ஜனாதிபதியின் இப்தாரில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் வருடாந்தம் நடத்தப்படும் நோன்பு திறக்கும் “இப்தார்” வைபவம் நேற்று 09 ஆம் திகதி மாலை அலரி மாளிகையில் நடைபெற்றது.
பெருந்தொகையான முஸ்லிம் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மலேசியாவிலிருந்து இலங்கை வந்துள்ள இஸ்லாமிய அறிஞர் அஸீஸ் அப்துல் காதர் அல் கிலானி மௌலானா ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா- சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களின் உயர் அதிகாரிகளும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.-news.lk











