Lankamuslim.org

One World One Ummah

பரீட்சைக்கு சமுகமளிக்க வேண்டிய மாணவன் நித்திரையிலேயே வபாத்

leave a comment »

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நேற்று சமுகமளிக்க வேண்டிய மாணவன் நித்திரையிலேயே உயிரிழந்த சம்பவமொன்று சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் சம்மாந்துறை முழுவதும் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்மாந்துறை சென்னெல் சாஹிராவில் கல்வி கற்ற முகம்மட் இஸ்மாயில் ஆசிக் (19) எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கருவாட்டுக்கல் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இம்மாணவன் நேற்று முன்தினம் மாலை நோன்பு துறந்ததும் உணவருந்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை நோன்பு பிடிப்பதற்காக இம்மாணவனை எழுப்பிய போதே இம்மரணச் சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது.

மரண விசாரணைகள் பொலிஸ் புலனாய்வு பொறுப்பதிகாரி அமரசிறி, பொலிஸ் பரிசோதகர் காதர் ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள் உணவு ஒவ்வாமை காரணமாகவே இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பொலிஸார் இவ்விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.-தகவல் தினகரன்

About these ads

Written by lankamuslim

August 7, 2012 at 2:00 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,835 other followers

%d bloggers like this: