Lankamuslim.org

One World One Ummah

‘அதாவுல்லாவின் மண் குதிரையால் ஒன்றுமே செய்யமுடியாது’

with 6 comments

சஹீத் அஹமட் : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இயக்கமும் அதன் மரச் சின்னமும் முஸ்லிம் உம்மத்தின் மனதில் இருந்து ௭ன்றும் மறையாது. அதாவுல்லாவின் மண் குதிரையால் ஒன்றுமே செய்யமுடியாது அவரது கட்சியின் ௭ல்லை, நீளம்– அகலம் ௭ல்லாம் ஒரு கிலோ மீற்றர் தூரம் தான் என்று சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கிழக்கு மாகாண சபையின் அம்பாறை மாவட்டத்துக்கான ஸ்ரீ.ல.மு காங்கிரஸ் வேட்பாளருமான ௭ம். ஐ. ௭ம்.மன்சூர் தெரிவித்துள்ளார் . நேற்று சம்மாந்துறையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ள தகவலில் ,முஸ்லிம் காங்கிரசின் தேசியபட் டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் காலடி ௭டுத்து வைத்த அமைச்சர் அதாவுல்லா சுய இலாபத்துக்காக ௭ம்மை காட்டிக் கொண்டிருக்கின்றார். அவரிடம் நாம் சவால் விடுக்கின்றோம். தேசிய ரீதியாகக் கூட வேண்டாம் அவர் வாழும் அம்பாறை மாவட்டத்திலாவது அவரது கட்சியின் குதிரைச் சின்னத்தில் போட்டியிட்டு அவரது செல்வாக்கைக் காட்ட வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் ௭ன்ற மக்கள் வெள்ளத்தில் அதாவுல்லாவின் மண் குதிரையால் ஒன்றுமே செய்யமுடியாது.

அவரது கட்சியின் ௭ல்லை, நீளம்– அகலம் ௭ல்லாம் ஒரு கிலோ மீற்றர் தூரம் தான் கல்விமான்களும் புத்திஜீவிகளும் உலமாக்களும் நிறை ந்த அக் கரைப்பற்று மண்ணில் அமைச்சர் ௭ன்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு காட்டுத் தர்பார் நடத்துகின்றார் என்று தெரிவித்துள்ளார்.

About these ads

Written by lankamuslim

August 18, 2012 at 10:54 am

6 Responses

Subscribe to comments with RSS.

