இனிமேல் புதிய பழைய அகதிகள் என்ற யாரையும் பாகுபாடு படுத்தக் கூடாது
இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறும் மக்களை பழைய, புதிய அகதிகள் என்று பார்க்கும் நிலை காணப்படுவதாகவும் அது அகற்றப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக், வவுனியாவில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது முன்வைத்ததையடுத்து, இனிமேல் பழைய, புதிய அகதிகள் என்று எவரும் இல்லை எல்லோரும் ஒரே நிலையில் உள்ளவர்கள் என்று பார்த்து அவர்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பணிப்புரையினை ஜனாதிபதி விஷேட செயலணிக்கு வழங்கியுள்ளார்.
கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான றிசாத் பதியுதீனின் ஒழுங்குபடுத்தலுடன் இந்த கூட்டம் இன்று இடம் பெற்றது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், வடக்கில் மீள்குடியேறும் மக்கள் தமக்கான காணிகளின்றி பெரும் சிரமப்படுவதாகவும், அவர்களுக்கு வேண்டிய காணிகளை பெற்றுக் கொடுக்க ஆவணம் செய்யுமாறும் முன்வைத்த வேணடுகோளையும் ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்றை உடன் நியமிப்பதாகவும், இது குறித்து தேவையான வசதிகளை இக்குழு முன்னெடுத்துச் செல்லும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு கூறியுள்ளார்.
வன்னி மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக ஆயராயப்பட்டதுடன், அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் முன்மொழியப்பட்ட அனைத்து திட்டங்களும் நடை முறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி இங்கு கூறினார்.அமைச்சர்கள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்








உண்மையில் அகதிகள் சரியான முறையில் இனங்காணப்பட வேண்டியவர்களே!
தாங்களாக சூழ்நிலை காரணமாக அகதிகளாவோர் ஒரு சாரார். அவர்கள் யூத்த காரணமாக வெளியேறியவர்கள்.
அடுத்த சாரார், பலவந்தமாக அகதிகளாக்கப்பட்டோர்! சொத்து சுகங்கள் பறிக்கப்பட்ட நிலையில் உடுத்திய உடையூடன் தாயக மண்ணைவிட்டு புலிப் பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டோர்.
இவர்கள் வடக்கு முஸ்லிம்கள். இவர்கள் இது நாள்வரைபட்ட கஸ்டங்கள் சொல்லுந்தரமன்று.
இவர்களைப் பழைய, புதிய என்ற கட்டமைப்புள் விமர்சித்து இனங்காண முனைவது, அநியாயத்தின்பாற்பட்டது.
மேற்கண்ட இருசாராரும் அகதிகள் என் ஓரே பெயரிலோ, பழைய புதிய என்ற சித்தாந்தத்துக்குள்ளோ அடக்கப்பட்டு சமப்படுத்தப்பட முடியாதவர்கள்.
வடக்கு முஸ்லிம் அகதிகள் விசேட வேலைத்திட்டத்தின் மூலம் உரிய நிவாரணங்கள் வழங்கப்பட் வேண்டியவர்கள் என்பதை அரசியலார் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
அதைவிட்டு அவர்கள் பழைய என்ற அடிப்படையில் எதையோ வழங்கப்படாது விடப்பட்டவர்கள் என்பதற்காக வாதிடுவதும், அவர்களையூம் புதியவர்களோடு சமப்படுத்த முனைவதும், பிரச்சினையின் ஆழத்தை அறியாது எழுந்தமானமாக எடுக்கப்படும் தீர்மானங்களாகும்.
இது சிறு குழந்தை அடுத்தவன் கையிலுள்ள மிட்டாய் தனக்குக் கிடைக்கவில்லை எனக் கேட்டு அழுவதையூம், அதனை பெற்றுக் கொடுப்பதையூம் ஒத்ததே! இது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையல்ல. அது அவர்களின் அப்பாவித்தனததை இயலாமையைச் சுரண்டுவதே!
ஆதலால் புலிகளால் இனச்சுத்திகரிப்புக்கு ஆளாக்கப்பட்ட வடக்கு முஸ்லிம் அகதிகள் பிரச்சினை தனித்துவமானது என்பதை முன்னிறுத்த வேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனிதாபிமான முறையில் அணுகி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தையூம் கொடுக்கப்பதற்கான நடைமுறைத் திட்டங்கள் வகுக்க வேண்டும்.
எச்சில் இலைகளுக்கு அலைவோராக வடக்கு முஸ்லிம்களை ஆக்குவதை நிறுத்த வேண்டும். அதுவே அண்மைக் காலங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட அபகீர்த்தி. பத்திரிகை அறிக்கைகளில் அவர்கள் கீழ்த்தரமாக வர்ணிக்கப் பட்டிருந்ததை மானமுள்ள எந்த முஸ்லிமும் விரும்பான்.
சில நூறு அல்லது ஆயிரம் பெறுமதியான எதையோ கொடுத்து அவர்களைப் பேசாலை ……… புலாலுக்கு அலைவது போல் அலைய வைத்த அநியாயம் களையப்பட வேண்டும்.
அவர்கள் கௌரவமான முறையில் மீள்குடியேற்றப்படுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, அவர்களது கருத்துக்கள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்ப்படல் வேண்டும்.
இதில் அரசியலைக் கலக்காதீர்கள். எரிகிற வீட்டில் பிடுங்க நினைக்காதீர்கள். அவர்களின் துயரத்தில் இலாபமடைய யார் விரும்பினாலும் இறுதியாகப் புலிகளுக்கு ஏற்பட்ட பயங்கர முடிவே கிடைக்கும் என்பதை ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.
nizamhm1944
August 18, 2012 at 9:12 pm