காரைதீவு பிரதேச சபை அமர்வில் சர்ச்சை
எமது விசேட செய்தியாளர்: இன்று (30) காரைதீவு பிரதேச சபை அமர்வு இடம்பெற்றுக் காண்டிருந்த வேளையில் எதிர்கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.பாயிஸ் எழுப்பிய கேள்வி ஒன்றின் மூலமாக சர்ச்சை ஏற்பட்டது. உடனடியாக சம்மாந்துறை பொலிஸார் அந்த இடத்திற்கு வந்து விசாரணை நடாத்தியது
இது விடயமாக மேலும் தெரியவருவதாவது,
இதனால் சபை அமர்வு சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்ந்தபோது, ஏற்கனவே சபை அமர்வொன்றின் போது பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான ஏகமனதாக ஒதுக்கப்பட்டிருந்த 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியினை இயந்திரத்தினை கொள்வனவு செய்யாமல் காரைதீவு தபாலக வீதியினை புனருத்தானம் செய்வதற்காக தன்னிச்சையாக தவிசாளர் பயன்படுத்தியுள்ளார். என்ற விடயம் சம்பந்தமாக காரைதீவு பிரதேச சபையின் ஒரேயொரு எதிர்க்கட்சி உறுப்பினரான ஏ. பாயிஸ் சபையில் கேள்வியொன்றினை எழுப்பி இந்த சபை காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர்களையும் மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த முஸ்லீம்களையும் பிரதிநித்ததுவம் செய்கின்றது. நிதிகள் ஒதுக்கப்படும் போது விகிதாசார அடிப்படையில் நிதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.
60 வீதமான நிதி தமிழ் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டால் 40 வீதமான நிதி முஸ்லிம் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் . தான் அவ்வாறு கேட்கவில்லை. மூன்றில் ஒரு பகுதி நிதியினை முஸ்லிம் பிரதேசங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்றே கேட்கின்றேன். என்று உரையாற்றிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக மேசையிலிருந்த நீர் நிரம்பியிருந்த கிளாஸ் கைதட்டுப்பட்டு கீழே விழுந்து உடைந்ததால் தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர் வன்முறையினை பிரயோகிக்கின்றார் என்று குற்றம் சுமத்தி உடனடியாக பொலிஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
உடனடியாக சம்மாந்துறை பொலிஸார் அந்த இடத்திற்கு வந்து விசாரணை நடாத்திய பின்னர் இதனை உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பணித்து சென்றுள்ளனர். காரைதீவு பிரதேச சபை தவிசாளர் விகிதாசார நிதி ஓதக்கீட்டினை வழங்காமால் இவ்விடயத்தினை வேறு பக்கம் திசை திருப்புவதற்காக பொலிஸ் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பிரதேச சபை உறுப்பினர் ஏ. பாயிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.








காரைதீவு பிரதேச சபையின்கீழ் வாழும் 40% முஸ்லிம்களுக்கும் தனியான பிரதேச செயலகமும் பிரதேச சபை யையும் ஏட்படுத்துவதே இன குரோதமும் இனவாதமும் அபிவிருத்தியில் தலையிடுவதை சாவு மணி அடிக்க வழி அம்பாரை மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற முஸ்லிம்காங்கிரஸ் இதையெல்லாம் உருபடியாக எப்போது செய்து முஸ்லிம்களின் உரிமையை நிலைநாட்டுவது?
Mohammed Hiraz
July 31, 2012 at 1:28 am