Lankamuslim.org

One World One Ummah

மியன்மார் முஸ்லிம் இனச் சுத்திகரிப்பில் அரச படைகள்: பிரஸ் டிவி

with one comment

ஏ.அப்துல்லாஹ் : மியன்மாரில் அரச ஆதரவுபெற்ற  பௌத்தர்கள் தொடர்ந்து  முஸ்லிம்களை படுகொலை செய்து, அவர்களின் மஸ்ஜிதுக்களை எரித்தும் வருவதாக பிரஸ் டிவி தனது மியன்மார், ரோஹிங்கியா செய்தியாளரை ஆதாரமாக கொண்டு மிகவும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது .Video

பிரஸ் டிவிக்கு அதன் செய்தியாளர் மியன்மார், ரோஹிங்கியா பிரதேசத்தில் 70,000 முஸ்லிம்கள் வாழ்ந்துவந்த கிராமம் ஒன்றைப்பற்றி குறிப்பிடும்போது தற்போது அந்த கிராமத்தில் 6000 பேர்தான் எஞ்சியுள்ளதாகவும் அங்கு இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

அங்கு கிராமங்கள் எரித்து முற்றாக அழிக்கப்படுவதை தான் நேரில் பார்த்தாகவும் அவை மியன்மார் இராணுவத்தினாலும் , போலீசாலும் அழிக்கப்படுவதாகவும் மிகவும் அதிர்சிகரமான தகவலை உலகிற்கு தெரிவித்துள்ளார் .

அதேவளை அந்த செய்தியாளர் 40000 மக்கள் காயப்பட்டுள்ள முகாம் ஒன்றைபற்றி கூறும் போது  தற்போது அங்கு உயிர் வாழ போதுமான உணவு உள்ளதாகவும் ஆனால் மருந்து போதாமை உள்ளதாகவும் குறித்த அகதி முகாம் 40 நாட்களுக்கு முன்னர் உருவாக்கப் பட்டதில் இருந்து இதுவரை பல சிறார்கள் நோய்களை தடுக்கும் மருந்துகள் இன்மையால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

குறித்த இந்த முகாம்தான் அங்கு இருக்கும் முகாம்களில் சிந்தது என்றும் நேற்று துருக்கிய தூதுவர் அந்த முகாமுக்க செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றும். இன்று இந்தோனேசியா துணை ஜனாதிபதி அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் மிகப் பயங்கரமான கள நிலைமயை வெளிப்படுத்தியுள்ளார் .

வீடியோ பதிவுடன் பிரஸ் டிவி நியூஸ் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

 

 

 

About these ads

Written by lankamuslim

August 12, 2012 at 2:24 am

One Response

Subscribe to comments with RSS.

  1. ஹிஸ்புத் தஹ்ரீர் இந்தோநேசியாவில்ஆர்பாட்டம் நடத்தியதன் விளைவாகவும் இன்று இந்தோநேசியா துணை ஜனாதிபதி மியன்மார் சென்று உள்ளார் அல்லாஹ்வு அக்பர்

    Rauf Ameen

    August 12, 2012 at 2:32 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers

%d bloggers like this: