Lankamuslim.org

One World One Ummah

PMGGயின் திறந்த இப்தார் நிகழ்வு

with 8 comments

PMGG ஊடகப் பிரிவு : நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த திறந்த இப்தார் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் PMGGயின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தெளஸ் நளீமி மற்றும் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இதனை ஒழுங்கு படுத்தும் பணிகளில் மிகச் சிறப்பாக சூறாசபை உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் ஈடுபட்டிருந்தனர்.இந்த இப்தார் நிகழ்வின்போது இறுதி நேரத்தில் ஏற்பட்ட மழையையும் பொருட்படுத்தாது பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

 

About these ads

Written by lankamuslim

August 10, 2012 at 11:36 pm

8 Responses

Subscribe to comments with RSS.

  1. தேர்தல் வாக்கு வேட்டைக்கான கஞ்சி பந்தலா???

    Mohammed Hiraz

    August 11, 2012 at 3:50 am

  2. உம்ராவுக்கு சென்று புனித மக்காவிலே தனக்கு ஆதரவு தேடி வாக்கு வேட்டை பிரச்சாரம் அரசியல் கட்சிகள் நடத்தினால் ஏற்றுகொள்வோமா? அதுபோன்றுதான் நோன்பு திறக்கும் நிகழ்வும் புனிதமானது அதை ஏட்பாடு செய்வோர் மிக பாராட்ட பட வேண்டியோர் ஆனால் அந்த ஏட்பாட்டுக்கு மத்தியில் வருகை தந்திருபோறிடம் தங்களுடன் போட்டி போடும் ஏனைய அரசியல் கட்சிகள் தனி நபர்கள் அவர்களின் நடத்தைகள் என நாளாவித அரசியலையும் பேசினால் இப்தாரின் புன்னியமே பாழ்

    Mohammed Hiraz

    August 11, 2012 at 8:43 am

  3. ரமழானில் நோன்பு நோக்க சொல்வதுபோன்றே மார்கத்தில் நோன்பாளிகளை நோன்பு திறக்க வையுங்கள் ஏன்டதை கொடுத்து என்றும் சொல்லபட்டிருக்கிறது எனவே நோன்பு திறக்கவைபதும் மார்க்க கடமையாக அல்லாஹ்வின் தூதரின் ஸுன்னாவாக இருக்கிறது தொழுகைக்காக மஸ்ஜித் கட்டி கொடுத்துவிட்டு அந்த மஸ்ஜிதிலே தொழுகை முடிந்ததும் அரசியல் மஸ்ஜிதை கட்டி கொடுத்தவர் பேசினால் எவ்வளவு மோசமான அபிப்பிறாயம் எழுமோ அதேபோன்றுதான் புனிதமான இபாததுகளுக்கு மத்தியில் அரசியல் பேசுவதும் இப்படியான நிகழ்வுகளை ஆளும் கட்சியாகட்டும் எதிர்கட்சிகள் ஆகட்டும் ஏட்பாடு செய்தால் அரசியல் பேச்சது நோன்பாளிகளி நோன்பு திறக்க மட்டும் சிறந்த ஏட்பாடுகளி செய்து கொடுத்தால் அது மிக ஏற்றமாக இருக்கும்

    Mohammed Hiraz

    August 11, 2012 at 8:43 am

  4. இப்தார் என்பது இஸ்லாமிய கடமையான நோற்ற நோன்பை திறக்கும் ஒரு நிகழ்வூ என்பது அனைவரும் அறிந்ததே!

    அண்மைக்காலமாக அரசியல்வாதிகளாலும் சில சுயஇலாபம் கொள்வோராலும், அது ஒரு விழாவாகவூம், அனைத்து முஸ்லிம்களையூம், முஸ்லிம் அல்லாதவர்களையூம் அழைத்துச் செய்யப்பட்டு வருகிறது. உண்மையில் இப்தார் நடத்தப்பட வேண்டும் என்று யாராவது கருதுவார்களாயின், நோன்பு நோற்றுவிட்டு, உண்ண வழியற்ற ஏழைகளை அழைத்து தினமும் நோன்பு திறக்கும் வழிவகைகளை மேற்கொள்ளலாம். அப்படியல்லாதவை தன்சல, தண்ணீர்ப்பந்தல் போன்று போவோர் வருவோருக்குக் கொடுப்பதை ஒத்ததே!

    தர்மம் செய்வதனால் நல்லுறவைப் பேண முடியூம். இது ஈகையின் மாதம் என்பதால், தினமும் முஸ்லிம் அல்லாதவர்களை அழைத்து இரவில் உண்ணக் கொடுக்கலாம். இது சிறந்த நன்மையைத் தரக்கூடியது. வழிப்போக்கர் தர்மத்துக்குஇ ஸக்காத்துக்கு உரியவர்களே!

    மேலும் அந்நியர் இப்தார் வழங்கும் நிலையையூம் தற்போது காணக் கூடியதாக உள்ளது. மார்க்கக் கடமையை ஹலாலான வழியில் உண்டு செய்ய வேண்டிய நிலையில், அந்நியரால் நடத்தப்படும் இப்தாரில் வழங்கப்படும் உணவூ ஹலாலான வழியில் பெற்ப்பட்ட பணத்தால் கொடுக்கப்படும் உணவாக இருப்பதை யாராவது உறுதி செய்ய முடியூமா?

    மார்க்க கடமைகளில் உண்மையான பயபக்தி உருவாவது நோன்பில் மட்டுமே! இந்நிகழ்வூ ஏதோ முஸ்லிம் அல்லாதவர்களுடன் நல்லுறவைப் பேணுவதற்காக நடைமுறைப்படுத்து கிறதாகவூம் கூறப்படுகிறது. முஸ்லிம் அல்லாதவர்களுடன் நல்லுறவைப் பேண எத்தனையோ வழிமுறைகளுண்டு. அது இறையச்சத்தோடு வாழவேண்டிய நோன்பு காலங்களில் தமாஷாக்கள் போன்று செய்யப்பட வேண்டும் என்பதல்ல. இது இறை சாபத்தை வருவிப்பது.

    உங்களால் முடிந்தால் அதிகாலை ஸஹர் வேளை முஸ்லிம் அல்லாதேரை அழைத்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்து அவர்களையூம் வாழ்வில் ஒரு நாள் நோன்பு நோற்க வைத்து நோன்பிலுள்ள நன்மைகளை எடுத்துக் கூறலாமே! இது இறைகடமையை எத்திவைத்த நிகழ்வாகவாவது இருக்கும். ஆனால் உங்களாலும் முடியாது, அவர்களும் வரப் போவதில்லை.

    இல்லாமல் அப்படியே செய்யத்தான் வேண்டுமென்றால்கூட நோன்பு திறந்ததன் பின்னர் இரவூச் சாப்பாடாக, சிற்றுண்டி வைபவமாக, இப்தார் என்ற சொல் பாவிக்காது பொது இடத்தில் நடத்தப்படலாம்.

    பள்ளிவாசல் என்பது அல்லாஹ்வை மட்டும் வழிபடும் இடம். தவிர நமது எண்ணங்களை நிறைவேற்றும் இடமல்ல. எண்ணங்களை வழிபடுவது ஷிர்க்கை வருவிப்பது. இந்நிலை தொடர்ந்தால் எதிர் காலத்தில் என்னென்வோ நிகழ்வூகள் நடக்கும். அதனைத் தடுக்க முடியாத சூழலும் உருவாகும். இப்படியான நிகழ்வூகளால் அதன் புனிதம் கெட்டுவிடுகிறது. பள்ளிக்கு கொடுக்க, கிடைக்க வேண்டிய கௌரவம் குறைவதால் அந்நியர் பள்ளிகளை உடைக்கும் அளவூக்குக் கூட நிலைமை மாறியூள்ளது.

    இறுதியில் தேர்தல் பிரச்சார மேடையாகவூம் இப்தார் ஆக்கப்பட்டுள்ளது கோமாளித்தனத்தின் அதி உச்சநிலை. இதன் பின்னர் இன்னும் என்னவெல்லாம் நடக்க உள்ளதோ? அல்ஹம்துலில்லாஹ்.

    nizamhm1944

    August 11, 2012 at 10:19 am

  5. யாராயினும் புனிததில் சகதியை கழக்க வேண்டாம் இப்தார்ருக்கு வந்து காதிருக்கும் மக்களிடம் அரசியல் பேசுவதை தவிர்து நோற்ற நோனபை அல்லாஹ்வுக்காக உங்கள் இப்தாரின் பெயரால் திறந்து தன் தாகத்தையும் பசியையும் போக்கிய பின்னர் மஹ்ரிப் தொழுகையையும் உங்கள் ஏட்பாடுகமைய அவ்விடதிலேயே இமாம் ஜமாஅத் ஆக தொழுதுவிட்டு

    அவர்கள் ஜோலிகளுக்கு சென்றுவிடும் வசதி இருந்தும் அப்படி செல்லாமல் நீங்கள் சொல்லும் உங்கள் அரசியல் கருத்துகளை செவிமடுத்தே ஆக வேண்டும் என அவர்கள் வீற்றிருந்தால் அதன்
    பின்னர் அரசியல் பேசுங்கள் யார் தடுதார் யார் அதை பாதகம் என்பார் அடுத்த தொழுகையை உங்கள் அரசியல் பேச்சுகள் ஆகிரமிக்காதவரை???

    Mohammed Hiraz

    August 11, 2012 at 10:37 am

  6. ஆக ஒட்டுமொத்தத்தில் உயர் நோக்கங்களையுடைய நமது ரமழானின் இந்த இப்தார் நிகழ்வுகள் வெறுமனே அரசியல்வாதிகளால் நடாத்தப்படுகின்ற ஒரு பஷன் ஷோ ஆக மாறியிருப்பது குறித்து நாம் கவலையடையவேண்டியுள்ளோம். தேர்தலுக்காக மாத்திரமே இந்த ஏற்பாடுகளைச் செய்கின்றார்கள். ஒரு கட்சி இதனை ஏற்பாடு செய்தால் அடுத்த கட்சியும் போட்டிக்காக இப்தார் ஏற்பாடு செய்கின்றனர். இதனால் நோன்பின் மகிமைக்கும் ஒரு பங்கம் ஏற்படுவதுண்டு. நிச்சயமாக அடுத்த வருடம் இவர்களில் எவரும் இப்தார் ஏற்பாடுகளை மேற்கொள்ள மாட்டார்கள். அப்படியாயின் வாக்குகளை மையமாக வைத்து இவை அரங்கேறுமானால் இவர்களது நிய்யத்தில் தூய்மை இல்லை என்பதே அர்த்தமாகும்.

    Ossan Salam - Doha

    August 11, 2012 at 3:41 pm

  7. அன்பர்களே!
    நீங்கள் மேலே கூறியிருக்கும் கருத்துக்களில் இருந்து சமூகத்தில் மஸ்ஜிதின்பங்கு என்ன என்பதை அறிந்தவர்கள் தான்; என நம்புகின்றேன். பள்ளிவாசல் புனிதமானது. சுயநலன்களை நிறைவேற்றிக் கொள்ள, அது பாவிக்கப்படலாகாது. என்பதில் நானும் உடன்படுகின்றேன்.அதேநேரம்,ரசூலுல்லாஹ் பள்ளியை தொழகைக்காக மாத்திரம் பாவிக்கவில்லை என்பதை நாம் அறிவோம். அது என்றைக்கும் ஒரு சமூக மத்திய நிலையம் ஆகும்.
    நபியவர்கள் தம் அரசியலை பள்ளியில் இருந்து மேற்கொண்டு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை வரலாறு நமக்குச் சொல்கின்றது. எனவே தற்போது பள்ளிகளில் அரசியல் செயற்பாடுகளை மேற் கொள்பவர்களது அரசியல் தூய்மை பற்றி நாம் இங்கு பேசத்தேவையில்லை.ஆனால் அரசியல் பள்ளிக்கு அந்நியமானதல்ல என்பதை மனங் கொள்வோம்.

    roshaen

    August 11, 2012 at 8:22 pm

    • சமூகத்தை பற்றி சமூக நல் இனக்கத்தைபற்றி வளர்ச்சி திட்டங்கள் பற்றி அடுதோறின் உரிமை தனது இயலாமை ஒற்றுமை சமாதானம் அடுத்தவர்களின் உயர்தன்மை நீதி நேர்மை இவைகளை பற்றி கதைகவும் கழந்துறவாடவும் ஆலோசனை செய்யவும் தான் இஸ்லாமிய அரசியலில் அல்லாஹ்வின் ஆலயங்கள் பயன்படுத்தபடவேண்டியவை அடுத்தவனை இழந்து இழிவுபடுத்தி அவன் குறைகளை அம்பலபடுத்தி பொய்யை இட்டுகட்டை சண்டை மூட்டும் பேச்சுக்கள் என சாக்கடையையும் சகதியையும் கூவத்தையும் பேசும் சமகால அரசியலுக்கு மஸ்ஜிதுகளின் மலகூடதில் கூட இடம் ஒதுக்க அனுமதியில்லை

      Mohammed Hiraz

      August 12, 2012 at 1:19 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,821 other followers

%d bloggers like this: