Lankamuslim.org

One World One Ummah

அரசுக்குள் இருந்துகொண்டே பலத்தை நிரூபிப்போம்

with 3 comments

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதி பதியுடனும் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த ஆகி யோருடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் திருப்தி கண்டதனாலேயே அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தோ மென அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர் பில் அக்கட்சிக்கு பல்வேறு தெரிவுகள் இருந்தன. தனித்துப் போட்டியிட வேண்டுமெனவும் அரசுடன் இணைந்து போட்டியிட வேண்டுமெனவும் தமிழ்க் கூட்டமைப்பில் சேர்ந்து போட்டி யிடவேண்டுமெனவும் பொதுச்சின்னத்தில் களமிறங்க வேண்டுமெனவும் வலுவான பல்வேறு கோரிக்கைகள் எழுந்திருந்தன. எனினும் முஸ்லிம் சமூகத்தின் அபிலா ஷைகளை சீர்தூக்கிப் பார்த்து இந்த முடிவை மேற்கொண்டோம். தேர்தல் தொடர்பில் அரசுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வுள்ளோம். அரசுக்குள் இருந்து கொண்டே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்கும். அத்துடன் எமது கட்சி சார்பில் களத்தில் இறங்கும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற உழைப்போம் என அவர் குறிப்பிட்துள்ளார்

எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசுக்குமிடையில் பரஸ்பரம் நம்பகத்தன்மையை கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இருதரப்பாருக்குமிடையே நிலவி வரும் அவநம்பிக்கை போக்கப்பட வேண்டியுள்ளது எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் தமக்கு இருந்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்துள்ளார். இதேவேளை அரசுடன் இணைந்து போட்டியிடவுள்ள முகாவுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஆறு வேட்பாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நேர்முகப்பரீட்சைகள் நேற்று கொழும்பு தாருஸ்ஸலமாவில் நடைபெற்றன.

About these ads

Written by lankamuslim

July 15, 2012 at 10:26 pm

3 Responses

Subscribe to comments with RSS.

  1. HAKEEM …………VILAIPOOI VITTAR

    IQBAL SWISS

    July 16, 2012 at 1:05 am

  2. SLJUC,,,VAI Moodi Irukkum Pothu HAKEEM?????/.

    farhan

    July 16, 2012 at 9:57 am

  3. ”அரசுடன் இணைந்து போட்டியிடல்” என்ற தீர்மானம் ஒடுமொத்த முஸ்லிம்களின் அபிலாஷைகளை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டதல்ல, மாறாக அரச தரப்பு அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க முடியாததால் தான் குறித்த தீர்மானத்துக்கு முஸ்லீம் காங்கிரஸ் தலைமைகள் உடன்பட்டுள்ளனர்! வரலாறு நெடிகிலும் முக்கியமான காலப்பிரிவில் தவறான முடிவுகளை எடுத்து முஸ்லீம் தரப்பை பலவீனப்படுத்துவதிலே
    முஸ்லீம் காங்கிரஸ் குறியாக இருக்கிறது.. அரசுடன் இருந்து கொண்டு நமது பலத்தை பிரயோகிப்போம் என்று சொல்வது சிறு பிள்ளைக்கு கதை சொல்வது போலுள்ளது.. பேரினவாத சக்திகள் தமது கிளைக் கூறுகளை பலப்படுத்த சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம்களின் பலவீனத்தை மீண்டும் ஒரு முறை பயன்படுத்தியுள்ளது…

    Hamas

    July 16, 2012 at 5:18 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,826 other followers

%d bloggers like this: