இன ரீதியான தேர்தல் பிரசாரம்: இது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இனரீதியான தேர்தல் பிரசாரங்களுக்கும், இனவாத அரசியல் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காதென அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்
.கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் இன ரீதியான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அதன் ஓர் அங்கமாகவே அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைஸல் முஸ்தபா ஆகியோர் அந்தப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று கூட் டங்களை நடத்தி மக்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.
தேசியக் கொள்கை, அபிவிருத்தி மற் றும் ஜனநாயக உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தியே மக்களிடம் வாக்குகளை கேட்க வேண்டும்.அரசாங்கம் தமது பிரசார நடவடிக்கைகளை அந்த அடிப்படையிலேயே முன்னெடுத்துச் செல்கிறது. சில அமைச்சர்களும் இன ரீதியான தேர்தல் பிரசாரங்களில் ஈடு படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று தெரிவித்துள்ளார் .








Exactly Mr. Minister Rambukwella.
“தேசியக் கொள்கை, அபிவிருத்தி மற்றும் ஜனநாயக உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தியே மக்களிடம் வாக்குகளை கேட்க வேண்டும்”. That’s what they are talking about, national policy of demolishing minorities’ religious places and denying their democratic rights etc. Why worry then?
If the Eastern candidates should speak different things then change your policies immediately. Let minorities live in calm without fear of hatred then you will see the candidates talking and praising the government, President and even you Hon. Minister.
Ahmed Nadvi
August 10, 2012 at 7:17 pm