வெகுஜன ஊடகவியலாளர் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது
அபூ றோஷி, F.M.பர்ஹான்: ஏறாவூரில்ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செய்தியாளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன ஊடகவியலாளர் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வியாழக்கிழமை (9.8.2012)யன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில ஊடகவியலாளர்களுக்கு தொலை பேசி மூலமாக வெள்ளிக்கிழமை(10.8.2012) யன்று மாலை 8மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செய்தியாளர் மாநாடு ஒன்று ஏறாவூரில் இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண சபையின் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை வேட்பாளருமான ஹாபீழ் நசீர் அஹமட் சில ஊடகவியலாளர்களுக்கு நேரடியாக தொலைபேசியில் அழைத்திருந்தார். அதே போன்று அவர் சார்பில் இன்னும் சில ஊடகவியலாளர்களுக்கு அவருடைய தேர்தல் நடவடிக்கைக்கு பொறுப்பான ஒருவர் அழைத்திருந்தார்.
அந்த வகையில் வெள்ளிக்கிழமை மாலை 7.45 மணிக்கே உரிய இடத்திற்கு சென்ற பிரதேச செய்தியாளர்கள் 8.30 மணிவரையும் காத்துக்கொண்டு நின்றனர்
பின்னர் 8.30 மணியளவில் உரிய இடத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் வெளியேற முற்பட்ட போது அங்கு நின்ற ஊடகவியலாளர்கள் சிலர் அமைச்சர் ஹக்கீமை அனுகி செய்தியாளர் மாநாடு ஒன்றுக்காக அழைக்கப்பட்டிருக்கின்றோம் செய்தியாளர் மாநாடு நடை பெறுமா என கேட்ட போது அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அமைச்சர் ஹக்கீம் சர்வதேச ஊடகவியலாளர்கள் நிற்கின்றனரா எனக்கேட்டுள்ளார்.
இதையடுத்து ஹாபீழ் நசிர் அஹமதிடம் செய்தியாளர் மாநாடு பற்றி ஊடகவியலாளர்கள் கேட்டனர் அதற்கு ஹாபீழ் நசீர் ஊடகவியலாளர் மாநடு இல்லை அதை ரத்து செய்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்
இதை ஏற்கனவே நீங்கள் அறிவித்திருக்கலாமே என ஊடகவியலாளர்கள் கூறியதுடன் தாம் ஏமாற்றப்பட்டது குறித்து கவலையையும் அங்கு நின்ற ஊடகவியலாளர்கள் அவரிடம் தெரிவித்தனர்.
அதே நேரம் ஒரு பொறுப்புவாய்ந்த கட்சி என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதையும் ஹாபீழ் நசீர் அஹமதிடம் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இது பற்றி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூதிடமும் கூறிய போது தனக்கு இந்த ஊடகவியலாளர் மாநாடு பற்றிய எந்த தகவலும் தெரியாது எனக்குறிப்பிட்டார்.
சர்வதேச ஊடகவியலாளர்கள் உள்ளனரா என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீம் பிரதேச ஊடகவியலாளர்களிடம் கேட்டதானது பிரதேச ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தும் ஒரு பேச்சாக கருத வேண்டியுள்ளது.
தம்புள்ள பள்ளிவாயல் உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீம் காத்தான்குடியில் வைத்து கண்டனம் வெளியிட்ட போது அதை சர்வதேச ஊடகங்கள் வரை கொண்டு சென்றவர்கள் பிரதேச ஊடகவியலாளர்கள் என்பதை அமைச்சர் றஊப் ஹக்கீம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றோம் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.








பொதுவாகவே ஊடகவியலாளர் மாத்திரமல்ல சாதாரண கட்சி அபிமானிகள் ஆதரவாளர்கள் அல்லது ஆர்வலர்கள் கூட கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லும் தலைமைத்தவ பண்பு நிச்சயமாக காங்கிரஸ் தலைவரிடம் காண முடியாது ! அதனை இங்கு கட்டாரிலும் நாம் அவதானித்தோம். நாம் கேள்விகள் கேட்டால் சிங்களத்தில் கூறப்படும் “கொஹெத யன்னே மல்லே பொல்” தான் பதிலாக வருகின்றது. கேள்விகளை உள்வாங்கும் மனோதைரியம் இவரிடம் இல்லையா ? அல்லது யாரும் தன்னிடம் கேள்வி கேட்கக் கூடாது ? தான் பேசுவதை மாத்திரம் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற வரட்டு எண்ணமா ? அல்லது திமிரா ? ஒன்றும் புரிவதில்லை. ரஊப் ஹக்கீம் என்ற தனிமனிதருடன் நமக்கு எந்த விவகாரமும் கிடையாது. ஆனால் முஸ்லிம் கட்சியின் தலைவர் என்ற நீதி அமைச்சர் என்ற நபரின் சமூக வகிபாகம் என்ன என்பதே விவகாரம். தேர்தல் காலத்தில் மாத்திரம் தான் புரட்சிகளும் தனித்துவ போராட்டங்களும் வெடிக்க வேண்டுமா ? ஏனைய காலங்களில் அது வெடிக்கக் கூடாதா ? இப்படி உள்ளூர் ஊடகத்துறையினரை அவமதித்து விட்டு வெளிநாட்டு ஊடகங்களில் மாத்திரம் படம் காட்டுவது தான் இவரது கலையா?
Ossan Salam - Doha
August 11, 2012 at 2:56 pm
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நடந்த அநீதிக்கு ஹக்கீம் நானா மன்னிப்பு கேட்கமாட்டார்.ஏனெனில் நாமெல்லாம் சோனிகள் என்பதால்….அவரது பின்னால் செல்ல தாருஸ்ஸலாம் சொத்துக் குவிப்பாரும் சேர்ந்துவிட்டாரே தம்புள்ள விடயத்ததை அரசியலாக்கினால் தானே,முஸ்லிம் காங்கிரஸ் வாழ முடியும்,..இன்று தெரியாமல் காவியை பத்தி பேசி போட்டார்.அமைச்சரவை கொதித்து போய் இருக்கின்றது…..அமைச்சராக இருக்கும் ஹக்கீமின் உரைகளை எழுதுபவர்கள் காத்திரமாக செயற்படுங்கள்,நீங்கள் எழுதிக் கொடுப்பதை அவர் வாசிக்கும் கிளப் புள்ளையாக மாறிவிட்டார்…….
ஊடகவியலாளர்களே,நீங்கள் ஏன் கருவேப்பிலையாக இருக்கின்றீர்கள்,அவர்கள் கூப்பிடும் இடத்துக்கு போகின்றீர்கள்,தேவையெனில் உங்களை வந்து அவர்கள் கூட்டி போகட்டும்…தயாராகுங்கள்..சமூகத்ததை ஏமாத்தி மீண்டும் கிழக்கை தாரை வார்க்கும் ஹக்கீம் போன்ற தலைமைகளுக்கு பாடம் புகட்டுவோம்…….
m.sm.jawfer khan -kalmuani
August 12, 2012 at 12:21 am