இந்நாளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச முஸ்லிம்களுக்காக பிராத்திப்போம்
அமைச்சரின் ஊடகப் பிரிவு: ஒரு மாதம் நாம் நோற்ற நோன்பின் மகத்துவம்,அதனது கன்னியம் ஆகியவற்றினை பேனிப்பாதுகாப்பதன் மூலம், ஈருலகிலும் வெற்றியாளர்காளக ஆகும் பாக்கியத்துக்காக இன்றைய தினத்தில் இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திப்பதுடன், இலங்கையிலும், சர்வதேசத்திலும் நெருக்கடிகளுக்குள் உள்ளாகியுள்ள முஸ்லிம்களின் விமோசனத்திற்கும் துஆ பிரார்த்தனைகளை நாம் அனைவரும் செய்வோமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அச்செய்தியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளதாவது -
இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளை கண்டு நாம் துவண்டு விடாமல்,அதிலிருந்து மீட்ச்சிப் பெறுவதற்கும்,வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்த்திற்கும் இன்றைய தினத்தில் பிரார்த்திப்பது எமது கடமையாகும்.இதே போன்று இன்று மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டூழியங்கள் எமது மனதை பெரிதும் பாதித்துள்ளது.ஒரு சமூகத்தை முழுமையாக துடைத் தெரிய கடும் போக்கு இனவாத சக்திகள் முனைந்து கொண்டிருக்கும் போது,அந்த சதிகளை தவிடு பொடியாக்கிவிட அல்லாஹ்விடம் இன்றைய நோன்பு பெருநாள் தினத்தில் பிரார்த்தனைகளை செய்வோம்
இலங்கையில் சமூக ஒற்றுமை ஏற்பட சிறந்த தொரு காலம் ஏற்பட்டுவரும் இந்த நிலையினை குழப்புவதற்கு பல்வேறுபட்ட தரப்புக்கள் செயற்பட்டுவரும் வேளையில் எமது நாட்டில் வாழும் அனைத்து இன சமூகத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயலாற்றுவது காலத்தின் தேவையாகும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதீயுதீன் இன்று நோன்பு பெருநானை கொண்டாடும் அனைவருக்கும் தனது ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.







