தலைமன்னார் பியர் கிராம மக்களுக்கு உதவி
இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பியர் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களது நோன்பு கால ஏற்பாடுகள் குறித்து கண்டறிந்து உதவி செய்யும் வகையில் சவூதி ஆரேபிய நாட்டின் தொழிலதிபர் சஹித் அப்தல்லா அல் ஆமிதி விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.அகில இலங்பைக மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான் றிசாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சவூதி தொழிலதிபர் அங்கு வருகைத் தந்து தற்போது மக்களது நிலைமைகளை நேரில் கண்டறிந்து கொண்டார்.
எதிர்வரும் ரமழான் புனித நோன்பு காலம் ஆரம்பமாக இருப்பதால்,இம்மக்களுக்கு தேவையான ஒரு தொகை உலர் உணவு பொருட்களையும் அவர் வழங்கி வைத்தார்.
வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேறிய போதும்,அவர்களுக்கான அடிப்படை வசதிகள் உறிய முறையில் காணப்படாமை தமக்கு கவலையளிப்பதாகவும்,இது குறித்து தமது நாட்டு தனவந்தர்களுடன் கலந்துரையாடி மேலும் உதவிகளை செய்வுது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் தொழிலதிபர் உறுதியளித்தார்.
தமது விஜயத்தை நினைவு கூறும் வகையில் இரு கண்களின் பார்வைகளும் இழந்து போன் ஒரு குடும்பத்திற்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கன அடிக்கல்லினையும் அவர் நாட்டி வைத்தார்.இவருடன் அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,உட்பட பலரும் இதன் போது பிரச்ன்னமாகியிருந்தனர்.









