தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இப்பொழுது தனது மௌனத்தை கலைத்திருக்கிறது
அக்கரைப்பற்று செய்தியாளர்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இப்பொழுது தனது மௌனத்தை கலைத்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதைக் கொடுக்கப் போகிறோம் என அவர்கள் வாய் திறந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் மூடி மறைத்து, முஸ்லிம் காங்கிரஸோடு நட்புறவோடு இருக்கிறோம் என பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்பொழுது முஸ்லிம்களுக்கு எவற்றைக்கொடுக்கப் போகின்றார்கள் என்பதை வெளிப்படையாகவே கூறத் தலைப்பட்டிருக்கிறார்கள்.என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .
கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்ற கட்சியின் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் சகோதரர் அதாவுல்லா நாங்கள் மீண்டும் வடகிழக்கை இணைக்கப்போகின்றோம் என்ற ஒரு புரளியை கிளப்பியிருக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒருவிதமான வழிவகையை அவர் கையாளுகிறார்.
இந்தச் சூழ்நிலையில் வெற்றியை நோக்கிச் செல்கின்ற எங்கள் பயணத்தில் ஒருமித்த செயல்பாடு அவசியமாகும். வேட்பாளர்களும், மத்திய குழுவினரும், தேர்தல் நடவடிக்கை குழுவினரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். ஓர் ஆளணி திரட்டப்பட்டு முழு நேர ஊழியர்களாக பணியாற்றுவதற்கு களத்தில் இறங்க வேண்டியுள்ளது. அக்கரைப்பற்று வேட்பாளர்கள் மூவரும் வெற்றி பெறுவது மிகவும் சுலபமாகும். அவர்களது வெற்றிக்கு உரிய பங்களிப்பைச் செய்வதற்கு, இவ்வூர் மக்கள் மட்டுமல்லர், முழு அம்பாறை மாவட்டத்திலும் கட்சியின் ஆதரவாளர்கள் உணர்வுபூர்வமான முன் வந்திருக்கிறார்கள் என்ற நற்செய்தியையும் இச் சந்தர்ப்பத்தில் கூறி வைக்கிறேன்.









தமிழ் கூட்டமைப்பு யார் முஸ்லிம்களுக்கு அரசியல் பிச்சைபோட???
Mohammed Hiraz
August 8, 2012 at 3:06 am
TNA is Hakeem’s partner & best Friend (even sometimes his lord!)!! Hakeem is our (foolish eastern muslim’s) Leader! So, TNA directly becoming our Lord!! this is hakeem’s formula! (until we smash him)!
he will always faithfully for them TNA/LTTE/Norway/Tamils until he forgets the Chicken given by Prabakaran in Vanni meeting! also until the contract with LTTE/TNA/Norways is expire!!
but, still he also will be faithfull to Mahinda & his group as Mahinda gave minister …!! and also now Mahinda is a king, his minister has to bow him.
but, sometimes he will … like supporting muslims, but the opposite parties should not take serious of this …!! those are only to foolish muslims (particularly North & East muslims) to get votes!!
your buddy
August 8, 2012 at 11:23 am