அநீதியாளர்களுக்கு ஆதரவளித்தால் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டியேற்படும்! : அப்துர் றஹ்மான்
PMGG ஊடகப் பிரிவு: இப்தார் நிகழ்வில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான்: நீதியும், நேர்மையும் நிறைந்த வாழ்வை இறைவனுக்குப் பயந்தவர்களாக இவ்வுலக வாழ்க்கையில் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகின்ற புனிதமான இஸ்லாம் மார்க்த்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களாகிய நாம், நமது சமூக அரசியல் நடவடிக்கைகளில் மாத்திரம் அதனைக் கடைப்பிடித்தொழுகுவதில் அக்கறையற்றவர்களாக இருந்து வருவது கவலைக்குரிய விடயமாகும்.
அரசியல் என்றால் அப்படித்தான். அதில் களவெடுக்கத்தான் செய்வார்கள். பொய் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்றெல்லாம் சாக்குப் போக்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டு அக்கிரமம் செய்கின்ற அநியாயக்கார அரசியல்வாதிகளுக்கு மீண்டும் மீண்டும் ஆதரவளித்து அரசியல் அதிகாரங்களை வழங்குகின்ற பொதுமக்கள்தான் நாளை மறுமையில் அவர்களின் சமூக விரோத அரசியற் செயற்பாடுகளுக்கு இறைவனின் முன்பாக பதிலளிக்கவும், அதற்கான தண்டனைகளைப் பெறவும் வேண்டுமென்பதை நாம் மறந்து விடக்கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துல் றஹ்மான் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வொன்று நேற்று (03.08.2012) வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் அந்நாஸர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொறியலாளர் அப்துர் றஹ்மான் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மெற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் அங்கு கூறியதாவது:
இனறைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை மையப்படுத்தியதாகக் காணப்படுகின்றதே தவிர முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சமய, சமூக, கலாசார மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகளை மையப்படுத்தி சமூகத்துக்கான உரிமைகளையோ அல்லது சமூகத்தின் பாதுகாப்பையோ பெறறத் தருவதாகக் காணப்படவில்லை.
காலத்துக்குக் காலம் தேர்தல்கள் அறிவிக்கப்படும்போது மாத்திரம் மக்களிடம் வருகின்ற அவர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்திக் கதைகளை அவிழ்த்து விடுவதுடன் அப்பாவி வாக்காளர்களுக்கு நிவாரணங்கள் என்ற பெயரில் இலஞ்சப் பொருட்களைக் கொடுத்து தந்திரமாக வாக்குகளைக் கொள்ளையிட்டு மீண்டும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதிலேயே குறியாகச் செயற்பட்டு வருகின்றனர்.
எமது மக்களும் அவர்களின் இந்த நரித்தந்திரங்களை அறிந்து கொள்ளாமல் வாக்களிப்பதற்கு முன்னர் அவர்களால் வழங்கப்படுகின்ற சில ஆயிரம் ரூபா பெறுமதியான அந்த நிவாரணப் பொருட்களுக்கோ அல்லது திடீரென்று தங்களின் வீடுகளுக்கு முன்னால் போடப்பட்ட ஒரு கொங்றீட் வீதியைக் கண்டோ தங்களுடைய பெறுமதியான வாக்குரிமையை அவர்களுக்கு வழங்கி விடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசியல் அதிகாரங்களைப் பெறும் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலொன்று வரும் வரைக்கும் மக்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளைப்பற்றி பாராமுகமாகவே இருந்து வருகின்றனர். இந்த வாழையடி வாழையான அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து வாக்காளர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சிந்திக்கவைத்து நமது முஸ்லிம் சமூக அரசியலை அடிமட்டத்திலிருந்து முற்றாகப் புனரமைக்கும் முயற்சியிலேயே எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடந்த ஆறாண்டு காலமாக முயற்சித்து வருகின்றது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சாதாரண நிலையில் நமது சமூகத்தின் மத்தியில் காணப்பட்ட ஒருவர் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியரல் அதிகாரத்தைப் பெற்றதன் காரணமாக இன்று பெரும் இலட்சாதிபதியாக மாறியிருக்கின்றார். இது தாங்கள் இணையத்துக்கு எமது ஊடகப்பிரிவினால் அனுப்பட்ட செய்தி.
ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னர் பொருளாதரத்தில் மிக அடிமட்ட நிலையில் இருந்தவர் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியலில் அரை மந்திரி அளவுக்கு உயர்ந்து விட்ட நிலையில் இன்று பெரும் கோடீஸ்வரராக அவர் உயர்ந்து விட்டார்.
ஆனால் இவர்களுக்கெல்லாம் சமூகம் என்றும், உரிமைகள் என்றும், அரசியல் விடுதலை என்றும் காலத்திற்குக் காலம் வாக்களித்த எமது முஸ்லிம் சமூகம் அன்றிருந்ததை விடவும் மிக மோசமான நிலையிலேயே இன்று காணப்படுகின்றது.
மக்களை ஏமாற்றி அதிகாரத்தின் உச்சத்திற்கு உயர்ந்து விட்ட இந்த அரசியல் எஜமானர்கள் அரசாங்கத்தின் உப்பரிகைகளில் உல்லாசமாகவும், சமூக விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் நோன்புகள் நோற்று, இராப்பகலாக இறைவனிடம் கையேந்தி, மாற்றுக்கட்சிச் சகோதரர்களுடன் அடிபிடிப்பட்டு இரத்தம் சிந்தி, நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு முகங்கொடுத்து அவதிக்குள்ளாகி, உணர்ச்சிக் கோஷங்களை எழுப்பிக் கொண்டு தெருத் தெருவாகவும், ஊர் ஊராகவும் ஊர்வலங்கள் சென்று வாக்களித்த போராளிகளும் முஸ்லிம் சமூகமும் நடுத்தெருவில் கைவிடப்பட்டிருப்பதாகவுமே கருத வேண்டியுள்ளது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டுமென்றால் வாக்களிக்கின்ற உரிமையைப் பெற்றுள்ள வாக்காளர்கள்தான் முதலில் மாற வேண்டும். வாக்காளர்கள் மாறாத வரை சமூகத்தை ஏமாற்றிப் பிழைப்புவாத அரசியல் நடாத்துகின்ற இத்தகைய அரசியல்வாதிகளை ஆண்டவனாலும் மாற்றிவிட முடியாது என்பதை அனைவரும் திட்டமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
எதிர்வரும் கிழககு மாகாண சபைத் தேர்தலிலே எமது மக்களின் இத்தகைய ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், திகாமடுல்ல எனப்படும் அம்பாறை மாவட்டத்திலுமாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியையும், ஏறாவூர் மற்றும் கல்குடா பிரதேசத்தையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ள எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மாவட்ட சூறா சபை என்னையும் ஒரு வேட்பாளனாக இத்தேர்தலில் நிறுத்தியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 08ம் திகதி நீங்கள் உங்களது மாகாண சபைக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக சாட்சியம் அளித்து உறுதிப்படுத்தி வாக்களிக்கும் நாளாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. அன்றைய தினத்தில் நீங்கள் உங்களுக்காகச் சேவையாற்றும், உங்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும், உங்களின் நலன்களில் அக்கறை கொள்ளும் ஒரு சமூக அரசியல் இயக்க அமைப்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை அதன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரட்டைக் கொடிச் சின்னத்திற்கு வாக்களித்து தெரிவு செய்ய வேண்டும் என இந்த சந்தர்ப்பத்திலே நான் கேட்டுக் கொள்கின்றேன்.
கடந்த முறை கிழக்கு மாகாண சபைக்கு நீங்கள் வாக்களித்து தெரிவு செய்து அனுப்பிய உறுப்பினர்களால் உங்களுக்கு என்னென்ன சேவைகள் கிடைத்தது? உங்களின் பிரச்சினைகள் எந்தளவுக்கு தீர்ந்துள்ளன? இன்னமும் அவர்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவதால் உங்களின் பிரச்சினைகள், தேவைகள் தீரும் அல்லது தீர்க்கப்படும் என நம்புகின்றீர்களா? என்பதைப்பற்றியெல்லாம் இப்பிரச்சார காலப்பகுதியில் நீங்கள் ஆற அமர இருந்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் வாக்களிப்பது என்பது இஸ்லாத்தின் பார்வையில் சாட்சியம் அளிப்பதாகவே கருதப்படும்.
சமூக உழைப்புக்காக என முன்வந்து உங்களின் தெரிவுக்காக முன் நிற்பவர்களில் நீங்கள் ஒரு நல்ல மனிதனைப் புறக்கணித்து ஒரு தீய மனிதனுக்கு வாக்களித்து சாட்சியமளித்தால் அதற்குரிய கூலியும் உங்களுக்கே! அதேபோல இவ்வாறு முன் வந்துள்ள ஒரு தீய மனிதனை நிராகரித்து நல்ல மனிதனுக்கு சாட்சியமளித்து வாக்களித்தால் அதற்குரிய கூலியும் உங்களுக்கே!!
கடந்த காலத்தில் இவ்வாறு உங்களின் சாட்சியங்களான வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இம்மாகாண சபைக்குச் சென்ற உங்களின் சமூக உழைப்பாளர்களுக்கு அரசாங்கம் ஆளுக்கொரு ஆடம்பர வாகனத்தை இறக்குமதி செய்யும் கோட்டாக்களை வழங்கியது. அதனை அவர்கள் ஒவ்வொருவரும் 80 இலட்சம் வரையில் வெளியாருக்கு விற்று பணத்தை சுளையாக கையில் வைத்துள்ளனர்.
ஆனால் இவர்களை நல்லவர்கள், நீதியாளர்கள், நேர்மையாளர்கள், எங்களுக்கு விசுவாசமாகச் செயற்படக்கூடியவர்கள் என்றெல்லாம் சாட்சியமளித்து இவர்களுக்கு வாக்களித்த நீங்கள், இவர்களின் பதவிக்காலத்தில் உங்களின் வீடுகளில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளை அகற்றுவதற்காகவும் 500 ரூபா வீதம் பணம் கொடுத்திருக்கிறீர்கள். உங்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஒரு 500 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களைக்கூட இவர்கள் வாக்களித்த உங்களுக்குத் தந்திருக்கவில்லை. இப்படிப்பட்டவர்களை மீண்டும் நீங்கள் உங்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யலாமா? என்பதைப்பற்றி நீங்கள்தான் சிந்தித்து தீhமானிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழவுக்கு தலைமை வகித்து உரையாற்றிய அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி தனதுரையில் தெரிவித்ததாவது:
நாம் பின்பற்றுகின்ற இஸ்லாம் மார்க்கத்தைப் பொய்யாக்குகின்றவர்களைப்பற்றி அல்குர்ஆன் மிகத் தெளிவாகச் சொல்லிக் காட்டுகின்றது. நமது பார்வையில் தூயோனாகிய அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிக்கின்றவர்களையும், சிலை வணக்கங்களில் ஈடுபடுபவர்களையும்தான் இஸலாம் மார்க்கத்தைப் பொய்யாக்குபவர்கள் என நாம் கருதிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் அல்லாஹ் தனத அருள் மறையாம் அல்குர்ஆனிலே, ஏழைகள் மீது இரக்கம் காட்டாமல், அவர்கள் மீது அக்கறை செலுத்தாமல், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காகக் குரலெழுப்பி நியாயம் கேட்காமல் அவர்களைப் புறக்கணித்து விரட்டி விடுபவர்களையும் தனது மார்க்கத்தைப் பொய்யாக்குபர்கள்தான் என்று மிகத் தெளிவாககவே விலியுறுத்திக் கூறியுள்ளான்.
எனவே நாம் நமது மார்க்கத்தைப் பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருபவாகளாக இருக்கின்றோம். இந்த மார்க்கத்தைப் பொய்யாக்குபவர்களை எமது பிரதிநிதிகளாகவும், எமது தலைவர்களாகவும் இம்மையிலும், மறுமையிலும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வகையில் மக்களுக்கு விசுவாசமாக மக்களின் பிரச்சினைகளிலும், தேவைகளிலும் அக்கறை செலுத்துகின்ற எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே உங்களின் ஆதரவை வழங்குவதற்கு நீங்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த இப்தார் நிகழ்வில் மஞ்சந்தொடுவாய், மற்றும் காத்தான்குடி முதலாம் குறிச்சிப் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 400 பேர் வரை கலந்து கொண்டனர்.








Said well…true message to the public.
Eng.Nishath
August 6, 2012 at 5:49 pm
ஆக நீங்கள் நீதியாலர்கள் உங்களுக்கு வாக்களித்தால் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியதில்லை??? என்ன கொடுமடா இது பதவி ஆசைக்கும் அரசியல் அந்தஸ்திட்கும் சம்மந்தமே இல்லாம என்னமோ முடிச்சி போடுகிறார்கள் இது மட்டும் பப்லிக் ஊடகம் இல்லையெனில் உங்களதும் உங்கள் ஆதரவாளர்களினதிம் கொடுக்கல் வாங்கள் உட்பட தனிபட்ட அநீதிகளின் பட்டியல் எழுதி முடிக்க முடியாத அளவு அதிகமாகிவிடும் என்ன செய்ய மக்கள் உங்களுக்கு வாகளிக்காவிட்டால் அல்லாஹ்விடம் போய் தப்ப வேண்டும் என்று பயம்காட்டி வாக்கு பிச்சை கேட்கும் வங்குரோத்து நிலை உங்களுக்கு இந்த புனிதமான ரமழான் மாததில் அடுத்தவர் செயலை தப்பு தப்பாக குறிஅயாக மக்கள் முன் எடுத்து இயம்பி வாக்கு கேட்பதைவிட உங்களால் நிறைவாக மக்களுக்கு என்ன செய்யமுடியும் எதட்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் அப்படி வாக்களித்தால் மக்கள் உங்களால் என்ன பயன்களை அடைந்து கொள்வார்கள் என்படஹி மக்களுக்கு மிக தெளிவாக எடுத்து கூறி வாகு கேட்பதையே அல்லாஹ்வும் விரும்புவான் அல்லாஹ்வின் நலடியார்களும் விரும்புவார்கள் அடுத்தவர் செய்த குறையையோ அல்லது அடுத்தவர் செய்யாத இட்டு கட்டையோ பேசி திறிய எமக்கு அனுமதி இல்லை அப்படி பேசி திறிவோறுக்கு கேடு உண்டாகுக என அல்லாஹ்வே சாபம் இடுகிறான்
Mohammed Hiraz
August 6, 2012 at 11:23 pm
“”" கொடுக்கல் வாங்கள் உட்பட தனிபட்ட அநீதிகளின் பட்டியல் எழுதி முடிக்க முடியாத அளவு அதிகமாகிவிடும் “” ((????)) நீங்க என்ன சொல்லுரிங்க சகோதரா ?? pmgg பிழை என்ற ? ஓகே பிழை என்றே வச்சுக்குவம் ? ஏன் பிழை என்ன பிழை ? சும்மா விமர்சனம் வேண்டாம் . குறை தேடும் சமுதாயமாக மாற வேண்டாம் (???) பிழை என்றால் நிறுவுங்கள் காரணத்தை ??
Krishan
August 7, 2012 at 6:01 am
கொஞ்சம் அவர்களின் வியாபாரங்களை பாருங்கள் உங்களுக்கே புறியும்
Mohammed Hiraz
August 7, 2012 at 10:48 am
“”"அல்லாஹ்வின் நலடியார்களும் விரும்புவார்கள் அடுத்தவர் செய்த குறையையோ அல்லது அடுத்தவர் செய்யாத இட்டு கட்டையோ பேசி திறிய எமக்கு அனுமதி இல்லை அப்படி பேசி திறிவோறுக்கு கேடு உண்டாகுக என அல்லாஹ்வே சாபம் இடுகிறான்”"” குறைய சொல்ல இல்லையே இவர்கள் பிழை என்று தானே கூறி இருக்குறாங்க . பிழைய சுட்டி கட்டவும் ஏலவா ??? செய்யாதது என்ற சொல்லுங்க இவங்க சொல்லுறதுல என்ன செஞ்சாங்க என்ன செய்ய இல்ல . என்ன இட்டுக் கட்டினாங்க.
Krishan
August 7, 2012 at 6:07 am
”ஒன்றுமே இல்லாத நிலையில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சாதாரண ஆசிரியராக நமது சமூகத்தின் மத்தியில் காணப்பட்ட ஒருவர் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியரல் அதிகாரத்தைப் பெற்றதன் காரணமாக இன்று பெரும் இலட்சாதிபதியாக மாறியிருக்கின்றார்.”
” 500 ரூபா வீதம் பணம் கொடுத்திருக்கிறீர்கள். உங்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஒரு 500 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களைக்கூட இவர்கள் வாக்களித்த உங்களுக்குத் தந்திருக்கவில்லை”
இந்த இரண்டுமே அபாண்டமும் புறமும் குறையுமாகும் உண்மையில் ஊர்மக்கள் மனமுவந்தே திண்ம கழிவகற்றளுக்கு பங்களிப்பு செய்தனர் அதுவும் மஸ்ஜிதுகளே அதனை பொறுபேற்று நிதி திரட்டியது மேலும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் ஒரு ஆசிரியரை பற்றி அபாண்டம் சுமத்துகிறார் உண்மையில் இந்த ஆசிரியர் ஒரு வைதியரின் மகளை மணம் முடித்தார் அந்த வைதியறுக்கு நிறையவே சொத்துகள் உண்டு அவை அதிகம் காணிகளாக இருந்தன அவைகள் அவருக்கும் மனைவியின் சொத்தாக கிடைததாலேயே அவர் வசதி வாய்புள்ளவராக இருக்கிறார்
குற்றம் சுமத்தும் இந்த மனிதர்கூட பரம்பரை பணம் படைத்தவர் அல்லர் இவறுக்கு வந்த வசதிவாய்புகளை இவரைபோலவே அடுத்தவர் கண்டதையும் சுமதி குற்றசாட்டு சொல்ல எத்தனை நாளிகையாகும்
Mohammed Hiraz
August 7, 2012 at 11:02 am
மடத்தனமான கருத்துக்களை அள்ளிவீசுவதில் மஹா கெட்டிகாரனாகிய உங்களை எங்கே கொண்டு கட்டுவது??? காத்தான்குடியின் மக்கள் மனம் விரும்பி அந்த 500 ரூபாய் பணத்தை கொடுக்கவில்லை மாறாக பணம் கொடுக்காதவர்களின் குப்பைகள் அகற்றப்படமாட்டாது என்ற அச்சத்திலேயே அப்பாவி மக்கள் தங்களது பணத்தைக் கொடுத்தார்கள். வசூலித்த பணத்திற்கு என்னகதி நடந்தது என்று யாருக்குமே தெரியாது?? காணி வாங்கவுமில்லை திண்மகழிவுகள் அகற்றப்படவுமில்லை. ஹிறாஸ் மடத்தனமாக நுனிப்புல் மேய்ந்து கருத்துரைக்கக்கூடாது
nassehaa
August 8, 2012 at 2:31 pm
இந்த நோன்புகாலத்தில் குருட்டுதனமாக ஆதரவு தெறிவித்து மட்டி மடதனமாக கிறுக்க வேண்டாம் அல்லாஹ்மீது ஆணை இட்டு சொல்லமுடியும் எந்த பொதுமகனும் பயத்தினாலோ வட்புறுத்தலினாலோ பணம் கொடுக்க வில்லை அப்படி மிரட்டி பணம் வாங்க நடவடிக்கை எடுத்திருப்பின் உங்களைபோன்ற புல்லுருவிகள் அதட்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருந்திருபீர்களா என்ன??? ரோட்டால போர கழுதைகெல்லாம் மஸ்ஜிதுகளின் நிர்வாகம் கணக்கு வளக்கு சொல்லவேண்டிய கடட்பாடு கிடையாது நீங்கள் பணம் செழுத்தி இருந்தால் பற்று சீட்டுடன் வாருங்கள் எங்களது சம்மேளனம் பணம் எப்படி செலவு செய்யபட்டது சதம் குறையாமல் கணக்கு வழக்கு காட்டும் நோன்பென்றும் பாராமல் புனித நாளில் ஏன் தான் இப்படி மஸ்ஜிதுகளின் நிர்வகங்கள் மேலும் காதான்குடி பள்லிவாயல் முஸ்லிம் நிறுவங்களின் சம்மேளனம் மேலும் மிரட்டி பணம் வாங்கியதாக அபாண்டத்தை அள்ளி வீசுகிறீர்கள்
Mohammed Hiraz
August 8, 2012 at 3:37 pm
Therthal kaalankalil elloarum unmai Muslimkalaahavum maari viduhiraarhal. Nanraahave Islam payanpaduhirathu, therthal kaalankalil kodukkappaduvana poala.
Allah, KUTRAVAALIHALAI THALAIVARHALAAHA AAKKI VIDUHIROAM ENKIRAANE, UNKALAI POANRA NALLAVARHALAI THERIVU SEYTHAAL ATHU IRAIVANUDAN POARAATAM NADATHTHUVATHU AAHAATHAA?
It will be highly appreciated and respected if these interests shown on Muslims, after the elections, in order to educate the people without expectations.
Perumapaalanavarhalai maatrida mudiyathu enpathum Valla Naayan Allahvin aruluraiye.
nizamhm1944
August 7, 2012 at 5:26 am