Lankamuslim.org

One World One Ummah

கிழக்கு தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமா அறிக்கை

with one comment

பல்லின சமூகங்கள் வாழும் நம் நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு நிலவி வந்துள்ளதை நாம் மறந்துவிட முடியாது. இதற்கப்பால் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை பாரிய இன முறுகல்களாக தீவிரமடைய முன்னர் அவற்றுக்கான தீர்வுகளும் சுமுகமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.

எனினும் மிக அண்மைக் காலமாக நாட்டில் மஸ்ஜிதுகள் மற்றும் ஏனைய வணக்கஸ்தலங்களுக்கு எதிராக செயற்பட்டு வருவது தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பலரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது. இதனை நாம் முழுமையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான நடவடிக்கைகள் ஒரு சிறு குழுவினால்மேற்கொள்ளப்பட்டு வருகின்றதே தவிர ஒட்டுமொத்த பெரும் பான்மை சமூகத்தின் திட்டமிட்டப்பட்ட சதியல்ல.

அண்மைக் கால அசம்பாவிதங்களை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட ஏனைய முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆலோசனைகளும் பெறப்பட்டு சுமுகமான தீர்வுகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களில் அனைத்துத் தரப்பும் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வோடும் நடந்து கொள்வது மிக முக்கிய தேவையாகும்.

எனவே, முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் பேசப்படுவதனையும் இனங்க ளுக்கிடையில் கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தமது தேர்தல் மேடைகளை அமைத்துக் கொள் வத னையும் தவிர்த்துக் கொள்ளும்படியும் தொடர்ந்தும் ஒத்ழைப்பு வழங்குமாறும் அனைத்து முஸ்லிம் அரசியல் சகோதரர் களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாகக் கேட்டுக் கொள்கின்றது.

About these ads

Written by lankamuslim

August 11, 2012 at 9:43 am

One Response

Subscribe to comments with RSS.

  1. மாஷா அல்லாஹ் நிதானமான அறிக்கை சரியான நேரத்தில் இனியாவது நம் முஸ்லிம் சகோதரர்கள் முகநூல் தொட்டு இணைய தளங்கள் என எல்லா ஊடகங்களிலும் ஒட்டு மொத்த இனதையோ அல்லது அந்த இனதின் மத பெரியார்களையோ குற்றம் சாட்டுவதையும் இன துவேச கருத்துகள் பதிவதையும் விடுத்து நிதானமாக சிந்தித்து கருதுகளை பதியட்டும் இதனை தன்குறிய பாணியில் சொன்ன அஸ்வருக்கு வீரகேசரியின் முகநூல் பக்கதில் எம்மவர்கள் பதிந்துள்ள கருதுக்கள் சகிக்க முடியாத கேவலமாக இருக்கிறது

    Mohammed Hiraz

    August 11, 2012 at 1:45 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,709 other followers

%d bloggers like this: