Lankamuslim.org

One World One Ummah

இந்த அரசாங்கம் மத வன்முறையாளர்களை பாதுகாக்கும், கண்டிக்காது என்ற புரிதலை ஏற்படுத்தும்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்: GroundViews என்ற முன்னணி ஆங்கில  இணையத்தளம் தம்புள்ள வன்முறையின் மீது அரசு காட்டும் மௌனம், வன்முறையை அரசாங்கம் கண்டனம் செய்வதில் அரசாங்கத்தின் விருப்பம் இன்மை என்பன இந்த அரசாங்கம் மத வன்முறைகளை கண்டிக்காது , பௌத்தத்தின் பெயரால் வன்முறையை தூண்டும் முன்னணி தேரர்களை பாதுகாக்கும் என்ற புரிதலை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

அண்மையில் குறித்த groundviews இணையத்தளம் ‘Not In our name’ என்ற தலைப்பில் ஒரு வலைத்தளதை உறுவாக்கி இலங்கையில் தலைதூக்கி வரும் பெளத்த மதத் தீவிரவாத வன்முறைகளுக்கு எதிராக மக்களின் கருத்துக்களை பெரும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது.

அதன் ஊடாக பெறப்பட்ட 1400 கருத்துக்களை ஒரு ஆவணமாக தொகுத்து அதன் ஒரு பிரதியை ஜனாதிபதிக்கும் , மற்றும் சம்பவத்துடன் தொடர்பு படும் திண்ணைக்களங்களுக்கும் மற்றும் ஒரு பிரதியை தம்புள்ள ரஜமஹா விகாரையின் பீடாதிபதிக்கும் அனுப்பியுள்ளது .ஜனாதிபதி செயலகத்தில் இருந்து குறித்த ஆவணத்தை பெற்றுக்கொண்டதாக மூன்று வாரங்களின் பின்னர் ஒருமடலையும் குறித்த இணையத்தளம் பதிலாக பெற்றுக் கொண்டுள்ளது .

ஆனால் தம்புள்ளையில் இடம்பெற்ற மோசமான வன்முறைக்கு ஜனாதிபதியோ ,அல்லது தம்புள்ள ரஜமஹா விகாரையின் பீடாதியோ பகிரங்கமாக எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்று அந்த வலைத்தளம் தெரிவித்துள்ளதுடன் , வீடியோக்களில் பதிவான தம்புள்ள வன்முறையை அரசாங்கம் கண்டனம் செய்ய விருப்பம் இன்மை , அது தொடர்பில் அதன் ஆழ்ந்த மௌனம் என்பன இந்த அரசாங்கம் மத வன்முறைகளை கண்டிக்காது , பௌத்தத்தின் பெயரால் வன்முறையை தூண்டும் முன்னணி தேரர்களை பாதுகாக்கும் என்ற புரிதலைஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளது .

அந்த வலைத்தளம் தம்புள்ள ரஜமஹா விகாரையின் பீடாதிபதியால் தலைமைதாங்கப்பட்ட பிக்குகள் குழு மற்றும் வன்முறைக் கும்பல் செயற்பட்ட விதம், தகாத வார்த்தைப் பிரயோகம் ஆகியன புத்தர் போதித்துள்ள தர்மங்களுக்கு மாறானதாகும் என்றும் பௌத்த தர்மத்தின் படி பௌத்த துறவியொருவரின் நடத்தை தர்மங்களிலிருந்து இந்த பிக்குகளின் செயற்பாடு முற்றிலும் முரணாக காணப்பட்டது என்றும் சிறு குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட வெட்கப்படக்கூடிய இந்த நடவடிக்கைக்காக கவலை தெரிவித்து பலர் இணையதளம் ஊடாக கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். அதேபோன்று உங்கள் கருத்துகளையும் கண்டங்களையும் ‘Not In our name’ என்ற வலைத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரியிருந்தது அதற்கு அமைவாக 1400 கருத்துக்களையும் ,கண்டனங்களையும் பெற்றே அவற்றை ஜனாதிபதுக்கும் ஏனையவர்களுக்கும் அனுப்பிவைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இது தொடர்பான முந்திய பதிவு:

தம்புள்ள ரஜமஹா பீடாதிபதிக்கு எதிராக கருத்துக்கள் பதியும் நடவடிக்கை

About these ads

Written by lankamuslim

August 5, 2012 at 12:52 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,795 other followers

%d bloggers like this: