சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய சிந்தனை கொண்டவர்களாக திகழவேண்டும்.
சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய சிந்தனையாளர்களாக திகழவேண்டும்: இவ்வாறு நகர விவகார சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் அச்செய்தியில் குறிப்பிட்ட தாவது, அமைதியான வாழ்க்கைக்காக அல்லாஹ்வின் வழிகாட்டலையும் பாதுகாப்பையும் வலிமையையும் ஆதரவையும் நாடி இரவு, பகல் காலங்களில் அல்லாஹ்வைப் பிரார்த்தனை செய்தார்கள்.
மோசமான சமூக பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுக்கக்கூடியதாய் அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருகின்றமைக்காக அல்லாஹ்வுக்கு நாம் நன்றியுடையவர்களாய் இருத்தல் வேண்டும்.
அல்லாஹ்வின் விருப்பத்துக்கும் அவனது திருப்திக்கும் இயைவாக நாம் செயற்படத் தவறினால், இயல்பாகவே அதற்கான விளைவுகளுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே எம்மைச் சூழ்ந்து நிற்கும் தீய சக்திகளிடமிருந்தும் இயற்கை அழிவிலிருந்தும் எமது சமூகத்தைப் பாதுகாக்க இன்றைய திருநாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திக்குமாறு முஸ்லிம் சகோதரர்களை நான் வேண்டிக் கொள்கிறேன்.
நோன்பைப் பூர்த்தி செய்த முஸ்லிம்கள் அல்லாஹ்விடமிருந்து கூடிய நன்மைகளை பெற்றவர்களையும் அதன் மூலம் சமூகத்தில் தமது பங்களிப்பினை பூர்த்தி செய்ய வலிமை பெற்றவர்களாயும் உள்ளனர். எம்மை எதிர்நோக்கியுள்ள பிரதான பணி தேசிய சமாதானத்தை அடையப் பெறுதலாகும்.
அச்சமாதானம் நாட்டின் எல்லாச் சமூகங்களையும் சார்ந்த மக்களின் உயிர், உடைமை, கெளரவம் அந்தஸ்து அவற்றைப் பாதுகாப்பதற்கும் அம்மக்களது தேவைகளையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றிக்கொள்வதற்கான சூழ்நிலையொன்றுக்கு உத்தரவாதமளிக்கக் கூடியதாயும் இருக்கும். எனது முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஈத் முபாரக்.








காலம்கடந்த ஞானம்!
வீடு நோக்கி ஓடுகின்ற நேரமே பிறக்குதே அநேக சிந்தனைகள் ! எனப் பாடிக்கொண்டே போகலாம்.
nizamhm1944944
August 20, 2012 at 9:26 am