  1. Sariyaha kuruneegga ippo sari mankuduraya nampi irukkum makkalukku eppo nandaha puriyoum

    mohamed nizam

    August 18, 2012 at 12:08 pm

  2. அன்புக்குரிய வேட்பாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களே!
    மு.கா.பிரிந்ததில் மிகவும் நொந்து போயிருக்கின்றீரகள் போல் இருக்கின்றது. கட்சியைப்பிரித்தது நபர்களல்ல. ‘புள் மினிஸ்ட்ரி;’ தான் என்பது ஒன்றும் நீங்கள் அறியாததல்ல. கிழக்கு மாகாணத்தான் ஒருவன் புள் மினிஸ்டரானால்-’ஓட்டுப் போட கிழக்கும்;, ஆண்டு அனுபவிக்க கண்டித்தலைமைத்துவமும்’ என்ற தாரகமந்திரம் பிழைத்தவிடும் என்பதே பிரிவினைகளின் மூலம்.
    அதைவிடுத்து ஏதேதோ காரணம் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கான விமோசனம் மு.காவிடம் அதிகமா?, தே.காவிடம் அதிகமா? (உறையில் இருக்கிறது ஆனால் கூர்மையான வாள் என்பதில் என்ன பெருமை?) என்பது ஒரு புறமிருக்க,
    தற்போதைய அரசியலின் அடித்தளம் எல்லாம் அமைச்சுப்பதவிகளால் பின்னிப்படர்ந்துள்ளது என்பதை விளங்கிக் கொள்வீர்கள் என நம்புகிறேன். ஒரு பிரயோசனமும் இல்லாத அமைச்சையே விடமாட்டேன் எனக்கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் தலைவரது பரிதாபத்தைப்பார்த்தே இதைத் தெளிவாகப்புரிந்திருப்பீர்கள்.
    சரி, மூத்த போராளியாகிய உங்களிடம் ஒன்று கேட்கிறேன். மு.கா.வின் லட்சியமென்ன?… நானே சொல்லட்டுமா? நூன் என்ன . எம்.எச்.எம். அன்றே சொன்னார். ‘இலங்கைத்தீவில் எமக்கான அபிவிருத்தியைப்பெறுவதும் எமது மறுக்கப்படும்உரிமைகளை தட்டிக்கேட்டு வெல்வதும் உலகளாவிய உம்மா வுடன் இணைந்து செல்வதும்’ என்றார். அதன் பிரகாரம் ‘அபிவிருத்தியும் எமதுரிமையென அவர் அமைச்சுக்களைப்பெற்று வாக்குப் போட்ட மக்களை வளப்படுத்தினாரா இல்லையா?
    ஓகே. தற்காலத்தக்கு வருவோம். இப்போது பேரம்பேசும் சக்தியை பஜிரோக்களும் அமைச்சுக்களும் தீர்மானிக்கத் தொடங்கிவிட்டதால் உரிமையை வெல்கின்ற கதை முடிந்து விட்டது. அல்லவா? அதற்கு ஆதாரம் கக்கிம் காங்கிரஸ்தான். சொல்லுங்கள் மன்சூர், இதுவரை கக்கீம் ஜெயித்துவந்த உரிமைகள் எத்தனை? பார்த்தீரகளா தலைவர் வெறும்வாயை சப்ப வைத்து விட்டார்.
    சரி அதுவும் போகட்டும். முஸ்லிம்கட்சிகள் உரிமையை வெல்லும் ஆண்மையை இழந்தவிட்டனவல்லவா?! அப்படியென்றால் உரிமை போக எஞ்சியிருப்பது எது?… அபிவிருத்தியல்லவா?
    சொல்லுங்கள் மன்சூர் தலைவர் வாக்குப்போடும் கிழக்கு மக்களது வாழ்வை ஒருஅங்குலமேனும் உயர்த்த மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகள் எவை…எவை…????????அதற்கும் வெறும்வாய் அல்லவா?
    எஞ்சிய இந்தக்கேள்விக்கு கக்கீமிடம் பதில் இல்லையல்லவா? ஆனால்;??? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் ஆண்மை அதவுல்லாவிடம் உண்டல்லவா?
    எலும்புத்துண்டு, சோரம் போதல் என்று கூறும் கக்கீமே அமைச்சுக்கு வாயாலோடியும் சுட்டிக்காட்ட ஒரு அபிவிருத்தி கிடையாது. ஆனால் அதாவுல்லா சுட்டிக்காட்ட கிழக்கு மற்றும் கிழக்கக்கு வெளியிலும் ஆயிரக்கணக்கில் உள்ளனவா இல்லலையா?
    அன்புக்குரிய மன்சூர் அவர்களே!
    பெருந்தலைவர் எம்.எச்.எம். அவர்களை நீங்கள் நேசிக்கிறீர்கள் அல்லவா? அவர் எப்போதாவது தான் எடுத்துக்கொள்ளும் அமைச்சின் மூலம் தானும்,பேரியலும்,அமானும் மற்றும் உறவினர்களும் வாழ்ந்தால் மட்டும் போதுமென நினத்து வாக்களித்தமக்களின் வயிற்றை வாய்ச் சவடால்களாலும், ஆவேச அறிக்கைகளாலும் நிறைத்தால் மாத்திரம் போதும் என்று கபடத்தனமாக எண்ணினாரா? வாய்ச்சொல்லிலும் செயலிலும் வல்லவாராகவேதானே வாழ்ந்து காட்டினார்.
    சரி…நான் உங்கள் கருத்துக்கு வருகிறேன். உங்களோடு சேர்ந்து அதாவுல்லாவும் ‘நாரெ தக்குப்;;பீர் முழங்கிக் கொண்டு கக்கிமின் வாலை தோளில் சுமப்பதே பிறவிப்பயன’; எனக் கருதியிருந்தால் இந்நேரம் நம்மக்களது பௌதீக வள அபிவிருத்தியை நினைத்துகப்பாருங்கள். நம்பிரதேசங்கள் ஒப்பீட்டளவில் மிகவும் பின் தங்கியிருக்குமா இல்லையா? (தயவு செய்து அவசரப்பட்ட இதைவிட கக்கீம் தலைவர் சுப்பராக செய்திருப்பார் எனக் கூறி காமடிபண்ணாதீர்கள்.)
    ஓகே. அதாவுல்லா மண்குதிரைதான். விரும்பினால் ஏறுங்கள் இல்லையானால் ஏறாதீர்கள். – உங்கள் அபிப்பிராயப்படி – ஏறினால் ஆபத்து ஏறாதுவிட்டால் அபத்தில்லை என்று தெரிந்து விடும் நன்மை இருக்கிறதல்லவா?
    ஆனால் மன்சூர் அவர்களே நீங்கள் நின்று கொண்டிருப்பது ‘மண்குதிர்’என்று உங்களுக்குத் தெரியுமா? ‘மண்குதிரை’ பற்றித் தெரிந்த உங்களுக்கு, ‘மண்குதிர்’ பற்றித்தெரியுமா? யாரிடமாவது விசாரித்துத்தெரிந்து கொள்ளுங்கள்.
    பின்குறிப்பு :- பட்ட மரத்தின் கீழ்நின்று பார்ப்போருக்கு குதிரைகள் எல்லாம் மண்குதிரைகளாகத் தென்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
    பரிகாரம்:- அப்டபட்ட மரம் தலைமீது விழும் முன்பு உடன் அங்கிருநது அகன்று விடவும். ஏனெனில் அதன் வேர்களை எம்.எச்.எம.;மின் துஆ அரித்துக் கொண்டிருக்கிறதாம்.

    roshaen

    August 18, 2012 at 5:40 pm

    • ungalaippoantra ….piravigalaal maraththin ilayeikooda vizhuththa mudiyaadu….

      raheem

      August 18, 2012 at 7:47 pm

  3. we have to understand the …. politicians in srilanka did not get any suport from srilankan communities such as sinhalese tamils and muslims.Athaullah mister of akkaraipattu not for all muslim community he wants to dominate akkaraipattu.the people of akkaraipattu have to think and change like these politicians.In multi community. these people did not suitable to present the islamic message for our srilankan people.We dont like roudy politic.Political is greatest Ibadha in in islamic perspective.Good moral and pure minded pepole hand take.Durty politic will express reaction.Almigthy Allah safe us from this durty politic and selfish politicians to give our vote them.

    habeebullah kinniya

    August 19, 2012 at 9:24 am

  4. PORALIPERUNTHAHAIHALANA RAHEEM,FOUS PONDRA PIRAVIHAL IRUKKUMVARAI KAKKEEMAI THIRUTHTHAVE MUDIYATHU. UNGALAIPPONDRA THIYAHATHTHILAHANGAL THAN KAKKEEMIN UYIRULLA MUTHALEEDU. NAREE THAKKUPPEER.

    roshaen

    August 19, 2012 at 1:23 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers

%d bloggers like this: