தமிழ்- முஸ்லிம் உறவுக்கு எதிரான தீயசக்திகள் ஊதிப் பெரிசாக்கும் மன்னார் பிரச்சினை
கலாபூஷணம். எஸ்.எம். சஹாப்தீன்
மாகாண சபைத் தேர்தற் களம் சூடு பிடித்துவரும் – குறிப்பாக தமிழ் முஸ்லிம்களின் கவனம், பெரும்பாலும் தேர்தலின்பால் திசைத் திரும்பியிருக்கும் இக்காலக்கட்டத்தில் கடந்த புதன் கிழமை (ஜுலை 18) முதல் புதுப்பிரச்சினை ஒன்று, நாளிலும் பொழுதிலும் பூதாகாரமாக்கப்பட்டு வருவது, வேதனைக்கும் ஒருவகையில் வெட்கத்திற்கும் உரியதாகும், ஏனென்றால், “மெய்ப் பொருள் காண்பதே அறிவு’ எனப் படித்துப் பட்டம் பெற்றவர்களே, “கண்ணால் காண்பதும் பொய் – காதால் கேட்பதும் பொய் – தீர விசாரித்தறிவதே மெய்” என்ற இலக்கண வரிகளை மறந்தவர்களாக கச்சைக் கட்டிக்கொண்டு அணிதிரண்டு நிற்பதனாலாகும்.
நடந்த சம்பவத்தையும், தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகளையும், சில பின்னணிகளுடன் உரசிப் பார்க்கும்போது, தமிழ் பேசும் வடபுலத்து முஸ்லிம்களை பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த சொந்த இடங்களில் மீள குடியேற விடாமல், ஊமைத்தனமாகத் தடுக்கும் நடவடிக்கைகளின் வெளிப்பாடாகவும், தம் சதிவலை திட்டங்களுக்கு பெரும் நந்திச்சிலையாக குறுக்கே நிற்கும் ஆளும் தரப்பின் அமைச்சரவை அந்தஸ்துள்ள – தன் சமுதாய மக்களை பாரம்பரிய மண்ணில் மீள்குடியேற்றஞ் செய்யத் துடிப்புடன் பணியாற்றிவரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை ஏதேனும் ஒரு வழியில் பலமிழக்கச் செய்து, முகவரி இழக்கச் செய்வதற்கான திட்டமுகமாகவேயிருப்பது புரிகிறது.
குறிப்பிட்ட புதன்கிழமையில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு, தங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்ட தொனியில் அமைந்ததை எண்ணியே முஸ்லிம்கள் சாத்வீகமான முறையில் தம் அதிருப்தியை காட்டினர். அப்போது அவ்விடத்தே காவலிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இந்த சாத்வீகப்போராட்டத்திற்கு கண்கண்ட சாட்சியாவர். மன்னார் நீதவான் நீதித்துறையின் கண்ணியம் காக்கும் கருப்பு நிற அங்கியுடன், புனிதமான நீதிமன்றத்தின் மேற்பீடத்தை விட்டிறங்கி தெருவுக்கு வந்து “ கண்ணீர்புகை வீசும்படியும், துப்பாக்கிப் பிரயோகம் செய்யும்படியும்” நிதானம் தப்பக்கூடாத அந்த நீதவான் கட்டளைப் பிறப்பித்ததை அடுத்தே, சாத்வீகப் போராட்டத்தின் நடுவே கொந்தளிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
குற்றம் இழைத்தவனைவிட, குற்றம் இழைக்கத்தூண்டும் காரணங்களே, தூண்டுபவனே உண்மையான குற்றத்திற்கு உரித்தாவார் என்ற நீதித்துறையின் அரிச்சுவடி பாடம் நம் சிந்தனைக்குரியது. நீதி நியாயங்களுக்கு சகிப்புத்தன்மையோடு இணங்கிப் போகும் முஸ்லிம்கள், நீதவான் வழங்கிய தீர்ப்பில் திருப்தியுறாமல், தம் அதிருப்தியை சாத்வீக முறையில் வெளிக்காட்ட முனைந்தது ஏன்? மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர் சங்கத்திற்கு சொந்தமான கோந்தைப்பிட்டி மீன்வாடியை விடத்தல்தீவு கத்தோலிக்க மீனவர்கள் அடாவடித்தனமாக ஆக்கிரமித்து, தங்கள் பாவனையில் வைத்திருந்தனர். உப்புக்குளம் மீனவர்களுக்கு உரித்தான மேற்படி மீன்வாடியை மீண்டும் தமது மக்களின் பாவனைக்கு அதாவது முஸ்லிம் மீனவர்களின் தேவைக்கு மீளப் பெறுவதற்கான உரிமைப்போராட்டம், இன்றைய நேற்றைய சமாச்சாரமல்ல. கடந்த 2001முதல் நடந்து வரும் உரிமைப் போராட்டமாகும். முஸ்லிம்கள் தரப்பில் இது தொடர்பாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வந்திருக்கின்றன என்பதை சம்பந்தப்பட்ட இரு இனத்தாரும் அறிவர்.
சுமார் பதினொரு வருடமாக (2001முதல்) இடம் பெற்று வந்த இந்தப்போராட்டம் எந்த இடத்திலும் வெடித்து, வெளியுலகின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வெளிச்சத்திற்கு வராமல் இருந்ததிலிருந்தே, உரிமைகோரி போராடிய முஸ்லிம் மீனவர்கள் – குறிப்பிட்ட மீன்வாடிக்கு உரித்துடையவர்கள் அமைதியான – சாத்வீக முறையிலேயே தம் முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்திருக்கின்றனர் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? மன்னாரிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள குடியேறி, பிரஸ்தாப மீன்வாடியை கேட்கும்போது, கத்தோலிக்க மீனவர்கள் முஸ்லிம்களிடம் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என, அன்று புலிகளின் மன்னார் பொறுப்பாளராகவிருந்த அமுதன் என்பவரால் உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவல்களை, சட்டத்தரணிகளும் – சட்டத்தரணிகள் சங்கமும் – ஏனைய ‘மெய்ப்பொருள்’ அறிந்தவர்களும் தெரியாமல் இருக்க நியாயமில்லை.
முஸ்லிம்களுக்கு சொந்தமான மீன்வாடியை, புலிகளின் அப்போதைய பொறுப்பாளர் அமுதனால் செய்யப்பட்ட உடன்படிக்கைக்கு விரோதமாகவும், நீதி நியாயங்களுக்கு மாற்றாகவும் – எத்தனையோ முறை சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடி, வெளியேறுவதற்கான திகதிகள் (நாட்கள்) பல தீர்மானிக்கப்பட்டும், எதற்குமே அசைந்து கொடுக்காத நிலையில்தான், முஸ்லிம்கள் அதிருப்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை யதார்த்தபூர்வமாக சிந்திக்க வேண்டும்.
உடன்படிக்கை – அரசியல்வாதிகளினதும், சமூகப் பெரியார்களினதும் வேண்டுதல் எதையுமே பொருட்படுத்தாமல், அசைந்து கொடுக்காமல், வெளியேறாமல் இருப்பதன் அர்த்தமென்ன? முஸ்லிம்களுக்கு வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை செய்யவிடாமல் ஆக்குவதன் மூலம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை அர்த்தமற்றதாக ஆக்கும் திட்டத்தின் பின்னே, தீய சக்திகளின் கரம் துணையிருக்கிறது என எண்ண இடமுண்டல்லவா?
இப்படியான உரியதை இழந்து நிற்கும் நிலையில், தன் சமுதாய மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென, அம்மக்களால் தம் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்றத்திலும் – வெளியிலும் குரல் கொடுப்பதில் தவறுண்டாமோ. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தம் சமுதாய மக்களுக்காக குரல் கொடுப்பது தவறென்றால், இன்று விடிவை நாடி நிற்கும் தமிழ் சமூகத்திற்காக, எத்தனையோ தமிழ்த் தலைவர்கள் பகிரங்கமாகக் குரல் கொடுத்து வருகின்றனரே…….. அதுவும் தவறு எனச் சொல்லலாமா?
என்னதான் நாட்டில் அரசியல் காற்று சுற்றி சுழன்றடித்தபோதும் வடபுலத்து தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக, வன்னி மாவட்ட எம்பியான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால், தன்னாலான எல்லாப் பணிகளையும் – சேவைகளையும் செய்தே வந்திருக்கின்றார் என்பது பதிவான ஆவணங்களாகும். இதை தீயசக்திகள் மறைக்க முனைந்தாலும், அப்பாவி தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள். இப்போதும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சிற்கு தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக வந்துபோகும் தமிழ் மக்கள் அமைச்சரின் தன்னலமற்ற சேவைக்கு சான்று பகர்வர்.
இதனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு பெருகிவரும் செல்வாக்கு – பிரபல்யம் போன்றவற்றை சீரணிக்க முடியாத தீய சக்திகள் – அரசுக்கு விரோதமான – புலி ஆதரவு சக்திகள் மதத்தையும், இனத்தையும் கருவிகளாகப் பயன்படுத்தி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குரலை அடக்க பலவழிகளிலும் முயற்சிக்கின்றனர் என்பதே உண்மை.
மன்னார் நீதிமன்றத்தின் தீர்ப்பு – நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே – சற்று தூரத்தில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களின் சாத்வீக அதிருப்தி போராட்டம் – நீதிபதியின் முஸ்லிம்களை கண்ணீர்புகை – துப்பாக்கி பிரயோகம் செய்து அழிக்கும்படி கூறிய தெரு பிரகடனம் – அதனால் ஏற்பட்ட சலசலப்பு, கொந்தளிப்பு போன்ற விஷயங்களை அறிந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விஷேட விமானம் மூலம் புறப்பட்டு மாலை 3.45 மணியளவில் மன்னாரை வந்திறங்கினார். அமைச்சர் வந்திறங்கியபோது, நிலைமை சீராகி அமைதி நிலவியது. இதுவே உண்மை நிலை. அப்படியிருக்க, அமைச்சர் தூண்டிவிட்டார்;;; தூபமிட்டார் என பழிபோடுவது உண்மைக்கு மாறானது.அமைச்சர் தள்ளாடி விமான நிலையத்தில் இரங்கி அரசாங்க அதிபருடன் சென்று உப்புக்குளம் மக்களை சந்தித்தமைக்கான புகைப்படங்கள்,வீடியோக்களும் ஆதாரமாக எம்மிடம் உள்ளது.அமைச்சருடன் சிரேஷ்ட ஊடகவியலாளர ஒருவரும் பயணித்துள்ளமை இதற்கு சான்றாகும்.
மற்றது – அமைச்சர ரிஷாத் பதியுதீன் தன்னை நம்பி வாக்களித்து, தம் பிரதிநிதியாகத் தெரிவு செய்து அனுப்பிய மக்களுக்கு, தமிழ் – முஸ்லிம் – கிரிஸ்தவரகள் என்ற பேதம் காட்டாமல் அளப்பரிய சேவைகளை செய்து வருவதால், பொதுமக்களிடையே பெருகிவரும் ஆதரவு – அதனால் ஆளுந்தரப்பில் ஏற்ப்பட்டுவரும் முக்கியத்துவம் என்பன், முஸ்லிம்களை வடபுலத்தில் மீளவும் குடியேறவிடாமல் தடுக்கும் எண்ணம் ஈடேற முட்டுக்கட்டையாக இருப்பதை, தீயசக்திகளால் சகிக்க முடியவில்லை.
சில மாதங்களுக்கு முன் ஜெனிவாவில் இலங்கைக்கு விரோதமாக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு, அரபுநாடுகளிடையே இலங்கைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில், அமைச்சர ரிஷாட் பதியுதீனின் பங்காற்றல் சிறப்பானது. ஜனாதிபதி உட்பட, ஆளும் அணியின் பிரதான முக்கியத்தரகளின் கவனத்தை எல்லாம் அமைச்சரின் அரபுலக பங்காற்றல் கவரந்தது. இது அரசுக்கு விரோதமான – புலி ஆதரவு சக்திகளுக்குப் பிடிக்கவேயில்லை. வெளிக்காட்டிக் கொள்ள முடியாத இந்த வெறுப்பு, அமைச்சர ரிஷாத் பதியுதீனை எப்படியும் ஓரங்கட்டி – செல்வாக்கிழக்கச் செய்யும் திட்டத்தை தீவிரமாக்கி வருகின்றது.
சில நாட்களுக்கு முன் மன்னார பேராயர இராயப்பு ஜோசப் ஆண்டகை அவரகளுடன் மோதவிட்டு பாரத்தாரகள். அது பிசுபிசுத்துப் போயிற்று. இப்போது மன்னார மீனவரகள் விவகாரத்தில் உண்மை எங்கேயோ ஒளிந்திருக்க, அது புரிந்தும் புரியாதமாதிரி ஊதி ஊதி பெரிசாக்கி, அதன்மூலம் நினைத்ததை முடிக்க முனைகின்றனர. சட்டம் பயின்றவரகளை தூண்டிவிட்டு, நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர. நாட்டின் எல்லா இன, மத மக்களுக்கும் பொதுவான சட்டத்தரணிகளின் சங்கமே பக்கம் சாரந்து பாரவை மங்கி அறிக்கைவிடும் அளவிற்கு தீய சக்திகளின் கை ஓங்கியிருக்கின்றது. சரிந்த பார்வை எப்போதும் உண்மையை தரிசிப்பதில்லை.
வாய்மையே வெல்லும் – சத்தியம் வென்றே தீரும் – அசத்தியம் அழிந்தே தீரும் என்று சமயங்கள் எல்லாம் சொல்வதை, சட்டம் பயின்ற காலத்திலேயே மனதில் பதித்துக் கொண்டவர்கள் கூட, தீயசக்திகளின், திருகுதாளத்திற்கு அடிமையாகி விட்டாரடகளோ ? என்பதை எண்ணும் போது, சிரிப்பதா – அழுவதா எனப் புரியவில்லை.
கிழக்கு மாகாணத்து முஸ்லிம் சட்டத்தரணிகள், இவ்விவகாரத்தில் வடபுலத்து முஸ்லிம்களும், அவர்களின் மீள்குடியேற்றத்திற்காக அயராது பாடுபடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு வருவதும், அதற்கு சட்டம் பயின்றவர்களும், பொது அமைப்பான சட்டத்தரணிகளின் சங்கமும் இருபக்கத்து நியாயங்களையும் சீர்தூக்கிப் பாரத்து, நேரிய முடிவுக்கு வராமல், முஸ்லிம் விரோத நிலைப்பாட்டை எடுத்திருக்கும் அறியாமையைப் போக்கும் பொறுப்புணர்வில் தம் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு, குறிப்பாக பொது அமைப்பான சட்டத்தரணிகளின் சங்கத்திற்கு நிலைமையை புரியவைக்கும் காரியங்களிலும் இறங்கியுள்ளனர். இவையாவும் விசாரணை செய்துவரும் அதிகாரிகள் அறியாத மூடுமந்திரம் அல்ல.
நீதித்துறையின் அடிப்படை நோக்கமே, சுற்றவாளி வெற்றிபெறுவதைவிட, ஒரு நிரபராதி குற்றவாளியாக்கப்படக் கூடாது; தண்டனைக்கு ஆளாகி விடக்கூடாது என்பதுதான் என்பதை நன்கு அறிந்த – படித்த சட்டத்துறை சார்ந்தவர்களே, அரசின் விசாரணை இன்னும் முடியாத நிலையில், தீர்ப்பு இன்னுமே வழங்கப்படாத நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீனை குற்றவாளி போல காட்ட முனைவது, எந்த வகையில் நியாயம்?
பார்க்க மறந்த – பார்க்க விரும்பாத – பார்க்க விடாத இந்தப் பக்கங்களையும்,அன்றாடம் தூண்டுதல் பேரில் இடம்பெற்று வரும் சம்பவங்களையும் அலசி ஆராயும் போது, சமயம் – இனம் – சட்டம் – நீதித்துறை போன்ற எல்லாத்துறைகள் மூலமும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனை செல்வாக்கிழக்கச் செய்வதன் மூலம் வடபுலத்து முஸ்லிம்களை, ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த பூர்வீக மண்ணில் அவர்களை மீளக் குடியேற விடாமல், ஓர் இனச்சுத்திகரிப்பை மீண்டும் செய்வதே தீயசக்திகளின் நோக்கமாகும் என்பது தெளிவாகிறது.
கற்றுக்கொண்ட பாடமாக, முஸ்லிம்களை இரு மணி கெடுவில் விரட்டியவர்கள் – தாம் செய்த வரலாற்று தவறால், குற்றத்தினால் இன்று முகவரி இழந்திருப்பதை உணர்ந்தும், மீண்டும் அதே வரலாற்று குற்றத்தை வேறு வழிகளில் செய்ய முனைவோர், யதார்த்த நிலையை புரிந்து – தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ் பேசும் இந்து, கிரிஸ்தவ, முஸ்லிம் மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், தமிழ் – முஸ்லிம் – கிரிஸ்தவர்களின் ஒற்றுமை பல வழிகளிலும், விரும்பப்படுகிறது, வற்புறுத்தப்படுகிறது; வரவேற்கப்படுகிறது. இந்த ஒற்றுமையே இந்நாட்டின் சிறுபான்மை சமூகங்களை கரை சேர்க்கும். சுதேசிய விதேசிய மட்டங்களில் இதற்குப் பல உதாரணங்களை சுட்டிக்காட்ட முடியும்.
வரலாற்றின் வாயிலாக இந்த யதார்த்ததைப் புரிந்து செயற்படாவிட்டால், தமிழ்பேசும் சிறுபான்மை இனங்களுக்கு விடியலே கிட்டாதுபோகும். எதிர்முனை கரமே ஓங்கி நிற்கும். நாம் எல்லோருமே நம் எதிர்கால சந்ததியினரை வாழவிடாது ஆக்கிவிட்ட குற்றத்திற்கு ஆளாவோம் என்பது உறுதி. தனிநபர; – தனிக்குழு நலனைவிட,ஒட்டுமொத்த சமூகத்தின் நலனே முக்கியம் என்பதை சட்டம் பயின்றோருக்கும், ஏனைய படிப்பாளிகளுக்கும் உணர்த்திட விரும்புகிறோம்.








Injustice in Mannar – Tamil Extremist Forces threaten Muslim Resettlement
By Dr Hasbullah
Tamil politicians, Tamil state officials, the Catholic clergy and the legal system in the north including in Mannar have been trying their best to prevent the return of Muslims who have waited for more than two decades to return to their places of origin in the north of the country. The Muslim displaced hoped that these forces would help and facilitate their rightful return to the north with self-respect and dignity after the end of the war. But unfortunately, this did not happen.
In Mannar, the Catholic Church and its leading priests are in the background planning and executing an agenda to ensure the non-return of Muslims to the region. They are doing this with the help of other anti-Muslim forces in the Tamil community.
The legal establishment in the north and in Mannar was used by these forces to deny or grab lands belonging to Muslims, and to impinge on other traditional rights enjoyed by Muslims for decades. A good example of this is what happened recently to the Muslim fishermen of Uppukulam in Mannar.
The incident in Uppukulam, Mannar was one among many such denials of the rights of returnee Muslims.
Many are unaware of how thousands of acres of land (the figure mentioned is not an exaggeration) that legally belong to Muslims have been misappropriated by the joint action of the above mentioned forces – a situation which I hope soon will soon come to light. I cannot give the full details of these attempts because those people affected will have to go through the legal system to challenge this. Also if I provide this information at the present juncture, I may be accused of contempt of court because some of the court rulings have yet to be challenged by these poor returnee Muslims. However, if necessary, I can substantiate this matter in future correspondence without interfering with any legal proceedings.But the question is whether these poor, innocent people will have the capacity to challenge such a powerful force which is behind this unjust agenda, or whether this land issue will end like what happened to the Uppukulam Muslim fishermen. In other words, those Muslims who have lost lands are also in need of legal and other help from concerned people in order to challenge the powerful opposing forces in Mannar.
The Mannar Uppukulam fisherfolk were driven by the forces of Tamil extremism to take to the streets to seek justice as the normal legal and administrative system have failed to rectify their genuine grievances for nearly a decade.
These Tamil forces are are quite clear in their agenda, and are using the media and other information channels to discredit the plight of returnee Muslims. It is very unfortunate that this is being done by a group said to be representing another discriminated population (minority) of the country who too seek justice for what happened to them during the long years of ethnic conflict and civil war.
Many Sri Lankans do not realize that the displaced Muslims of Mannar who at present constitute less than one per cent of the northern population, form about 15 to 20 percent of the total number of Muslims displaced from the northern province. Other displaced Muslims who are yet to return to the north may decide not to return because of the ongoing racism and anti-Muslim activities of Tamil nationalistic forces.
At the same time, it must be mentioned that at present many displaced Muslims are faced with numerous social, economic, political and environmental problems in the places where they live now (for example, in Puttalam and other places in the south). They will soon be removed from having the right to return to their places of origin by the state because the state has already indicated that they will do so. If this happens, the displaced population will be left with no alternative place to live other than the place where they live now. They will also loose the rights of return that include rights of assets and properties in the north not to mention their other traditional, cultural and religious rights in their places of origin. If this happens, they will be the real ‘forgotten people’ of the country.
Tamil nationalist forces are trying to portray the returnee Muslims as anti-social elements in the north. In some respect, they have been successful in doing this. They have already been successful in painting this picture in Jaffna. This is another issue that requires the attention of those who are concern about the plight of the northern Muslims.
The Tamil media – local, national and international – are spreading the idea that Muslims ‘do not belong in Tamil national territory’ and that they are ‘inimical to Tamil national aspirations’. Unfortunately, it appears as if some of the non-Tamil national and international media have also been caught up in the systematic propaganda of Tamil nationalist and anti-Muslim forces.
The hatred being promoted against Muslims by Tamil groups is almost equal to or more than that displayed during the LTTE’s ethnic cleansing of Muslims from the north in 1990. It is quite unfortunate that forces among the Tamils are acting in this negative manner. At the same time, there are progressive forces and individuals among Tamils who acknowledge the grave injustice done to the Muslims of the north, and who want to take necessary positive measures to rectify what happened to Muslim victims in the past and present. Unfortunately, the progressive forces are numerically and politically very small, and they are too weak to make any substantial impact on the rights of the northern Muslims. It is necessary to recognize and get the help of positive forces among the Tamils in order to facilitate true reconciliation among different populations in the conflict-affected north and east of the country.
It is the duty of all peace-loving Sri Lankan citizens to be aware of these developments, and it is their duty not to allow another historical mistake to be committed by Tamil nationalistic forces who are trying to prevent the return of displaced Muslims to their places of origin. Even with all these challenges facing them, many displaced Muslims want to return home to live with dignity and self-respect because they are left with no other option in the present political frame work of the country. Therefore, we cannot rule out the possibility of using the goodwill and commitments of those progressive forces in all communities especially among Tamils in the future for this.
It is the duty of all to help the northern Muslims to stand firmly against the challenges that they are facing now. In this respect, we have to look at the issue of the denial of the right of return to northern Muslims without considering personal political and other interests. Very frankly, political unity among Muslim politicians is a must at this juncture. I beg our political leaders to unite on this issue. I pray this request will be heard and fulfilled.
Haffi -
August 4, 2012 at 6:21 pm