ஆணைக்குழு அறிக்கையின் தமிழ், சிங்கள மொழி பெயர்ப்புகள் வெளியிடப் பட்டுள்ளன
கொழும்பு செய்தியாளர் : கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்கள மொழி பெயர்ப்பு பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளன.இலங்கை மத்திய வங்கி இந்த மொழி பெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு இந்த மொழிபெயர்ப்புக்களின் முதல் பிரதிகள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட கப்ரல் இந்த பிரதிகளை வழங்கியுள்ளார். இந்த அறிக்கையின் பிரதிகளை உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களும், இராஜதந்திரிகளும் பெற்றுக்கொள்ள ஆவண செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்தப் பிரதிகளை மக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது







