Lankamuslim.org

One World One Ummah

ரங்கிரி தம்புள்ள ரஜமகா விகாரை புனித பூமி எல்லை மீள் நிர்ணயம்

with one comment

ரங்கிரி, தம்புள்ள ரஜமகா விகாரை புனித பூமியின் எல்லை நிர்ணயம் செய்வதற்கும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக நிர்ணய பணிகளை முன்னெடுக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தி.மு. ஜயரத்ன சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு தகவல், ஊடகத்துறை அமைச்சில் நேற்று காலை இடம்பெற்றது. அமைச்சர் இங்கு மேலும் தெரிவிக்கையில்:-

நகர மற்றும் கிராமிய நிர்ணய சட்டத்தின் கீழ் தம்புள்ளை ரஜமஹா விகாரை பிரதேசத்தை அபிவிருத்திக்கு உட்படுத்த வேண்டும் என 1981ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அந்த புனித பூமி பிரதேசம் இதுவரை காலமும் எல்லை நிர்ணயத்திற்கு உட்படுத்த முடியாது போனதை அடுத்தே அதன் எல்லையை நிர்ணயித்து அபிவிருத்திக்கு உட்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.-ஸாதிக் ஷிஹான்:தினகரன்

About these ads

Written by lankamuslim

August 10, 2012 at 12:10 am

One Response

Subscribe to comments with RSS.

  1. .எல்லை குறிக்கப்பட முன்னரே தொல்லை கொடுக்கப் புறப்பட்டு விட்டார் பௌத்த துறவி.

    எல்லை நிர்ணயிப்போருக்குத் தொல்லை கொடுக்காதிருந்தால் சரி. இல்லையேல் எல்லாமே புனிதம் பெற்று மனிதம் வெளியேற்றப்படும் கணிதம் நிறைவூறும்

    nizamhm1944

    August 11, 2012 at 10:00 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,821 other followers

%d bloggers like this: