Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து தமிழர்களை காட்டிக் கொடுத்துவிட்டதாம்

with 4 comments

தமிழ் பேசும் மக்களின் காணி, நிலம் காப்பாற்றப்பட வேண்டுமானால் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் இருக்கவேண்டும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோ அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்து, முஸ்லிம்களின் காணி, நிலம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளையும் பறிகொடுக்கப் போகின்றது.

இதனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் என்றோ ஒரு நாள் உணரத் தான் போகிறார்கள். இவ்வாறு அல்வாய் திக்கம் மத்திய சனசமூக நிலைய முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கூறினார்.

சனசமூக நிலையத் தலைவர் க.நிதர்சன் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மேலும் பேசுகையில் கூறியதாவது இன்று அரசியலில் சமகாலப் பிரச்சினை குறித்து சில விடயங்களை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

சிறுபான்மை இனங்களாக தமிழர், முஸ்லிம்களுக்கிடையே பிளவினை ஏற்படுத்த அரசு முயன்று கொண்டிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் நிலையை உணராமல் செயல்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டையில் தீர்மானம் எடுத்தவேளை அப்போது தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் அஷ்ரப் அங்கிருந்து ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை ரவூப் ஹக்கீம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ் பேசும் மக்களுக்காகச் செயலாற்றியவர் அமரர் அஷ்ரப் அன்னாரின் வழியைப் பின்பற்றாமல் பதவிக்காகவே ஹக்கீம் அரசுக்குத் துணைபோகின்றார். ஐ.தே.க.வில் இணைந்து போட்டியிட்டு விட்டு, மற்றையவர்கள் அரசுடன் இணைந்து விட்டார்கள் என்று கூறியே அவரும் அரசுடன் இணைந்துகொண்டார்.

தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பாக அரசு தீர்க்கமான பதிலைக் கொடுத்ததா? புனித பிரதேச மாக்கப்பட மாட்டாது என அரசு சொன்னதா, இல்லவே இல்லை. அனுராதபுரத்தில் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன. அதுவும் அரசினால் பூசி மெழுகப்பட்டு விட்டது. கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவுற்றதும் தம்புள்ளையில் பள்ளிவாசல் இருக்காது.

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணிகளும் பறிக்கப்படும். இதனைப் பற்றி இணக்க அரசியல் பேசியும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கிழக்கு முஸ்லிம்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் சிறுபான்மை இனமாக இருந்து உரிமைகள் இல்லாத நேரத்தில் ரவூப் ஹக்கீம் அரசுக்குக் கைகொடுக்கின்றார். முடிந்தால் இதற்கு அவர் பதில்கொடுக்கட்டும். காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்று அரசிடம் முஸ்லிம் காங்கிரஸ்கட்சி கேட்டது.

இதனை அரசாங்கம் கொடுக்குமா. கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர்தான் தெரியும். சிறுபான்மையினருடன் சேர்ந்து தனி அலகு வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கேட்டது. அவர்கள் கேட்காமலேயே அரசியல் தீர்வு வரும் வேளை முஸ்லிம்களுக்கென தனி அலகு தருவோம் என நாம் உறுதி அளித்திருந்தோம்.

தனி அலகைப் பெற்றுக்கொள்ளாமல் அரசுடன் சேர்ந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அரசு எதனையும் கொடுக்காது என்றார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் பரிசில்களை வழங்கினார். தகவல் உதயன்

About these ads

Written by lankamuslim

July 15, 2012 at 2:50 pm

4 Responses

Subscribe to comments with RSS.

  1. have you forgotten that your pirabakaran did not allow northern voters to vote presidential elections. is SLMC’s action is worse than pirabakaran. it is because all pirabakaran we are suffering

    sheriff

    July 15, 2012 at 9:44 pm

  2. சரவணபவான் அவர்களே,

    உண்மைதான்! அரசுடன் இணைந்து போட்டியிட்டாலும் முஸ்லிம்களின் நிலை கந்தல்தான்!

    உங்களுடன் சேர்ந்து போட்டியிட்டால், கேட்க வேண்டாம்.
    நமது கதை, அதைவிட கந்தலோ கந்தலாகி விடும்.

    என்ன செய்வதற்கு? நீங்கள் சொல்லும் எலும்புத்துண்டை பொறுக்கித் தின்னுவதற்கு எமது சமூகம் எப்போதும் தயார்.

    அதேநேரம், நீங்கள் எள்ளி நகையாடும் எலும்புத்துண்டை நக்கித் தின்னுவதற்கு போட்டி போடும் தமிழ்க் கட்சிகளைவிட, நமது முஸ்லிம் கட்சிகள் ஏதோ பரவாயில்லை போலத் தெரிகிறது.

    ஸ்ரீ லங்கா .......

    July 15, 2012 at 11:01 pm

  3. வடமாகாண மக்கள் வெளியேற்றபட்டபோதும் காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலையின் போதும் வடக்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்த ஏராவூர்,அழிஞ்சி பொத்தானை,வாழை சேனை படுகொலைகளின் போதும் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் இருந்த தமிழர்களாகிய நீங்கள் என்ன செய்தீர்கள் மௌனமாக இருந்து நடத்தபட்டதை நியாய படுதினீர்கள்!!! ஏன் இன்ன்றும் கூட அந்த அநியாயங்களுக்கு நியாயம் கட்பித்துகொண்டிருக்கிறீர்கள்

    சரி அது புலிகளுடம் சம்மந்தபட்ட வியம் அவர்களை பகைதால் உங்கள் உயிருக்கு உளை வைக்கபடும் என்ற பயத்தால் வாய்மூடி மௌனிகளாக இருந்தீர்கள் என்று எடுத்துகொள்வதட்கும் வழி வைக்க வில்லை நீங்கள் ஏனெனில் மாவனெல்லை பற்றி எறிந்தபோது என்ன ஆதரவு குரல் கொடுத்தீர்கள் முஸ்லிம்களுக்கு நீங்கள், தம்புள்ளையிலே,காலியிலே,தெஹிவளையிலே,குருநாகளிலே நடப்பதாக சொல்கிறீர்களே முஸ்லிம்களுக்கான அநியாயங்கள் அதட்கு எதிரா எத்தனை குரல் கொடுதீர்கள் எத்தனை கண்டன மாநாடுகள் எத்தனை பத்திரைகையாளர் மாநாடு நடத்தி எதிபுகளை விபரித்தீர்கள்,சர்வதேசம் எங்கும் வாழும் உங்கள் உறவுகள் என்ன குரல் கொடுத்தார்கள்???

    முஸ்லிம்களுக்கு புலிகளால் நடந்ததைதான் மௌனிகளாக இருந்து பார்தீர்கள் என்று பார்தால் சிங்கள காடையர்களால் ஆங்காங்கே அரங்கேறும் அட்டகாசங்களை கண்டும் கானாமல்தானே இருக்கிறீர்கள் அவர்களுக்கு தானே என்ன நடந்தால் நமகென்ன என்ற நிலைபாடிலேதானே இன்றும் உங்கள் அரசியல் தொடர்கிறது

    நீங்கள் முஸ்லிம்களுக்காக ஒரு துறும்பையும் அகற்ற பாடுபட மாட்டீர்கள் ஆனால் முஸ்லிம்கள் மட்டும் உங்களோடு உங்கள் சுய நலம் நிறைவேற வந்து இணைய வேண்டுமா??? இது எந்த தர்ம நீயாயம்???

    மூன்றில் இருபங்கு முஸ்லிம்கள் தென் இலங்கையில் வாழ்கின்றனர் வடகிழக்கு முஸ்லிம்கள் அரசுக்கு எதிரான தென் இலங்கை சிங்கள மக்கள் சந்தேக கண்ணோடு நோக்கும் உங்களோடு சேர்ந்தால் அதன் விளைவு மிக பெரிய விபரீதமாக தென் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வை தாக்கி அவர்களை நிர்கதியாகும் என்று நன்கு அறிந்து இருந்தும் தாங்கள் உங்களோடு வது இணையும் படி அழைப்பு விடுத்தீர்களே எவ்வளவு சுய நலமிகளாக இருந்தால் அப்படி அழைபீர்கள்???

    போராடுங்கள் உங்களுக்காக ஆலுங்கள் உங்கள் நிலங்களை நிர்வகியுங்கள் உங்கள் வளங்களை சட்டம் இயற்றுங்கள் உங்கள் இனத்தை தண்டிக்க அதைவிடுத்து முஸ்லிம்களுக்காகவும் போராடுகிறோம் என்று சொல்லி சொல்லி முஸ்லிம்களையும் சேர்த்து ஆல ஆசைபடுவதும் முஸ்லிம்களின் வளங்களை நிர்வகிக்க ஆசைபடுவதும், முஸ்லிம்களை தண்டிக்க சட்டம் இயற்றும் அதிகாரத்தை கோறுவதும் வரம்பு மீறியது எல்லை கடந்த ஆகிரமிப்பு உங்களின் இந்த வரம்பு மீறளையும் எல்லை க்டந்த ஆகிரமிப்பையும் தீர்வு திட்டமாக கோசம் எழுப்பி பேச்சு வார்தை நடத்துகையில் அதில் முஸ்லிம்கள் பங்கு கொள்ளவௌம் தங்கள் எதிர்பை வெளி இடவும் தங்கள் தரப்பு நியாயதை எடுதுரைக்கவும் சமமான அந்தஸ்து அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது அதை நிராகறிக்கும் உரிமை உங்களுகோ வேறு எவறுக்கோ கிடையாது

    ஆதலால் தமிழ் பேசும் மக்கள் என வார்தையில் மயக்கி முஸ்லிம்களை ஆலவும் முஸ்லிம்களின் வளத்தை நிர்வகிக்கவும் பேராசை படும் என்னதை விடுத்து உங்களுக்காக போராடி உங்கள் உரிமையை நிலை நாடுங்கள் முஸ்லிம்காளுக்கு தெறியும் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது 200 க்கு மேட்பட்ட மஸ்ஜிதுகளை வடகிழக்கில் சிதைது சின்னாபின்ன படுத்தி இருபோறுக்கு முழுமையாக தார்மீக ஆதரவை வழங்கிய உங்களுக்கு தம்புள்ள ஹைரியா மஸ்ஜித் தொடர்பில் பேசுவதட்கு எந்த அருகதையும் கிடையாது

    நீங்களும் நீங்கள் ஆதரித்த அந்த புலி கூட்டமும் செய்ததுடன் நீங்கள் கூறும் அரசும் சிங்கள மக்களும் முஸ்லிம்களுக்கும் செய்த அநியாயங்களை ஒப்பிடால் இவை ஒன்றுமே இல்லாமல் போய் விடும்

    Mohammed Hiraz

    July 15, 2012 at 11:02 pm

  4. சரவணபவான் அவர்களுக்கு நன்கு புரிந்து இருக்கும் என்ரு நினைக்கிரேன்..
    காட்டிக்குடுபதும் கூட்டிகுடுபதும் உங்க்லுக்கே கைவந்த கலை. போராட்ட காலங்களிள் இயக்கங்களில் இருந்த முஸ்லிம் இளயெர்கள் ஈழத்துக்காக போராடிய வர்கள், இவர்களை காட்டி குடுத்து கொன்றது யார்? சரவணபவான் அவர்களே, சுரெஸ் பிரமசந்திரனிடமும் அடைகலனாதனிடமும் வரழற்றை கேட்டு தெறிந்து கொல்லவும் தெரியாவிட்டால் சும்மா இருகவும். மக்களை மடையர்களாக நினைக்க வேண்டாம்.

    Uran Kudy

    July 16, 2012 at 2:35 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,834 other followers

%d bloggers like this: