பிக்குகளின் அடாவடித்தனதடுத்தை நிறுத்த சிறுபான்மையினர் ஒன்றிணைய வேண்டும்
அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ௭ன யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பௌத்த ஒற்றையாட்சி நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அரசு சதி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஆரம்பமாகவே தமிழ், முஸ்லிம் சமூகங்களை இலக்காகக் கொண்டு அரசு நயவஞ்சக செயற்பாடுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இத்தகைய அரசின் சதி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பேரினவாத, மதவாத அடாவடித்தனங்களை சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக கட்டவிழ்த்து விட்டுள்ள அரசாங்கம் அதற்கான தூண்டுதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் அமைச்சர்களாக அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் போதும் அரசின் இலக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மீது ஒரே வகையாகவே உள்ளது.
இந்து ஆலயங்கள் மீது பௌத்த பேரினவாதம் முன்னெடுத்து வரும் அடாவடித்தனங்கள் இன்று முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பௌத்த பிக்குகள் முன்னின்று நடத்தும் இவ் அடாவடித்தனங்களுக்கு அரசின் ஆசீர்வாதமும் மறைமுகமாக கிடைத்து வருகின்றது.
இத் தொடரின் அடிப்படையிலேயே பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் பாணமை பிள்ளையார் ஆலய விக்ரகமும் உடைத்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆதிக்க வெறியாட்டம் மூலம் நாட்டை பௌத்த சிங்கள ஒற்றையாட்சி நாடாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒற்றையாட்சி ஆதிக்கம், பௌத்த இனவாதம் மூலம் இலங்கை முழுவதும் சர்வாதிகார முடிசூடா மன்னன் ஆட்சி முறைமைக்கு இட்டுச் செல்லும் நிலைமை உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே சிறுபான்மையின மக்களின் மதச் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார் .








உங்கள் கட்சிகள், உங்கள் போராளிகள் அனைவரும் முஸ்லிம்களுக்குச் செய்தவைதான், அவர்கள் தமிழ் பேசும் இனமாக இருந்தாலும் தனித்துவமாக வாழ நேர்ந்தது.
தந்தை செல்வா முதல் தம்பி பிரபா வரை அனைவரும் முஸ்லிம்கள் விடயத்தில் நடந்து கொண்டது ஓரே மாதிரியான அடிப்படையே!
அரசியல்வாதிகள் செய்ததற்காக எப்படி நாம் தமிழரைக் குறை கூறவில்லையோ, அப்படியே தற்போதைய காவியூடை தரித்தோர் செய்யூம் அராஜகங்களுக்காக சிங்கள சகோதரரைக் குறைகூறவில்லை.
என்றும், எப்போதும் இலங்கை முஸ்லிம்கள் சிங்களவருடனும், தமிழருடனும் சக வாழ்வை விரும்பி அந்யோண்யமாகவே வாழ்ந்து வருகின்றனர். இனியூம் அதையே பேணுவர்.
இந்த நாட்டில் அண்மைக் காலங்களில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் அரசியல்வாதிகளாலும் மதாச்சாரியார்களாலுமே ஏற்படுத்தப்பட்டவை அதற்காக சிங்களவரோ தமிழரோ முஸ்லிம்களோ குற்றவாளிகள் எனக் கொள்ளமுடியாது. அப்படிப் பார்த்ததன் அறுவடையே 30 வருட நாட்டின் அழிவூ.
ஆதலால் சிங்கள தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுகூடி, இந்த நாட்டைப் பீடித்திருக்கும் புற்றுநோயை முடுமையை அகற்ற வழி தேடுங்கள்.
அப்படி நீங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவூ காணாவிடில், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் சேர்ந்து முடிவூ காணும் நிலை உருவாகும். அப்போது அரசியல்வாதிகளின் நிலைமை மகா பயங்கரமாக இருக்கும்.
இந்த நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டியது முழு அரசியல்வாதிகளுடையவூம் கடமை என்பதைக் கூறி வைக்க விரும்புகிறேம்.
nizamhm1944
August 8, 2012 at 12:26 pm
ஒன்றிணைந்து தமிழர்களாகிய உங்களுக்கு முஸ்லிம்களின் சொத்துக்களை வளங்களை ஆண்டனுபவித்து ஆட்சி செய்யும் உரிமையை தந்துவிட்டு முஸ்லிம்கள் கொத்தடிமைகளாக உங்களுக்கு சேவகம் புறிய வேண்டும்?
Mohammed Hiraz
August 8, 2012 at 5:31 pm