ஜனாதிபதிக்கும் நாட்டுக்கு ஆசி வேண்டி புனித மக்காவில் காதர் விசேட துஆ
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், அரசாங்கத்திற்கும் நல்லாசி வேண்டி சவூதி அரேபியாவி லுள்ள மக்கா நகரில் விசேட துஆ பிரார்த்தனை நடாத்தியதாக சுற்றாடல் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் நேற்று தெரிவித்தார்.
இன, மத, பிரதேச பேதங்கள் பாராமல் முழு நாட்டையும் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
அவரது நடவடிக்கைகள் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் தலைமையிலான ஆட்சி நீடித்து நிலைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கப்பட்டதாகவும் அவர் குறிப் பிட்டார்.
அதேநேரம் இலங்கை ஹஜ்ஜாஜிகளின் பணம் ஒரு சதம் கூட வீணாக்கப்படக் கூடாது. அவர்கள் நியாயமான கட்டணத்துடன் இக்கடமையை நிறைவேற்ற வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் எனப் பிரார்த்தித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.- தினகரன்








வெட்கப் படாமல் இப்படி உண்மையச் சொல்வதில் பெருமைபடுபவர்கள் இவர்கள்தான்.
“பாதுகாப்பற்ற பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பளி நாயனே” என கேட்க மறந்து விட்டாரோ.
அபூ அம்மார்
August 17, 2012 at 7:04 am
சுத்த நிராகரிப்பு!
இப்படியெல்லாம் பதவியைப் பாதுகாக்க வேண்டுமா? இதெல்லாம் ஒரு பிழைப்பா?
nizamhm1944
August 17, 2012 at 9:10 am
இலங்கையில் முஸ்லிம்கள் உள்ளனர் அவர்களுக்காகவும் துவா கேட்க மறந்துவிடாதீர்கள் , குறிப்பாக நீங்கள் தம்புள்ளை மச்ஜிதுக்காக துவா கேளுங்கள். துவாவுடன் தஹ்பாவும் ( பாவமன்னிப்பு ) கேட்க மறக்காதீர்கள் தம்புள்ளை மஸ்ஜிதை அகற்ற நீங்கள் பிரதமருக்கு சம்மதம் தெரிவித்தவராச்சே !!!! உங்களை போன்ற அரசியல்வாதிகள் சமூகத்தை எப்போதுமே மறந்துபோகிறார்கள் !!!!
AC.Jawath
August 17, 2012 at 10:21 am
………….?premadasa irukkum podu awanukku pinnala ippo raja pakasawukku duwa?………………………….
althaf
August 17, 2012 at 3:57 pm