Lankamuslim.org

One World One Ummah

பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாது ஒற்றுமையாக செயல்பட வேண்டும்

leave a comment »

புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுடன் புனித நோன்புப் பெருநாள் தின வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடை கின்றேன். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பின் கடமைகளை நிறைவேற்றிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு இன்று மிகவும் முக்கியம் வாய்ந்த தினமாக திகழ்கின்றது.

இவ்வாறு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு இலக்காகி துன்பமுறும் எமது ஈரானிய சகோதரர்களுக்காக பிரார்த்திப்பதுடன் உலகளாவிய ரீதியில் முஸ்லிம் நாடுகள் ஏகாதிபதிய நாடுகளின் சூழ்ச்சி வலையில் சிக்கி பாரிய இன்னல்களுக்கு இலக்காகியுள்ள இவ்வேளை முஸ்லிம்களாகிய நாம் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் எமக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாது ஒற்றுமையாக பொறுமையாக தியாக சிந்தனையுடன் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.

உலக, இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் சாந்தியையும் சமாதானத்தையும் நிம்மதியையும் வழங்க வேண்டும் என புனித நோன்புப் பெருநாள் தினத்தில் சகல வல்லமையும் படைத்த அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

 

 

 

About these ads

Written by lankamuslim

August 18, 2012 at 8:27 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers

%d bloggers like this: