ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று கூடுகிறது
ஏ.அப்துல்லாஹ் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிஉயர் பீடம் இன்று கூடுகின்றது. இன்று காலை 10 மணிக்கு அதன் தலைமையகமான தாருஸ் ஸலாமில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் கூடுகின்றது. அரசுடன் செய்துகொள்ளப் படவுள்ள புரிந்துணவர் உடன்படிக்கை தொடர்பாகவும் ,
கிழக்கு மாகாண பிரதான வேட்பாளர் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது. இரண்டு கட்டமாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது முதல் சந்திப்பில் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்தாலோசிக்க உள்ளதுடன் இரண்டாம் கூட்டம் கட்சியின் நிர்வாகிகளுடன் இடம்பெறவுள்ளது. இதன்போது கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப் படவுள்ளது .







