ஆளுமைப்பலமும், துணிவும் இல்லாதவராகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தன்னை அடையாளப்படுத்துகிறார்
கல்முனை செய்தியாளர்: தமிழ் தேசிய வாதத்திற்கு துணைபோவதுடன், அண்மையில் காவி உடையணிந்த பயங்கரவாதிகள் என்று பேசி சிங்கள மக்களின் நேரடி எதிர்ப்பினை ஏற்படுத்திக்கொண்டு, அடுத்த கணமே மன்னிப்புக் கேட்கும் ஆளுமைப்பலமும், துணிவும் இல்லாதவராகவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார் என அம்பாறை மாவட்ட பொது ஜன ஐக்கிய முன்னணியின் வெற்றிலைச்சின்னம் 2ம் இலக்க வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஏ.எச். நளீமின் ஏற்பாட்டில், மஸ்ஜிதுல் அல்-ஹிலால் பள்ளிவாசலின் அபிவிருத்திக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வும், பள்ளிவாயல் நிர்வாகத்தினரால் இப்தாரும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எஸ்.நிஜாமுதீன் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது,
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் பெரும் சக்தியாக்க் குரல் கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பலம் கடந்த 2000ம் ஆண்டுகளில் மு.கா. வும், பொ.ஜ.ஐ.மு யும் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்டையில் அவ்வரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு பங்காளிக்கட்சியாக மு.கா. பலம் பெற்றிருந்தது.
இந்த உறவை நிலைப்படுத்தாமல் றவூப் ஹக்கீம் அமைச்சராக இருந்துகொண்டு அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகி அன்றை தலைவர் றணிலிடம் பல இரகசியங்களை வெளிப்படுத்தி, ஆட்சியினை வீழ்த்தி அன்றைய ஜனாதிபதி சந்திகா அம்மையாரின் அரசாங்கத்திலிருந்து தனது விருப்பப்படியே வெளியேற்றப்பட்டார். அன்றிலிருந்து இன்றைய அரசாங்கம் வரை தனது வங்கரோத்து அரசியலை செய்து வருவதனால் அவரில் எந்த நாட்டின் தலைமைக்கும் முழுநம்பிக்கை வரவில்லை. என்பதனால் பாதிக்கப்படுவது எமது மக்களே என்பதை நீங்கள் உணர வேண்டும்.
றவூப் ஹக்கீம் நம்பிக்கை இழந்த மஹிந்த அரசுடனிருந்த நெருக்கத்தை வலக்கிகொண்டதன் ஊடாகவே முஸ்லிம் சமூக அரசியலுக்கு நிரந்தர ஆபத்தை ஏற்படுத்தினார். அதன் விளைவுதான் சிங்களப் பேரினவாதத்தையும், பௌத்த மதவாதத்தையும் வைத்து அரசில் செய்யும் ஜாதிக ஹெல உறுமய, சுதந்திர தேசிய முன்னணி போன்ற கட்சிகள் அரசாங்கத்தின் பங்காளிகளாக வந்து அன்றுதொட்டு இன்றுவரை இனவாதப் பிரச்சினைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அன்றைய அரசாங்கத்தின் பங்காளியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் இருந்திருந்தால் இத்தகைய இனவாதக்கட்சிகளின் ஆதிக்கம் தேசிய அரசியலில் வேரூன்றி இருக்காது. அதனைத் தவற விட்டு நமது சமூகத்திற்கு வரலாற்றுத் துரோகத்தை ஏற்படுத்திய ஒருவராகவே றவூப் ஹக்கீம் இருப்பது இன்று மக்களால் நன்கு உணரப்படுகிறது.
அதனால்தான் முஸ்லிம்களின் மாற்று அரசியல் கட்சிகளுடன் மக்கள் சாரை சாரையாக வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றனர்.
இவ்வாறுதான் 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மரச்சின்னத்தில் போட்டியிவதில் எற்பட்ட சட்டப் பிரச்சினை காரணமாக டம்மி பெயர்களில் உள்ளவர்களே பதவிகளைப் பெற்றார்கள். இதனை சரி செய்வதற்காக இதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றில் கொண்டு வருவதற்காக அரசிடம் தஞ்சமடைந்து நோக்கு நிறைவேறியதும் மீண்டும் நம்பிக்கைத் துரோகம் செய்ததுபோல் 2007 இல் வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் அரசை விட்டு வெளியேறியதுடன் கணக்குப் போட்டால் தொடர்ந்தும் தான் சார்ந்த மக்களின் கனவுகளை கலைத்துவிட்டு சந்தரப்பத்தை தவறவிட்டு அரசின் எதிரியாகின்றார். அந்த நிலையே தற்போதும் தொடர்கிறது.
மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கூறியதைப் போன்று சரியான நேரத்தில் எடுக்கப்படும் பிழையான முடிவும், பிழையான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவும் பிழையானதாகும். சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவே சிறந்த தலைமைத்துவத்தின் ஆளுமையாகும். என்ற கருத்தினை இன்னும் ரவூப் ஹக்கீம் சரியாக விளங்கவில்லை. அதனால்தான இன்னுமின்னும் பிழையான முடிவுகளை எடுத்து வருகிறார். ஆனாலும் மக்கள் இதனை மிக விரைவாக விளங்கிக் கொளவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
இதனைப் பின்தொடர்ந்தே இம்முறையும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தனது முடிவை எடுத்திருக்கிறது. இத்தேர்தலில் 3 பிரதான முஸ்லிம் கட்சிகளும் இணைந்து பொட்டியிட்டிருந்தால் அதி கூடிய முஸ்லிம் உறுப்பினர்களை நாம் பெற்றிருப்போம். இதனை தவிடுபொடியாக்கிவிட்டு சம்மந்தனுக்குச் சாதகமான ஒரு முடிவினை எடுத்து எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கி, முஸ்லிம்களை அரசாங்கத்தினதும், சிங்களவர்களினதும் எதிரிகளாக காட்ட முற்படுகிறார்.
வடமராட்சி கிணற்றிலிருந்து மன்னாருக்குச் செல்லும் குழாய் நீர்த்திட்ட விநியோகத்தினை நிறுத்தக் கோரும், மன்னார் மீன்பிடித்துறைமுக அபகரிப்பை செய்யும் தமிழ் புத்தி ஜீவிகளின் கருத்துக்களுக்கும் மத்தியில் சாதகமான நிலையை ஏற்படுத்தி முஸ்லிம்களை சிறுபாண்மையிலும் சிறுபாண்மையாகக்காட்ட முற்படும் வெளிநாட்டு சக்திகளுக்கும் சோரம் போகும் நிலையை மாற்றி எமது அரசாங்க சார்பான வேட்பாளர்களை ஆதரிக்க முன்வருவதன் மூலம் மட்டுமே நமக்கு முன்னுள்ள பேராபத்தை தவிர்க்க முடியும் எனவும் கூறினார்.








காவியூடைப் பயங்கரவாதம் எனத் துணிந்து கூறியமைக்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
அரசியல் சாணக்கியத்தில் கூற வேண்டியதைக் கூறிவிட்டு சாறி கூறுவதும் ஏற்றுக் கொள்ளப்படலாம்.
ஆனால் அந்த தம்புள்ள பள்ளியில் வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் தொழுகை நடத்தவிடாது நடத்தப்பட்ட பயங்கரவாதத்தைக் கண்டுங் காணாதிருந்த முஸ்லிம் பெயர் கொண்ட அரசியல்வாதிகளை என்னவென்று கூறுவது?
nizamhm1944
August 18, 2012 at 8:02 am
ANPU NISAAM!
KAVIYUDAI PAYANGARAVATHAM PATRI PESIYATHAI NAANUM VARAVETKINDRAN. AANAL ADUTHTHA VINADIYE OODODIPPOI “MANNIPPU KETTU APPADI ORU PAYANGARAVAATHAME ILLAI” ENA OPPUTHAL VAAKKUMOOLAM KODUTHTHU VITTARE. ITHU ENTHA VAHAI SAANAKKIYAM.?
KETTU SOLVEERHALA?
roshaen
August 19, 2012 at 6:39 pm
Dear Brother,
I just comment on things. I have no connections with any politicians. I always raise against injustice. This is not mean that I support them or belongs to the parties.
Its a strategy using by the politicians. If he didn’t say like that u n I wont write on this.
We must always be balanced. I saw that in a different way.
நல்லதை வாழ்த்தவூம் தீயதை ஏற்புடை வழிகளில்; கண்டிக்கவூம் செய்யலாம். அது உரிமையூம் கடமையூம் ஆகும்.
நான் துணிவைப் பராட்டினேன். தாங்கள் அவரது பின்வாங்கலைக் கண்டிக்கிறீர்கள்.
அவர் ஓர் இனத்தை பிரதிநிதிப்படுத்தும் தலைவர் என்பதால் அவரது கருத்துக்கள் தனது இனத்துக்குப் பாதகமான நிலையை உருவாக்குவதில் இருந்து காப்பாற்றுவதற்காக செய்திருக்க வேண்டும்.
தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று சிந்திக்கின்ற தலைவர்கள் மத்தியில் முஸ்லிம்களின் நலன காக்க தான் கீழிறங்கிகியதை நான் வரவேற்கிறேன். அது உயர்ந்த பண்பையூம், ஆழ்நத தூரதிருஷ்டியையூம் கொண்டது.
நான் முன்னர் பாராட்டியதற்கு மேலதிகமாக அவரது தியாகத்தை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.
nizamhm1944
August 26, 2012 at 7:37 pm