Lankamuslim.org

One World One Ummah

அமைச்சர் அதாவுல்லா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு தேர்தல் திணைக்களத்தின் விசேட குழு

with 2 comments

அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து, தேசிய காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக 3 பேர் கொண்ட குழுவொன்றை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று தெரிவித்தது.

வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துதல் மற்றும் மிரட்டல் விடுக்கப்படுதல் என்பன அக்கரைப்பற்றில் அதிகம் இடம்பெறுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளான பவ்ரல் மற்றும் கபே ஆகியன முறைப்பாடு செய்துள்ளன.

இப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பொதுநிர்வாக அமைச்சு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி கூறினார்.

இந்த அமைச்சர் தனக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட அரசாங்க உத்தியோகஸ்தர்களை பகிரங்கமாக பயமுறுத்தியுள்ளார் என ஹெட்டியாராச்சி கூறினார்.

அக்கரைப்பற்றிலுள்ள சுற்றுலா விடுதியில் இந்த அமைச்சர் 20 இற்கு மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தங்கியிருப்பதாக ‘கபே’ அமைப்பு கூறியுள்ளது.

இச்சுற்றுலா விடுதியை தேர்தல் திணைக்களம் முறைப்பாட்டு நிலையமாக பயன்படுத்தவுள்ளதால் அதைவிட்டு வெளியேறும்படி எழுத்துமூலம் கேட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

“தேர்தல் பிரச்சாரத்துக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இப்பகுதியில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நிரந்தர பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரையும் ஏனைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் நியமித்துள்ளோம்” என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.- தமிழ் மிரர்

About these ads

Written by lankamuslim

August 29, 2012 at 5:20 pm

2 Responses

Subscribe to comments with RSS.

  1. தேசிய காங்கிரஸின் செயலாளரும்? Hon. Athaullah is not the Secretary. He is the Leader of that party.

    Mr. Poultry

    August 30, 2012 at 8:16 am

  2. இவ்வகைத் தேர்தல் முறைகேடுகள் இலங்கை வரலாற்றில் புதிய ஒன்றல்ல. பரம்பரைத் தொற்று நோய்.

    முழுமையாகத் தேர்தல் முறைகள், சட்டங்கள் மாற்றியமைக்கப்படாத வரை இவைகளைத் தவிர்க்க முடியாது.

    கண்காணிப்போர் வெளிநாடுகளில் இருந்து இக்கண்காணிப்பு வேலைகளுக்காகப் பெற்றுக் கொள்ளும் பணத்திற்காக எதையாவது பேசித்தானே ஆக வேண்டும்.

    அதிகாரமற்ற கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவது வெறும் கண்துடைப்பே தவிர இல்லை.

    nizamhm1944

    August 30, 2012 at 9:09 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,819 other followers

%d bloggers like this: