Lankamuslim.org

One World One Ummah

PMGG யின் மூதூரில் இடம் பெற்ற ஆதரவாளர் சந்திப்பு

with 5 comments

PMGG ஊடகப் பிரிவு:  நேற்று இடம் பெறவிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக் கூட்டம் முஸ்லிம் காங்கிரஸின் குண்டர்களால் தாக்கப்பட்டதை அடுத்து இயக்கத்தின் மூதூர் மக்கள் அரங்கில் இடம் பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்துகொண்டு தமது உறுதியாகத் தமது ஆதரவுத் தளத்தை வளர்ப்பதற்கு உறுதி பூண்டனர்.

இச்சந்திப்பில் டாக்டர் சாஹிர், பொறியியலாளர் அப்துல் றகுமான், பிர்தெளஸ் நளீமி மற்றும் யூ. அஹமெட் ஆசிரியர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

About these ads

Written by lankamuslim

August 29, 2012 at 5:32 pm

5 Responses

Subscribe to comments with RSS.

  1. ஹிஸ்புல்லாஹ் வின் அடியாட்கள்தான் இதை செய்தார்கள் என்று அவரே சொன்னாரே..அந்த செய்தி உங்களுக்கு கிடைக்கவில்லையா lankamuslim இணையத்தள நிருவாகிகளே!

    mubharrakk thagha

    August 29, 2012 at 9:36 pm

  2. மூதூரில் என்னைப்பற்றி பிழையாகவும் என்னை தாக்கியும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் இன்று மாலை மூதூரில் நடை பெற்ற கூட்டத்தில் பேசியதாலேயே ஆத்திர முற்ற மூதூர் மக்கள் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரின் கூட்டத்தை குழப்பி மேடையை உடைத்து விரட்டியுள்ளனர் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

    காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை முன்றலில் இன்று மாலை (28.8.2012)நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.

    இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் மூதூரில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை நடாத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் போது எனக்கு ஏசியுள்ளனர். இதையடுத்து ஆத்திரமுற்ற மக்கள் இவர்களின் மேடையை உடைத்து கூட்டத்தை குழப்பியுள்ளனர்.

    பின்னர் அப்துர் றஹ்மானின் லன்டனிலுள்ள மூதூர் நண்பர் ஒருவரின் வளவிற்குள் ஒலி பெருக்கி பாவிக்காமல் கூட்டத்தை நடாத:தவதாக எனக்கு அங்குள்ள ஒருவர் தொலை பேசியில் கூறினார்.

    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ், மற்றும் பொறியியலாளர் றஹ்மான் வாய் கூசாமல் தேர்தல் மேடைகளில் பொய்களை பேசுகின்றனர்.

    என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட முயல்கின்றனர். போலியான அபிவிருத்தி திட்டங்கள் என கூறிகின்றனர்.

    கர்பலா வீதியை காபட் வீதியாக போடவுள்ளதையும் காத்தான்குடி கடற்கரை வீதியை காபட் வீதியாக போடவுள்ளதையும் பொய்யென கூறுகின்றனர்.

    நான் வெறுமனே வீதிகளுக்காக கல் வைப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

    காத்தான்குடியில் 26 கிலோ மீற்றர் வீதிகளை காபட் வீதிகளாக போடுவதற்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறைவனின் கிருபையினால் அதன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் இவ்வாறுதான் பொய்களை நாகூசாமல் மேடையில் நின்று பேசுகின்றனர் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இதன் போது மேலும் தெரிவித்தார்.

