humiliating punishment.

  33:58 – And those who annoy believing men and women undeservedly, bear a calumny and a glaring sin.

  nizamhm1944

  July 27, 2013 at 8:07 am

 5. H.FAROOK MP!
  “ANIYAAYAKKARAR MUN ANEETHIYAI EDUTHTHURAIPPATHU EEMANIN UYARTHARATHTHAI SAARNTHATHU”
  ALLAH UNGAL AAYULILUM, SELVATHTHILUM, AAROKKIYATHTHILUM, SAKEENATHTHILUM BARAKATH SEIVAANAAHA…..

  roshaen

  July 27, 2013 at 10:54 pm

 6. ஹுனைஸ் பாருக் நீ ஒரு முஸ்லிமிற்குதான் பிறந்தது என்று காட்டிவிட்டாய். அல்லாஹ்வுக்கு எல்லாப் புகழும் உன்போன்ற முஸ்லிம்கள் ஆயிரமாயிரம் எமது நாட்டில் பிறக்க அல்லாஹ்வினருள் சோதரனே நீ இதை பாராளுமன்றத்தில் பேசும்போது முஸ்லிம் என்ற பெயரில் அங்கு இருந்த முனாபிக்களின் முகத்தை வேறுபக்கம் திருப்பியிருப்பார்களே. தைரியமாக இரு அல்லாஹ் உன்னைப்போன்றவர்களுடன் இருப்பான்

  samsudeenj

  July 28, 2013 at 1:16 am

 7. அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ்! முதல் அரசியல்வாதி முஸ்லிமாக வாய்திறந்திருக்கிறார்.

  நான் தான் அவன்!

  July 29, 2013 at 11:23 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 11,126 other followers

%d bloggers like this: