இஸ்லாமிய கிலாபத், அதன் அடிப்படைகள் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டியுள்ளது: ஹக்கீம்
பாஸி பஹ்ஜான், அஸ்லம் எஸ்.மௌலானா; அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் உறுதி மொழி (பைஅத்) நிகழ்வு: இஸ்லாமிய கிலாபத், அதனுடைய அடிப்படைகள், அது எவ்வாறு முஸ்லிம் உம்மத்தின் அரசியல் செல்நெறியை தீர்மானித்தது என்பன பற்றி இக்கால கட்டத்தில் நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் தலைமைத்துவ கட்டுப்பாடு, பைஅத் கோட்பாடு என்பன பற்றிய தெளிவான விளக்கமும் காலத்தின் தேவையாகும். மேற்கண்டவாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .
வியாழக்கிழமை (30) மாலை சாய்ந்தமருதுவில் நடைபெற்ற கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கான பைஅத் (உறுதிமொழி) வழங்கும் நிகழ்வில் ஆரம்ப உரையை ஆற்றும் போது இதனை கூறினார்.
எதிர்வரும் மாகாணசபை தேர்தலை முன்னிட்டு அதில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கான இந்த பைஅத் நிகழ்வு உலமாக்கள் முன்னிலையில் சாய்ந்தமருது, சுகாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா (மதனி) பாலமுனை ஹாஷிம் மௌலவி (மதனி) பைசல் மௌலவி, அபூஉபைதா மௌலவி ஹாபில் உட்பட கண்ணியமிக்க உலமாக்கள் இந்த பைஅத் நிகழ்விற்கு பிரசன்னமாகியிருந்தனர்.
அங்கு ஆரம்ப உரையில் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது:
நாங்கள் இன்று ஏற்பாடு செய்துள்ள பைஅத் நிகழ்வு இலங்கையை பொறுத்தவரை சிறந்த முன்னுதாரணமாகும். இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் சமூகத்தின் இருப்பையும், பாதுகாப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கு இதன் மூலம் வழி காணப்படுகின்றது. நான் இவ்வாறான நிகழ்வில் அவசியத்தை உணர்ந்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முன்னரே, சங்கைக்குரிய உலமாக்கள் முன்வந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த இயக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட வேண்டும்.கட்சி உறுப்பினர்களுக்களுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு தர்பிய்த் (பயிற்சி) ஒன்றின் தேவை நன்கு உணர்ப்பட்டுள்ளது என்றார்.உலமாக்கள் உரைகளைத் தொடர்ந்து பைஅத் நிகழ்வு இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினரான பைசல் காசிம். எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரும் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.








“வெற்றி பெறும் எமது உறுப்பினர்கள் விலை போகும் அபாயம் பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகின்றேன். அவர்களது கால்களை கட்டிப்போட்டு கடிவாளம் போடும் காரியத்தில் எமது கட்சித் தொண்டர்களும் ஒத்துழைக்க வேண்டும்”. – நிதியமைச்சர் ரவூப்ஹக்கீம்.
(metromirror on August 28, 2012 | 1:03 pm in Breaking News _வெற்றி பெறும் உறுப்பினர்கள் விலை போகும் அபாயம் பற்றி எச்சரிக்கிறேன்; அவர்களது கால்களை கட்டி கடிவாளம் போட வேண்டும்!)
இன்று கடிவாளம் போடப்பட்டுவிட்டது.
இதுதான் “பைஅத்” ?
அப்போ SLMC எந்த தரிக்காவை சேர்ந்தது ? தரிக்காவின் பெயர் ? சேகு மார்களின் பெயர்களை தொடராக சொல்லலாமே ?
இஸ்லாமிய கிலாபத்தை அறிந்து கொள்ள மேற்படி விபரங்கள் உதவும்.
அரசியல் எந்தளவுக்கு போய்விட்டது என்று பர்த்தீர்களா ?
Kaneem MA
August 31, 2012 at 4:19 pm