Lankamuslim.org

One World One Ummah

ஹக்கீம் மன்னிப்பு கோரியிருப்பது முழு இஸ்லாமிய உலகத்தையும் அவமதிக்கும் செயற்பாடே!

leave a comment »

கிழக்கு செய்தியாளர்: முஸ்லிம் மத செயற்பாட்டிற்கு எதிரான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ரவூப் ஹக்கீம் தான்சொன்ன கருத்திற்காக பேரினவாத சக்திகளிடம் மன்னிப்பு கோரியிருப்பது முழு இஸ்லாமிய உலகத்தையும் அவமதிக்கும் செயற்பாடாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணி பொதுச் செயலாளர் எம். பைசால் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் ஒடுக்குமுறைக்கு எதிராக அரசாங்கமோ பேரினவாத சக்திகளோ எத்தகைய கருத்தையும் முன்வைக்காத நிலையில், எமது மத செயற்பாட்டிற்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய ஒர் சூழ்நிலையில் ரவூப் ஹக்கீம் தான்சொன்ன கருத்திற்காக பேரினவாத சக்திகளிடம் மன்னிப்பு கோரியிருப்பது முழு இஸ்லாமிய உலகத்தையும் அவமதிக்கும் செயற்பாடாக காணப்படுகிறது. தனது அரசியல் இலாபத்திற்காக தினமும் ஒரு கருத்தைக் கூறிவரும் ஹக்கீம் பகிரங்க மன்னிப்பை கேட்டது அரசியலில் ஒரு நிர்வாண நிலையில் காணப்படுகிறார்.

பாராளுமன்ற சுகபோகங்களுக்காக எதையும் செய்ய துணிந்திருக்கும் இவர்களை முஸ்லிம் மக்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும். புதிய கருத்துக்கள் புதிய மாற்றங்களை நோக்கி முஸ்லிம் மக்கள் பயணிக்க தயாராவது புதிய தலைமைத்துவத்தை உற்சாகப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

About these ads

Written by lankamuslim

August 17, 2012 at 4:49 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,817 other followers

%d bloggers like this: