மஸ்ஜித் இருப்பால் ௭துவித பிரச்சினையும் இல்லை என்றாரா இமானுவே சுமங்கலதேரர் ?
சஹீத் அஹமட்: ஜனாதிபதி தம்புள்ளை விஹாராதிபதியை சந்தித்து அவ் பிரதேசத்தை புனித பூமியாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தவிர பள்ளிவாசல் தொடர்பில் பேசப்படவில்லை. பள்ளிவாசல் இருப்பதால் ௭துவித பிரச்சினையும் இல்லையென்று இமானுவே சுமங்கலதேரர் தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரவித்துள்ளார் .
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர் ஹக்கீம் சம்பந்தனோடு இணையமாட்டார் என்பது உறுதி. ௭திர்வரும் தேர்தலுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழ் இனவாதமும் அக்கட்சியும் அழிந்து விடும். அதே போன்று ஏனைய இனவாதக் கட்சிகளும் ஒழிந்து போகும் ௭ன்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும் அவர் அறுபது வருட காலமாக சிங்கள அரசியல் வாதிகள் சிங்கள இனவாதத்தையும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் இன வாதத்தையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் இனவாதத்தையும் மக்களுக்குள் விதைத்துள்ளனர். ௭னவே இச் சிந்தனையிலிருந்து உடனடியாக மக்களை வெளியே கொண்டு வர முடியாது. மெது மெதுவாகத் தான் இனவாத சிந்தனையை களைய முடியும். ௭னவே 60 வருட காலங்கள் சம்பந்தனால் பொறுத்திருக்க முடியுமென்றால் ஏன் ஆறு மாதங்கள் பொறுமை காத்து பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்து கொண்டு அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது என்றும் தெரிவித்துள்ளதுடன்
பிரிந்து பயணத்தை மேற்கொள்வோம் இறுதியில் இணைந்து தாக்குவோம் ௭ன்ற ட்றொஸ்கியின் நியதிக்கமையவே அரசாங்கமும் ஹக்கீமும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.










Political versions are very poly tricky versions and poisonous,
nizamhm1944
August 6, 2012 at 1:22 pm
ஆயிரகணக்கான பிரயானிகளினதும் பஸாரில் தொழில் புறிவோறினதும் நன்மை கருதி தம்புள்ளை கைரிய மஸ்ஜித் போலவே தம்புள்ளை பஸாரிலும் மஸ்ஜித் ஒன்றை நிர்மாகிக்க இந்த சுமங்கள தேரர் ஆதரவளித்து அது மெய்பட்டால் எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும் இதட்க்காக ரம்ழானில் அதிகம் அதிகம் துஃஆ செய்வோம்
Mohammed Hiraz
August 6, 2012 at 2:08 pm
raajitha ministerin karuththu appattamaana poi sumangala therar president meet panniya pinnar mediavukku solli ullaar pallivaayal akatra paduvathu uruthi september maatha iruthikkul pallivaayal akatrappadum enrum kooriyullaar!!!!
kilakkinkural
August 6, 2012 at 3:03 pm
அப்படியாயின் தம்புள்ளை புனித பூமி பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள்ள இந்த ஆசாமி ஆடிய நாடகமா இது என்று இப்பொழுது எண்ணத் தோன்றுகின்றது. பள்ளிவாயல் இருப்பது தமக்கு பிரச்சினையல்ல என்று இனாமலுவே சொன்னதாக அமைச்சர் ராஜித சொல்வதன் மூலம் அமைச்சர் ஏதோ இனாமலுவவின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றுகின்றாரா என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது. பொறுத்திருந்து பார்க்கலாம்……..
Ossan Salam - Doha
August 6, 2012 at 4:05 pm
The real truth will come out only after the provincial council elections.
Haffi -
August 6, 2012 at 4:45 pm
Rajitha\s statement should be confirmed by Thero or by the Govt, if not its deceitful ant amount crime especially during the Elections in Eastern Province. If its false and Election stunt the Commissioner of Elections should take action.
nizamhm1944
August 7, 2012 at 5:06 am