    Truth finder

    August 29, 2012 at 10:07 pm

  3. அன்புக்குரிய பி.எம்.ஜி.ஜி. கட்சி சகோதரர்கள் அறிய.
    இருக்கின்ற முஸ்லிம் அரசியல் அனைத்துக்கும் புறம்பாக புதிய அரசியல் கலாசாரத்தை உண்டு பண்ணப் போவதாகக் கூறுகிறீர்கள். நல்லது .ஆனால் சற்று அவசரப்படுகிறீர்களோ எனத்தோன்றுகிறது. திருகோணமலையில் மூதூர்பிரதேசம். ஒரு சிறிய பிரதேசம். பள்ளிவாசல் பிரச்சினை ஒரு நல்லவாய்ப்பாக அமைந்தவுடன் அதனை மூலதனமாகக் கொண்டு அங்கே நுழைந்திருக்கின்றீர்கள். மூதூர் போன்ற சிறிய பிரதேசங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற முடியாவிட்டாலும் மாகாணசபை உறுப்புரிமையைப் பெறமுடியும். இந்தநேரத்தில் அங்கு நீங்கள் முகாமிட்டு ஒரு ஐந்நூறு வாக்குகளை எடுத்தாலும் அம்மக்கள் தம்வாய்ப்பை இழந்து விடுவர். இது குறித்து சற்று யோசியுங்கள் அது இருக்க,
    எல்லாமுஸ்லிம் கட்சிகளும் பிழை. என்று கூறிவிட்டு நாங்கள் புதிய ஒருஅரசியல் கலாசாரத்தை கொண்டு வரப்போகிறோம் எனக் கூறிக் கொண்டு செயற்படுநின்றீர்கள். ஆனால் வழமையான ஏனைய கட்சிகளின் அரசியல்பாணிகளும் உங்களுடை;ய பாணிகளும் பலவிடயங்களில் ஒத்திருக்கின்றவே! அவை வருமாறு:
    01. நீங்களும் டி.சேட்,தொப்பி என்று இளைஞர்களுக்கு அணிவித்து கூட்டம் சேர்க்கின்றீர்கள். .ஏனையோர் பாடல்,கோசம்,அன்பளிப்பு மூலம் கூட்டம் சேர்க்கின்றனர.;
    02. நீங்களும் தான் இப்தார் நிகழ்வுகளை அரசியலுக்காக பகிரங்கமாகப்பாவித்தீர்கள் (ஒரு வேளை நீங்கள் பாவித்தால் அது தூயசெயற்பாடோ?என்னவோ)
    03. நீங்களும் தான் அடுத்த அரசியல்வாதிகளை கழுவுகிறீர்கள்(ரஉப்கக்கீம், அதாவுல்லாவை எல்லாம் ஒரு வழிபண்ணி விடுகிறீர்கள்)
    04. அடுத்தவர்கள் பொலித்தீன் பாவிப்பது பிழையென்றால், நீங்கள் தேவைக்கதிகமாக மின்விளக்குகளை எரியவிட்டு பிலிம்காட்டுகிறீர்கள்(அது சொந்தக்கரன்ட் என்பீர்களாக்கும். வீண்விரயம்தானே.பிழையான முன்னுதாரணம் தானே)
    05. முஸ்லிம்களை கேவலமாகப்பேசிய பொன்சேக்காவின் வெற்றிக்காக பகிரங்கமாக வேலைசெய்தீர்களல்லவா(இதற்கு ஏதும் நியாயம் வைத்திருப்பிர்கள்!!!)
    06. தமிழ்தேசியவாதத்தை வலிறுத்திக்கொண்டிருக்கும் வீரகேசரி, தனது கருத்துக்குள் முஸ்லிம்களையும் இழுத்துவிடும் நோக்கோடு முஸ்லிம்களுக்கென்று ‘விடிவெள்ளி’யை ஆரம்பித்துள்ளது.(ஆடு நனைகிறதென்று…பிரதேசசெயலாளர் பளீல் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டபோது ‘விபத்தொன்றில் கொல்லப்பட்டார்’ என செய்தி எழுதியவர்கள் தான் வீரகேசரியினர்.) அந்த விடிவெள்ளியின் ஆசிரியர் உங்கள் சூறாசபையின் தலைவர் பிர்தவ்ஸ் அவர்களின் சகோதரராம்.
    07. நீங்ளும்தான்பள்ளிவாசல் உடைப்பை அரசியலுக்காகப்விக்கின்றீர்கள். ரஊப்கக்கீம் பள்ளி உடைப்பு தொடர்பாக அரசைச்சாட, நீங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளைச்சாடுகிறீர்கள். ஆக, வௌ;வேறு வகையில் பள்ளி உடைப்பு இருசாராருக்கும் வாக்குப்பெற்றுத்தருகிறது. அதிலும் நீங்கள் கில்லாடிகள் பள்ளிவிடயத்தை மிக நாசூக்காக மக்கள் மத்தியில் இடம்பிடிக்கப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் வெளியீடு முழுவதும் அது இழையோடுகிறது.
    இவ்வாறு ஏனைய கட்சியினருக்கான பல பொதுப்பன்புகளை நீங்களும் அனுசரித்துக்கொண்டு புதிய அரசியல்கலாசாரம் பற்றிப்பேசிக் கொண்டு அரசியல் சந்தைக்கு வந்துள்ளீர்கள்.
    இருந்தாலும் கோட்பாட்டளவில் உங்கள் நோக்கங்கள் சிறப்பாகவே உள்ளன.அதனை முடிந்தளவு நடைமுறைப்படுத்தப்பாருங்கள் அதே நேரம் ஏனைய கட்சிகளுடனான பொதுப்பண்புகளுள் ஒன்றேனும் உங்களோடு ஒட்டியிருக்கும் வரை ஏனையோரை ஈவிரக்கம் இன்றி விமர்சிக்கும் யோக்கியதை உங்களுக்கு இல்லை என்பது வாசகர்கருத்து. நல்லவை நடந்தால் நாம் ஏன் குறுக்கே நிற்பான். நல்வரவுகளுக்கு நாம் வழிவிடுவோம். சேர்ந்து செல்வோம்.

    roshaen

    August 30, 2012 at 9:20 am

  4. ithu oru appattamaana poiyaana kootraakum poi enra onraiye moolathanamaaka kondu seyal padum hisbullahvin matroru poi koottam aarambikkapadavumillai pesavumillai koottam nadaaththa anumathi marukkappattathum medai kooda adikkaamal idaththai maatrikkondu pmgg inar vanthu avarkalathu officil koottam athikalavaana makkalin pangupatruthaludan amaithiyaaka nadaipetrathu ithu thaan unmai! intha hisbullah dambullai pallivaayalukku ethuvume nadakkavillai enru thesiya,sarvathesa reethiyaaka poi sonna makaan enpathu yaavarum arintha vidayam!!!!!!

    tharmika

    August 30, 2012 at 10:38 am

  5. அரசியலை படிக்கும் கத்துகுட்டிகள் இதுகள் பாவம் யாரும் வையாதீர்கள்

    PMAMF Mohammed H.I.R.A.Z

    August 30, 2012 at 10:20 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,703 other followers

%d bloggers like this: