இராணுவத்தின் 22 ஆம் படைப்பிரிவின் இப்தார்
M.U.பஹ்மி: திருகோணமலையில் “ரமழான் விழா சமாதானத்துடன் கூட்டமையாக கொண்டாடுவோம்” எனும் தொனிப் பொருளிலான இப்தார் நிகழ்வு உவர்மலை இராணுவ தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. திருகோணமலையில் இலங்கை இராணுவத்தின் 22 ஆம் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் திருகோணமலை உவர்மலை தலைமைக் காரியாலய இராணுவத்திற்கும் திருகோணமலை உலமாக்களுக்குமிடையிலான சினேக பூர்வமான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் லால் பெரேரா, திருகோணமலை 22 ஆம் படைப்பிரிவு பொறுப்பதிகாரி மேஜர் ஜென்ரல் மஹிந்த, இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.உலமாக்களுக்கான இப்தார், இராப்போசன ஏற்பாடுகளுடன் மஃரிப் தொழுகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












