மஹிந்த ஆட்சியின் கீழ் ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை:அஸ்வர் ௭ம்.பி
யாரோ கல்லை ௭றிந்துவிட்டு குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் நாட்டிலுள்ள ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சகலமத சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது ௭ன்பதை சவால்விட்டுக் கூறுகிறேன் ௭ன்று ஆளும் கட்சி ௭ம்.பி.யான ஏ.௭ச்.௭ம். அஸ்வர் நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காடு பேணல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். மன்னார் மாவட்டத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மீனவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு செல்ல முற்படுகையில் அங்கு அவர்களுக்கு சொந்தமான இடங்களைக் கொடுக்காது மீண்டும் விரட்டுவது கொடுமையானதாகும்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைக் கேட்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மன்னார் மீனவர்களுக்காக இந்த பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியுமா ௭ன சவால் விடுக்கிறேன். மன்னார் முஸ்லிம் மீனவர்களின் நிலைமையினை நோக்குகையில் அன்னமிட்ட வீட்டில் கன்ன மிட்ட பாவிகள் மண்ணாகப் போவார்களே ௭ன்ற பாடலே ஞாபகத்தில் வருகிறது. இங்கு முஸ்லிம்களுக்கு ௭திராக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பாரிய சதியொன்று அரங்கேற்றப்படுகின்றது. அதன் ஒரு அங்கமாகவே மன்னார் வழக்கின்போது இடம்பெற்ற சம்பவமாகும். இந்த சதியில் நீதி வழங்க வேண்டியவர்களும் பங்குதாரர்களாக உள்ளனர்.
முஸ்லிம்களுக்கு ௭திரான சதி தொடர்பிலும் அதனுடன் தொடர்புபட்டிருப்பவர்கள் தொடர்பிலும் அரசு அறிந்து வைத்துள்ளது. யாரோ கல்லை ௭றிந்து விட்டு குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் இந்நாட்டில் ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு அனைத்து மத உரிமைகளும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன ௭ன்றார்.-தகவல் வீரகேசரி








தம்புள்ள பள்ளி அதே இடத்தில் இருக்கும் , இன்று பள்ளிகளுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு கொண்டுவரப் படும் என்று ஜனாதிபதி அறிக்கை விடட்டும் அப்போது உங்கள் பேச்சில் ஏதோ உண்மை இருப்பதை ஒத்துக்கொள்ளலாம்
ACM.Saleem
August 8, 2012 at 10:12 am
Ya Aswar! you are the No.1 enemy of Sri Lankan muslims!! since you joined with R. Premadasa you always justify their anti-muslim actions and bow to them and always ..againt good muslim politicians like M.H.M. Ashraff. we have record how you (and your colleagues Mansoor, Mohammed, Kathar) were … against Ashraff in R. Premadasa, Chandrika government.
i warn you to fear Allah at least in this holy month of Ramadhan!!!
please keep your mouth shut!! it is 100 times better than you speak!!!!
your buddy
August 8, 2012 at 11:01 am
முஸ்லிம்கள் பள்ளி வாயில்களில் சில சமயங்களில் ஒன்று கூட முடியாத அவல நிலை உள்ளது. அதற்கும் பிக்குகளின் அனுமதி எடுக்க வேண்டும். இந்நிலை பற்றி இந்த ஜனாதிபதி எந்த விடயமும் சொல்லவில்லையே! மௌனமாக இருப்பதும் சம்மதத்திற்கு அறிகுறி என்றே சொல்ல முடியும்… அரசியல்.. அரசியல்…
jiff
August 8, 2012 at 11:11 am
Buriyani speaks……………!
bis
August 8, 2012 at 11:16 am
….. UNP kaaranaga irunthu maraniththirunthal… unathu pathilgal
1. unath imaam ? Ranil vickramasinghe
2.unathu kibla ? sri koththe
3.unathu maarkkam ? UNP ( national list )
aTHE VELAI SLEP aaga irunthal…
1. unathu imam ? rajapakshe
2.unathu kibla ? alari maaligai
3.unathu maarkkam ? SLFP ( national list )
N…………………………………………………………………………………
yaazmin azhar
August 8, 2012 at 12:48 pm
மக்களுடைய வாக்குகளைப்பெற்று அரசசபைகளில் இருந்தால்தானே உங்களுக்குப் புரியும் மக்களின் பிரச்சினைபற்றி. இனவாத அரசாங்கத்திற்கு கூஜா தூக்கி தேசியப்பட்டியில் எம்பியாக சாகும்வரை இருப்பதற்கு உங்களைப் போன்றவர்களுக்கு பேரினவாதிகளின் கஞ்சிதான் கடைசிகாலம் வரை ரூசிக்கும்.
புனித நோன்பை நோற்றவர்களாக பொய் சொல்லி பட்டங்களுக்காகவும், பதவிகளுக்காகவும் இலங்கைப் பள்ளிவாயல்களின் இருப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தை மறைக்கும் வகையில் அவ்வாறு பிரச்சினையில்லை என்று ஆளுக்காள் கருத்துரைக்காதீர்கள். இதனை அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றோம்.
இல்லையேல் இன்ஷா அல்லா மறுமையில் அல்லாஹ்விடம் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
புனித நோன்பு காலம் என்றுகூடப்பாராமல் பள்ளிவாயல்கள் ஆங்காங்கே பேரினவாதிகளால் சுற்றிவளைக்கபட்டு முற்றுகையிடப்படுகின்றன். மக்களின் அன்றாட தொழுகை நடவடிக்கைகள் கூட பாதிக்கப்படுகின்ற நிலை உருவாகியிருக்கும் இச்சந்தரப்பத்தில், இதுதொடர்பில் எதுவித உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது காலம் கடத்துகின்ற அரசாங்கத்திற்கு வாக்காலத்து வாங்கினால் …………………………………………………………………………………….
nassehaa
August 8, 2012 at 2:16 pm
நீங்கள் கூறும் குற்ற சாட்டு தொடர்பில் இதுவரை எந்த போலிஸ் முறைபாடும் பதியபடவில்லை மக்கள் போலிஸுக்கு பதில் உங்களிடம் முறை இட்டு இருக்கிறார்களோ???
Mohammed Hiraz
August 8, 2012 at 5:47 pm
இவர்களைப் போன்றோர் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று சொல்வதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் சமுகம் வெட்கித்து தலைகுனிய வேண்டும். இவர்களை முஸ்லிம் சமூகத்திலிருந்தே விளக்கி ஒதுக்கி வைக்க வேண்டும்
அமைச்சர் அவர்களே! இத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கின்றீர்கள்,எமக்கு (இலங்கை முஸ்லீம்களுக்கு) சொல்லும்படி எதை செய்துள்ளீர்கள் . ஒரு குறிகிய காலத்தி மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் எமக்கு(இலங்கை முஸ்லீம்களுக்கு) எத்தனையோ உரிமைகள் சலுகைகள் பெற்றுக்கொடுத்தார்.அதைகூட அன்று உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அப்படியிருக்க உங்களிடம் எமது சமூகத்துக்காக எதையும் செய்வீர்கள் அல்லது பேசுவீர்கள் என்று எதிர்பார்க்க முடியாது.இதைத்தான் இன்றுவரை செய்துகொண்டு இருக்கின்றீர்கள்.
ஜனாதிபதியிடம் எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பது மட்டும்தான் உங்களின் குறிகோலே தவிர, சமூகப் பற்று அல்ல.சமுகப் பற்று அல்ல,,,,,,
Abu Ammar
August 8, 2012 at 3:37 pm
தீகவாவிக்கி சட்டபடி விஸ்தீரனமான காணி ஒதுக்கி அதை முறைபடி ஜுஃம்ஃஆ நாளில் ஜுஃம்ஃஆ நேரத்தில் தாமரை தட்டேந்தி தீகவாவி விகாரை சென்று கை அளித்தவரும் அதே அஷ்ரப்தானுங்க (அன்று அவர் பிரயாணியாக இருந்ததால் கடமை நிமித்தம் பன்சலைக்கி செல்ல ஜுஃம்ஃஆ தொழவில்லை என நல்லென்னம் வைபோம்)
Mohammed Hiraz
August 8, 2012 at 5:50 pm
சமுகத்திக்கு பல நன்மைகள் செய்த மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் என சொல்ல வர இல்லை (அல்லா அன்னாரின் பாவங்களை மன்னிப்பானாக). ஆனால் எமது சமூகத்தின்பால் எந்த அக்கறையும் இன்றி தனது ஜனாதிபதி விசுவாசத்திற்கு மாத்திரம் நினைத்த நேரத்தில் நினைத்தமாதிரி நாக்கை பிரட்டி பிரட்டி பேசும் அமைச்சர் அஸ்வர் போன்றோருக்கு , எம் சமூகத்தைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
அபூ அம்மார்
August 8, 2012 at 6:24 pm
அஷ்ரபேயே அல்லாஹ் மன்னிக்க ஆதரவு வைக்கையில் அஸ்வருடைய பாவத்தை அல்லாஹ் மன்னிக்க போதுமானவனே ஏனெனில் அஸ்வர் இதுவரை ஜும்ஃஆ தினத்தில் ஜும்ஃஆ நேரத்தில் ஜும்ஃஆவுக்கு செல்லாமல் எந்த பன்சலைக்கும் மலர்தட்டு சுமந்து செல்லவில்லை அல்லவா?
Mohammed Hiraz
August 8, 2012 at 11:28 pm
நல்லது செய்த ஒருவர் மரணித்தால், அவர் செய்த பிழைகளுக்கு மன்னிப்பு கேட்பது எமது கடமை. ஆனால் உயிருடன் இருப்பவர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு திருந்துவதற்கு அவருக்கு இன்னும் அல்லாஹ் அவகாசம் கொடுத்துள்ளான். அதை அவருக்கு உணர்த்த வேண்டும்.
அரசியலில் தர்க்க ரீதியாக பேசுவது போன்று , மார்க்க விடயங்களில் பேசாது ,இதில் நிதானப் போக்கை கையாள வேண்டும். சில வேளையில் மார்க்கம் தர்க்கத்திக்கும் அப்பால் உள்ளது.
Abu Ammar
August 9, 2012 at 4:53 am
அஸ்வர் போன்றவர்கள் எமது சமூகத்தின் ………………
அதாவுல்லா போன்றவர்கள்…………. தனது சுயலாப அரசியலுக்காக எதையும் பேசுவார்கள்…….. மக்கள் என்ன முட்டாள்களா…………. உங்களுக்கு இருக்கிறது மக்களின் தேர்தல் மூலமான பதில்
Abi
August 9, 2012 at 5:22 am
நமக்கு நல்லதாக படுவது அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கெடுதியாக தீங்காக பட்டு விட்டால் என்ன செய்வது அப்படி அதட்கு சிபார்சு செய்து அவர்களுக்காக மன்னிப்பு கோறியதும் நமக்கு வினையாகி விடுமே
Mohammed Hiraz
August 9, 2012 at 9:45 am
அல்லா ஒருவனே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பவன் பொறுத்துக் கொண்டால் அவனது தீர்ப்பு நிச்சயம் கிடைக்கும்.
Imam Yaseem
August 8, 2012 at 4:55 pm
எப்ப நாம பத்துவீதமானவங்க கூட ஸுபஹ் தொழுக்கையை நிலை நிறுத்த மஸ்ஜிதுக்கு செல்லாத நிலமையிலா??? சிகரட் மதுவைபோலவே பச்ச ஹராம் என்று அறிந்திருந்தும் அது ஹராமென்ற உணர்வே இல்லாமலே நம் சமூகத்தில் விட்பதும் வாங்குவதும் அதட்கு துணைபுறிவதுமென மஸ்ஜிதுகளுக்கு சொந்தமான கட்டிடங்களே பாவிக்கபடும் நிலையிலா???
Mohammed Hiraz
August 8, 2012 at 5:53 pm
well said bro!he is the one who is “…………”among us.first of all,we should get to know about people those who are “…….”among us and their statements to be condemned by Ulamas.Ya Allah!Save us from these kind of “cunning ideas!!!
Mohamed
August 8, 2012 at 4:58 pm
Minister Azwer means ……….. and …………
Ali.sm
August 9, 2012 at 6:52 am
பள்ளிவாசல் சம்பவங்களை மறுத்து அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லும் அரசியல்வாதிகளும்,சுயலாப அரசியல்வாதிகளின் தொண்டர்களுக்கும் நான் சொல்லவிரும்புவது என்னவென்றால் நீங்கள் மறுமையில் குருடர்களாக எழுப்பபடுவீர்கள்.பள்ளிவாசல் சம்பவங்களைஎதிர்க்காமல் இருந்தவர்கள் ஊமைகளாகவும் எழுப்பபடுவீர்கள் என்ற இரு எச்சரிக்கைகளை இங்கே பதிவிட விரும்புகிறேன்.
Haniff Seyed Ibrahim JP
August 12, 2012 at 3:54 pm