தம்புள்ள பள்ளிவாசல் எக்காரணத்தைக் கொண்டும் எந்த சந்தர்ப்பத்திலும் அப்புறப் படுத்தப்படமாட்டாது
அஸ்லம் அலி : தம்புள்ள ரங்கிரி பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் எக்காரணத்தைக் கொண்டும் எந்த சந்தர்ப்பத்திலும் தற்போதுள்ள இடத்திலிருந்து அப்புறப் படுத்தப்படமாட்டாது. இதனை மிகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அதேபோன்று இந்த பிரதேச மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவர் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறை பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார் .
அவர் தெரிவித்துள்ள தகவலில் தம்புள்ள, களுபோவில, ராஜகிரிய பள்ளிவாசல் பிரச்சினை சம்பவங்களின் போது இடம் பெற்ற விசாரணைகளின் போது பொலிஸசுக்கு நேரில் சென்று நான் விளக்கமளித்தேன். இந்த பள்ளிவாசலில் நாங்கள் வணக்க வழிபாடுகளில் தான் ஈடுபடுகின்றோம். எந்த பாதிப்பையும் ஏற்படுத்தும் இடமல்ல. இது ஒரு மதுபான கடையோ விபசார விடுதியோ அல்ல. மாறாக நாங்கள் நல்லது செய்கின்றோம். எமது உரிமைக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என்று தெளிவுபடுத்தினோம்.
சுமுகமான முறையில் பேசி தற்பொழுது சகல பள்ளி வாசல்களிலும் தொழுகை இடம் பெறுகிறது. நாம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வார்த்தைகளால் மாத்திரமின்றி செயலால் வெளிக்காண்பித்தோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சு. க. வில் அங்கம் வகிக்கும் சகல மாநகர நகர, பிரதேச சபை உறுப்பினர்கள் 107 பேரை உள்ளடக்கிய இந்த முஸ்லிம் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.* நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க இந்தக் குழுவின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். என்றும் அவர் தெரிவித்துள்ளார் . தினகரன் பத்திரிகைக்கு வழங்கியுள்ள போட்டி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.








சிரேஷ்ட அமைச்சர் பௌஸி 94களில் சுதந்திர கட்சி ஆட்சி பீடமேறியதும்இ ஆரம்பித்த கட்சியின் முஸ்லிம் பிரிவூக்கு என்ன நடந்ததோ?
nizamhm1944
August 16, 2012 at 10:26 pm
இவர் சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் எத்தனையாவது தலைவர் இதற்கு முன்னர் பல முஸ்லிம் பிரிவுகள் தோன்றி மரைந்துள்ளது
Umar Farook
August 16, 2012 at 10:34 pm
குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரை அரசாங்கம் கைது செய்து தண்டனை வழங்கட்டும் சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் பலத்தைப் பார்ப்போம்
suhaib
August 17, 2012 at 2:20 pm