Lankamuslim.org

One World One Ummah

வ.கி முதலமைச்சர்கள் இணைந்து கையொப்பமிட்டால் வடக்கு கிழக்கு இணைத்துவிடும்

with 6 comments

கல்முனை செய்தியாளர்: வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமானால் முஸ்லிம்கள் நடுத்தெருவில் விடப்படுவார்கள். கிழக்கில் தமிழ் முதலமைச்சர் வந்தால், வடக்குக்கான தேர்தலின் பின்னர் வடக்கில் வருகின்ற தமிழ் முதலமைச்சரும் இணைந்து கையொப்பமிட்டால் 13வது திருத்தச்சட்டத்திற்கு அமைய இலகுவாக வடக்கு கிழக்கை இணைத்துவிடலாம். எனகிழக்கு மாகாண சபைத் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் தெரிவித்தார்.

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய பொத்துவில் கடற்கரைப்பள்ளிவாயல் புனர் நிர்மாணத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வில் அண்மையில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,

தமிழ் தேசிய கூட்டமைப்பு, மு.கா. இணைந்துவிட்டால் வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகிவிடும். அவ்வாறு இணைத்துவிட்டார்கள் என்றால் மன்னாரில் ஒருசிறிய கிராமத்திலே முஸ்லிம்களிடம் ஒப்பந்தம் செய்து எடுத்ததை மீண்டும் கொடுப்பதற்கே மறுக்கப்படுகிறது. நியாயத்தை கேட்ட அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு எதிராக பல்வேறு சதிவலைகள் பின்னப்படுகிறது. இந்நிலையில் வடக்கும் கிழக்கும் இணைந்தால் நிலைமை என்னவாகும் என்பதை முஸ்லிம்கள் நன்கு உணர வேண்டும். இதனை முறியடிப்பதற்கு அரசாங்கத்திற்கு வாக்களிப்பது முஸ்லிம்களுக்கு கட்டாயக் கடமையாகிறது என்பதை எம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த முயற்சியுடன்தான் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரசும் ஒற்றுமைப்பட்டு வெளிநாட்டு அழுத்தங்களுடன் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களை காட்ட்டிக்கொடுக்க முனைகிறது. வடகிழக்கை இணைத்துக் கொடுத்து நாங்கள் சிறுபாண்மையிலும் சிறுபாண்மையாக மாறினால் எங்களது நிலை என்ன? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இன்று வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் வந்தால் சட்டப்படி இலகுவாக இரண்டையும் இணைத்து விடலாம் என வெளிநாடு யோசிக்கிறது. அரசாங்கம் பலப்படுத்தப்பட்டால் அரசாங்க சார்பான ஒரு தமிழர் அல்லது முஸ்லிம் முதலமைச்சராக வந்தால் இந்த இணைப்பை இல்லாமல் செய்யமுடியும். நானும் எமது மக்களின் உரிமைகள் பறிபோய்விடுவதை தடுப்பதற்காவே இன்று கிழக்கு தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து வெற்றிலையில் போட்டியிடுகின்றேன். ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலமே எமக்கு வரவுள்ள ஆபத்தை தடுக்க முடியும்.

மாகாண சபையின் அதிகார எல்லைக்குள் எமது அன்றாட நிர்வாக அலுவல்கள் பல இருந்தும் அவற்றினை உரியவாறு நிவர்த்தி செய்வதில் எந்த மாகாண சபை உறுப்பினர்களின் பங்களிப்பு எமது மக்களுக்கு திருப்தியாகக் கிடைத்திருக்கின்றதா? என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். இதில் மிக முக்கியமாக ஆசிரியர் இடமாற்றத்தின் போது கைக்குழந்தைகளுடன் எமது ஆசிரியைத் தாய்மார்கள் துயருடன் அலைந்தபோதும் இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு எட்டப்படாமல் தொடர்கின்ற அவல நிலை இன்றும் காணப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் இன்று எம்மத்தியில் காணப்படுவதனால் அவற்றை எதிர்கொள்வதற்காக மக்கள் எமக்கு ஆணை தர வேண்டும்.

மாகாண சபையின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் நிர்வாகத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாத மக்களாகவே நாம் இருக்கும்படி கடந்த எமது மாகாண சபை உறுப்பினர்கள் செயற்பட்டார்கள் என்பது மிகவும் வேதனை தருகின்ற ஒரு விடயமாகும். அத்தகையவர்களை ஓரங்கட்டுகின்ற ஒரு தேர்தலாகவும் மக்கள் இத்தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

About these ads

Written by lankamuslim

August 8, 2012 at 9:28 am

6 Responses

Subscribe to comments with RSS.

  1. appa kilakku cm uva cm sain pannina irandum inaima sir neenga oru lowyer lo sollunga

    iqbal

    August 8, 2012 at 11:40 am

  2. What a suprise? Mr.Lawyer has simplified the mearger process. He can be appointed as a special envoy to sort the Palastenian-Isreali problems out.

    Ahmed Nadvi

    August 8, 2012 at 2:43 pm

    • இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் அதன் விளைவான அரசியல் திறுத்ததையும் படிங்க அம்பி!!! பாவம் நீங்க சட்டம் அறிந்த உங்க தலைவர் உங்க வாக்க பெற்றே உங்கள வடகோட இணைத்து சிறுபான்மையாக்கும் சூதுவாது அறியாமல் குழந்தை தனமாக இன்னும் இருக்கிறீர்கள் தென் இலன்கை மனிதருக்கு கிழக்கு வடக்குடன் இணைவதால் ஏது நஷ்டம் அவருகென்ன கவளை அவரது குடும்பமா உறவுகளா துண்ப படபோவது???

      Mohammed Hiraz

      August 8, 2012 at 5:44 pm

  3. @Iqbal &Ahmed, He says according to the 13th amendment the above merger can happen so he must be correct. Please read yourselves about the 13th Amendment act before you make silly comments. I have not read it and nor I know the lawyer.

    Gaus

    August 8, 2012 at 3:03 pm

  4. tambi nijam athe welinattu aluttatthina kidatta pajirowi witthu appdiye austaraliwil wellitholulla penuukaludan sallpam irunthuwittu potkurikku muslim kankirasin nationanal list empiyyeum petru pin govermendula ministri postum petru konda neenka makkaluku sewa seyyaporika intha purudawallam ini wekathu thambi nijam etahwathu mitcha sotcham australiawil iruntha atha parunko tankam

    firthous

    August 9, 2012 at 12:04 am

  5. mr nijam u are very clewer pls joint nasa in usa looking scendist as like u because u heeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

    firthous

    August 9, 2012 at 12:12 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers

%d bloggers like this: