Lankamuslim.org

One World One Ummah

‘முஸ்லிம் சமாதான நீதிவானை தாக்கி புத்தரை வழிபட வைத்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி’

with 3 comments

முஸ்லிம் சமாதான நீதிவான் ஒருவரை கடுமையாகத் தாக்கி, புத்தர் சிலையை கட்டாயப்படுத்தி வழிபட வைத்துள்ளார் இலங்கை போலீஸ் அதிகாரி ஒருவர். என்று தமிழ் இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது . இந்த செய்தியை உடனடியாக எம்மால் உறுதிப் படுத்த முடியவில்லை

புதின பலகை என்ற இணையத்தில் வெளியாகியுள்ள செய்தியை அப்படியே இங்கு தருகிறோம் :

முஸ்லிம் சமாதான நீதிவான் ஒருவரை கடுமையாகத் தாக்கி, புத்தர் சிலையை கட்டாயப்படுத்தி வழிபட வைத்துள்ளார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர். வெளியாகியுள்ள செய்தியை இங்கு தருகிறோம் மாடு திருடியதான குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா காவல்துறையினர் சமாதான நீதிவான் என்.எம்.ஜுனைதீனை கைது செய்திருந்தனர்.

அவரை ஹிந்தோகம காவல்நிலைய பொறுப்பதிகாரி மோசமாக தாக்கியதுடன் தனது அறைக்கு இழுத்துச் சென்று அங்கிருந்த புத்தர்சிலையை வழிபட வைத்துள்ளார்.

தாக்குவதை நிறுத்துவதானால், புத்தர் சிலையை வழிபட வேண்டும் என்று சிறிலங்கா காவல்துறை அதிகாரி கூறியதால், வேறுவழியின்றி தான் புத்தர் சிலையை வழிபட்டதாக அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை அடுத்து, வடமத்திய மாகாண பிரதி காவல்துறை மாஅதிபர் ஜெனத் அபேசிறி குணவர்த்தனவின் மேற்பார்வையின் கீழ், விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதுகுறித்து, சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிலும், பாதுகாப்புச் செயலரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.- என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About these ads

Written by lankamuslim

August 18, 2012 at 1:20 am

3 Responses

Subscribe to comments with RSS.

  1. புதினப் பலகைக்குக் கிடைத்த செய்தி உங்களுக்குக் கிடைக்காமல் போனதும் புதினம் தான்!

    சமாதான நீதவான் மாடு களவெடுத்திருந்தால் இப்படியான அவமானங்கள் நடக்கத்தான் செய்யூம்!

    ஆனால் புத்தர் தன்னை யாருமே வழிபட வேண்டாமென்று கூறித் தன் கருத்துக்களைஇ கொள்கைகளை வாழ்வில் எடுத்து நடக்கும்படி கூறியூள்ளார்.

    அந்த மதத்தைச் சார்ந்தோர் இப்படிச் செய்வதுஇ புத்தரைக் கேலி செய்வதை ஒத்ததே! அம்மதத்துக்கு அவமானம் சேர்ப்பதே!

    nizamhm1944

    August 18, 2012 at 7:47 am

  2. லங்காமுஸ்லிம் புருடா விடாத , வந்த தகவலை பதிவு செய்.. ஏன் மறைப்பு

    KKboy

    August 18, 2012 at 12:02 pm

  3. இந்த சம்பவத்தோடு தொடர்புடைய ஏ. ஜுனைதீன் என்பவர் நாச்சியாதீவுக்கு அன்மைக்கிராமான தெமட்டாவை எனும் கிராமத்தை சேர்ந்தவர் இவர் திருமணம் முடித்து நாச்சியாதீவு கிராமத்திற்க்கு வந்தவர். இவரது பரம்பரை தொழில் மாடுகளை வாங்குவதும் விற்பதும் , இந்த வியாபாரத்தில் தரகராக செயற்படுவதும், ஆகும் மாட்டு வியாபாரத்தில் இவர் தரகராக செயட்படுவதினால் மக்கள் இவரை JP என்று அழைக்க ஆரம்பித்தனர் இதுவே அவரை அடையாளப்படுத்தும் பட்டப்பெயராக (நிக் நேம்) பரிச்சயமானது மெய்யிலேயே இவர் ஒரு JP (சமாதன நீதவான்) கிடையாது மாட்டுத்தோலில் செய்பவர்களில் அநேகமானவர்கள் தில்லு முள்ளு செய்வது வாடிக்கையான விடயமாகும் அந்த வகையில் இவரும் தனது தில்லு முள்ளுகளுக்கு பிரதேசத்து பொலிஸ் நிலையத்தையும் பயன்படுத்தி வந்தார், ஆனால் தற்போது உள்ள ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிக்கு புறம்பான செயற்பாடுகளுக்கு எதிரானவர் மாடுகள் களவெடுத்தல், கஞ்சா கடத்தல், மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முன்னிற்பவர் இலஞ்சம்,கொடுப்பதையும், வாங்குவதையும் கடுமையான குற்றமாக கருதுபவர் இதனால் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் புரிகின்ற ஆசாமிகளுக்கு இவர் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.தவிரவும் முஸ்லிம்களை மதிக்கின்ற, அவர்களது ஒற்றுமையை புகழ்கின்ற ஒரு நேர்மையானவர்.
    இனி நடந்த சம்பவத்தை பார்த்தால் – கடந்த மாதம் ஒரு ஏழை சிங்கள மாது தனது வாழ்வாதாரத்துக்கு பால் வழங்கிவந்த தன்னிடமிருந்த ஒரேஒரு பசுமாட்டை காண வில்லை என்று ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் ஹென்றியை பதிவு செய்துள்ளார் அவரது அந்த முறைப்பாட்டுக்கு இணங்க விசாரணைகளை ஆரம்பித்த ஹிதோகம போலீசார் அந்தப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு சிங்கள அன்பரின் கூடாக JP என்பருக்கு விற்கப்பட்டதாக அறியக்கிடைத்த தகவலை அடுத்து குறிப்பிட்ட சிங்கள வியாபாரியையும் இந்த JP என்பவரையும் விசாரித்து உள்ளனர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதாலும் ஊர்மக்கள் அந்த மாடு சிங்கள மாதுக்கே சொந்தமானது என்று உறுதியாக கூறியதாலும் பொய் வாக்கு மூலம் வழங்கிய JP யும் மற்றவரும் கைது செய்யப்பட்டனர் இரண்டு பிரிவுகளில் இவர்களது குற்றம் பதிவு செய்யப்பட்டிருந்தது கள்ள மாடுகளை விற்றல் வாங்கள், அடுத்து பால் கொடுக்கின்ற பசுமாட்டை திருடியமை (மிருக வதை சட்டம்) இது வரை காலமும் தாம் எத்தனை தில்லு முள்ளு செய்தாலும் இலஞ்சம் கொடுத்து தப்பித்து கொள்ளும் வாடிக்கையான நிகழ்வு பிழைத்துப் போனதினால் இன்றைய நாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு இந்த OIC யை விரட்ட கையாண்ட யுக்திதான் அவர் தன்னை மண்டியிட வைத்து புத்தர் சிலையை வணங்க வைத்தார் என்கின்ற புகாராகும் இதற்க்கு சாட்சியாக
    அதே நிலையத்தில் வேளை செய்கின்ற இரண்டு கான்ஸ்டபல்களையும் இவர் தயார் படுத்தியிருந்தார் ஆனால் அவர்கள் விசாரணையின் போது JP என்பவர் தமக்கு பணம் தந்து பொய் சாட்சி சொல்ல தொடர்ந்தும் வற்புறுத்தியதாகவும் அவரது பணத்திற்க்கு ஆசைப்பட்டே தாம் இவ்வாறு பொய் சாட்சி சொன்னதாகவும் கூறியுள்ளனர் இவர்கள் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு பொய் சாட்சி சொல்ல முன் வந்ததும் இலஞ்சம் பெற்றுக்கொண்டதும் உறுதி செய்யப்பட்டதினால் இவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இப்போது மட்டும் அனுராதபுர சிறைச்சாலையில் உள்ளனர் இப்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது..இந்த JP என்பவர் முதலில் இந்த விடயங்களை பத்திரிகையில் எழுத வேண்டும் என்று என்னிடம் தான் கேட்டுக்கொண்டார் இதனை ஆராய்ந்து பார்த்த நான் இதில் முற்று முழுதாக JP அவர்களின் மீதே தவறு இருப்பதும், பொய்யான குற்றச்சாட்டை ஹிதோகம OIC மீது அவர் சொல்லுவதும் புலனாகியது, என்னால் முடிந்த அளவு அவருக்கு உபதேசம் பண்ணி அனுப்பி வைத்தேன் ஆனால் ஒரு நேர்மையான அதுவும் அடுத்த மதங்களை கவுரப்படுத்துகின்ற ஒரு நேர்மையான அதிகாரிக்கு களங்கம் ஏற்படுத்த முனைந்திருக்கும் இவர்போன்றவர்களினால் நமது சமூகத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதற்க்கு அடுத்தவர்கள் தலைப்படுகின்றனர் இந்த விடயம்பற்றிய செய்தி மவ்பிம மற்றும் JAFNA நியூஸ் ஆகியவற்றில் பிழையாக வெளியாகி இருந்தன JAFNA நியூஸ் தனது பிழையை உடனே திருதிக்கொண்டது மவ்பிம பத்திரிகைக்கும் இதன் உண்மைத்தன்மைபற்றிய விளக்கத்தை அனுப்பியுளோம்.

    Mohamed farveen.

    August 19, 2012 at 3:56 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,831 other followers

%d bloggers like this: