Lankamuslim.org

One World One Ummah

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து கிழக்கில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது

with 5 comments

M.ரிஸ்னி முஹம்மட்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புரிந்துர்ணர்வு உடன்படிக்கையின் (MOU) ஊடாக அரசுடன்( ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன்)  இணைந்து கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் , பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் சற்று முன்னர் lankamuslim.org க்கு தெரிவித்தார் .

இன்று மாலை 7.00 மணி தொடக்கம் சற்று முன்னர் வரை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிஉயர் பீட கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பான அரசுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை பெரும்பாலும் நாளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் கைச்சாத்தாகும் என்றும் கட்சியின் தவிசாளரும் , பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்திற்கு அமைவாக கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் மு.கா.வுக்கு 12 வேட்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது . அம்பாரையில் 06 பேரும் , திருகோணமலையில் 03 பேரும் மட்டக்களப்பில் 03 பேரும் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு இடம்பெறவுள்ளது.

About these ads

Written by lankamuslim

July 13, 2012 at 11:28 pm

5 Responses

Subscribe to comments with RSS.

  1. பெருன்பான்மை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு வீணா போகியுள்ளது. இந்த அரசாங்கத்தின் மூலம் முஸ்லிம்களின் எந்த அடிப்படை தேவைகளும் தீர்க்கப்படதா நிலையிலும், பல்வேறு துவேச நடவடிக்கைகள் பகிரங்கமாக நடக்க அரசு மௌனமாக இருந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நிலைமையிலும் மேலும் அரசை பாதுகாப்பது முஸ்லிம்களை நாமே அழிவுக்கு வித்திடுவது போல் ஆகும். அபிவிருத்தி என்பது என்றால் கண்டு கொள்ள கிடைத்தது ரிஷாத் அணி மூலமும் அதாவுல்லாஹ் அணி மூலமும் செய்யப்பட்ட சில வேலைகளே. இவைகளுக்கு அரசு முன்னுரிமை கொடுப்பதெல்லாம் மு.கா எனும் மா மரத்தை வேரோடு அழிக்கும் நோக்கிலே.

    பலப்பிட்டி பஸ்லி

    July 14, 2012 at 8:12 am

    • அரசை ஆட்சி புறிய வைக்க முழு வேலையும் செய்துவிட்டு ஆட்சியில் பங்கை அனுபவிக்காமல் வெளியேறினால் எல்லா நிலமையும் சரியாகிடுமா அல்லது இன்னும் இன்னும் நிலமைகள் மோசமாகுமா??? மாவனெல்லை பற்றி எரிந்த வேளை சந்திரிகாவின் அரசில் அங்கம் வகித்த அரசியல் ஞானி மர்ஹும் அஷ்ரப் ரஹிமஹுல்லாஹ் அரசில் இருந்து விலகுவதே இப்படியான விடயங்களுக்கு தீர்வென்று நமக்கு வழி காட்டி விட்டு செல்லவில்லை அல்லவா???

      Mohammed Hiraz

      July 14, 2012 at 4:18 pm

  2. மட்டகளப்பிலும் திருமலையிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக நிறுத்தபடும் மூன்று வேட்பாளர்களுக்கு சமமாக விருப்பு வாக்குகளை அளித்தால் நிறுத்தபடும் மூன்று வேட்பாளர்களும் இரு மாவட்டங்களிலும் வெற்றி பெருவர் , அம்பாரையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இ பொத்துவில் தொகுதியினர் மூன்று வேட்பாளர்களுக்கும் சம்மாந்துறை தொகுதியினர் மூன்று வேட்பாளர்களுக்கும் கல்முனை மக்கள் இதில் ஒரு அணிக்கும் சாய்ந்த மருது ஆதரவாளர்கள் அடுத்த அணிக்கும் என அம்பாரை முஸ்லிம் காங்கிரஸின் 81,000 ஆதரவாளர்களும் இரு அணியாக பிரிந்து மூன்று மூன்று வேட்பாளர்களுக்கு சமமாக 40,000 வாக்குகளுக்கு மேல் வாகளிப்பின் ஆறு பிரதி நிதிகளும் தெறிவு செய்யபடுவது நிச்சயம் இப்படி வெற்றிகரமான வாக்களிப்புக்கு பிரதேச வாத சிந்தனை பேய் வாக்காளர்கள் மத்தியில் இருந்து அகல வேன்டும் அதட்குறிய பிரச்சாரத்தை கட்சி முன் எடுக்க வேண்டும்

    Mohammed Hiraz

    July 14, 2012 at 10:17 am

  3. இவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசு நடைமுறைப் படுத்தும் என்பது கானல் நீர்.. பொறுத்திருந்து பாருங்கள் அரசு தனது தகிடு தாளங்களை தேர்தலுக்கு பின் அரங்கேற்ற போகிறது.. எல்லோரும் விழி பிதுங்கி நிற்க போகிறார்கள்.. தனியாகப் போட்டி இட்டு தேர்தலில் வென்று விட்டு ஒப்பந்தம் செய்து இருந்தால் அதற்கு ஒரு பெறுமதி இருந்திருக்கும்… இதற்குரிய பெறுமதியி வெகு விரைவில் அனுபவிப்பார்கள்..

    Thariq Niyas

    July 14, 2012 at 11:19 am

  4. இந்த அரசு எப்படியோ தேர்தலுக்கு பின் அவர்களது கோர முகங்களை காட்டுவார்கள்… அப்போது நீங்கள் அரசை விட்டு விலகினால் உங்களது 12 ஆசனங்களினதும் கதி உங்களது ஒப்பந்தந்தின் கதி என்ன என்பதை முதலில் மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்.. தனி நபர் வேலை திட்டங்களுக்கும் சுய லாப அரசியலுக்கும் துணை போய் இருந்தால் இந்த தேர்தல் முஸ்லிம் காங்கிரசுக்கு சாவு மணியாகும் என்பதில் மாற்று கருத்து இல்லை… புதிய தலைமுறையில் தலைமைத்துவத்தை உருவாக்க இளைய சமூதாயத்தினர் நாங்கள் பின் நிற்க போவதில்லை… அதற்காக குறு நில மன்னர்களை ஆதரிக்க போவதுமில்லை

    -தாரிக் நியாஸ்-

    Thariq Niyas

    July 14, 2012 at 2:14 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,709 other followers

%d bloggers like this: