முஸ்லிம்களுக்கான உலகளாவிய இஸ்லாமியத் தலைமைத்தை ஏற்படுத்த அருள்புரியுமாறு பிராத்திப்போம்
அனைவருக்கும் எமது ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள். உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் ஒரு மாதகாலம் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்து, நோன்பு கற்பித்த பயிற்சிகளை பெற்றவர்களாக ஈதுல் பித்ர் நேன்பு பெருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்த மகிழ்சிகரமான வேளையில் எமது குழுமம் உங்கள் அனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றது.
இலங்கை முஸ்லிம்களாகிய நாம் உலகளாவிய முஸ்லிம் உமாவின் பிரிக்க முடியாத அங்கம் . ஆனாலும் முஸ்லிம்களுக்கான உலகளாவிய இஸ்லாமியத் தலைமைத்துவம் இன்மையால் உலகின் பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் , ஆக்கிரமிப்புகளுக்கும் , இனச் சுதிகரிப்புக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.
அடக்குமுறைகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் , இனச் சுதிகரிப்புக்கும் உள்ளாகிவரும் முஸ்லிம்களுக்காகவும் ஏனைய சமூகங்களுகாகவும் இந்நாளில் தக்பீர் முழக்கத்துடன் அனைத்தின் மீதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏக இறைவனாகிய அல்லாஹ்விடம் பிராத்திப்பதோடு ,முஸ்லிம்களுக்கான உலகளாவிய இஸ்லாமியத் தலைமைத்துவம் ஏற்படுத்த அருள்புரியுமாறும் அந்த அனைத்தின் மீதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏக இறைவனாகிய அல்லாஹ்விடம் பிராத்திப்போம் .









Kullu Am wa Antum Bi Khair Happy Eid Mubarak!!!
PMAMF Mohammed H.I.R.A.Z
August 19, 2012 at 2:23 pm