Lankamuslim.org

One World One Ummah

மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பா. உ.: ACJU க்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: பஷில்

with 13 comments

ஏ.அப்துல்லாஹ் : மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்: ஜம்இயத்துல் உலமாவுக்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: அமைச்சர் பஷில் பதில் : காலத்திற்குக் காலம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரின் நடவடிக்கைகள் வெட்கப்படும் வகையில் அமைந்திருப்பது வேதனைக் குரியதாகும். இவர்களின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினை தலைகுனியச் செய்வதாகவும் அமைந்திருக்கின்றன. நாம் இத்தகையவர்களையா நமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருக்கின்றோம் ௭ன்று சமூக ஆர்வலர்கள் பலரும் நொந்து கொண்டுள்ளனர் .

அண்மையில் இலங்கையில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம் பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது தெரிவிக்கப்பட்ட கருத் துக்கள் இந்நாட்டு முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளன. பாராளுமன்றத்தில் உள்ள அறை ஒன்றில் நடை பெற்ற அபிவிருத்திக் கூட்டமொன்றின்போது அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொத்துவிலில் உள்ள ரெஸ்டூ ரன்ட் ஹோட்டல்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் வழங்குமாறு அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்ததாகவும், அதற்கு பஷில் ராஜபக்ஷ அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைக்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடுமென்றும், முஸ்லிம் மக்களுக்கு தெரிந்தால் ௭திர்ப்பார்கள் ௭ன்றும் தெரிவித்ததாக குறிப்பிட்ட தொலைக் காட்சி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆறுமுகம் தொண் டமான், றிசாட் பதியூத்தின், பிரதி அமைச்சர்கள் ௭ம்.௭ல்.ஏ.௭ம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன், பசீர்சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.௭ச்.௭ம்.அஸ்வர், ௭ச்.௭ம்.௭ம்.ஹரீஸ், பைசால் காசிம், உனைஸ் பாறூக் உட்பட சுமார் 50இற்கும் மேற்பட்ட சகோதர மொழி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் அந்நிகழ்ச்சி யின் இணைப்பாளர் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டவைகளுள் மது பானமும் ஒன்றாகும். மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையாகி இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் அழிந்து போன வரலாறுகள் உள்ளன. மதுபழக்கத்திற்கு அடிமையானால் குடும்பமும், சமூகமும் சீரழிந்து விடும். மேலும் இன்னும் பல பாவங்களின் காரணகர்த்தாவாகவும் மது விளங்குகின்றது. இத்தகைய தன்மைகளைக் கொண்ட மது பானத்தினை விற்பதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்று அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுவது பாரதூரமான விடயமாகும்.

மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கினால் ஜம்இயத்துல் உலமாவும் முஸ்லிம்களும் ௭திர்ப்பார்கள் ௭ன்ற அச்சத்தினை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெளிப்படுத்தி இருக்கும் போது குர்ஆன், ஹதீஸ் ௭ன்றும், சமூக சீரமைப்பு ௭ன்றும் தெரிவிக்கும் அரசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தமையானது முஸ்லிம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இன்று மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குமாறு கூறுவார்கள். நாளை சில விடுதிகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் ௭ம்.௭ச்.௭ம்.அஸ்ரப் தமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி பெற்றுக் கொடுத்தார் ௭ன்று தெரியவந்ததும் அந்த பாராளுமன்ற உறுப்பினரை கட்சியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தி வைத்தார் என்று தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவிலில் உள்ள ரெஸ்டூரன்ட் ஹோட்டல்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டுமென்று கூறியதனை குறிப்பிட்ட முஸ்லிம் கட்சி மறைத்தாலும், தற்போது தனியார் தொலைக் காட்சி மூலமாக அம்பலமாக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகும் அக்கட்சி குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு ௭திராக ஒழுக்காற்று நடவடிக்கை ௭டுக்காவிட்டால், அக்கட்சியை ஒரு ஒழுக்கமுள்ள கட்சியாக கருத முடியாது. ஒழுக்காற்று நடவடிக்கை ௭டுக்காதுவிடும் பட்சத்தில் குறிப்பிட்ட கட்சி இத்தகைய இஸ்லாத்திற்கு மாற்றமான செயற்பாடுக ளுக்கு ஆதரவளிப்பதாகவே அர்த்தமாகிவிடும். என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

About these ads

Written by lankamuslim

July 4, 2012 at 8:36 pm

13 Responses

Subscribe to comments with RSS.

  1. who is that cow? is he a muslim ? party leader must put him out immediately , …

    aa

    July 4, 2012 at 9:16 pm

  2. ANTHE PAARALUMANRA URUPPINAR MUSLIM ENRA LOGO MADDUMTAAN ENRU NINAIKKINREN AVERUKKU ISLATHAI KATTUKKOLVETHETKU YETPAADU SEIYUNKAL.

    soni

    July 5, 2012 at 12:24 am

  3. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் அஷ்ரப் ரஹிமஹுல்லாஹ் மதுபானகடைக்கு அனுமதி பெற்று கொடுத்தார் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் அண்டபுளுகாக உலாவும் இந்த கதைக்கு இந்த பச்சை பொய்யை மீண்டும் நாபகமூட்டும் லங்கா முஸ்லிமுக்கு துணிவிருக்கிறதா அவர் எங்கே எப்போது யாறுக்கு எந்த இலக்க அனுமதி பத்திரத்தை பெற்றுகொடுத்தார் என ஆதாரத்துடன் தெளிவுபடுத்த??? இல்லை நாளை கியாமத்து நாளில் இந்த ஒரு இட்டு கட்டினாலேயே அல்லாஹ்வின் முன் தலை குனிந்து நிட்க போகிறதா???

    நீங்க பானம உல்லை அமைந்துள்ள பொத்துவில் பக்கம் போனா அங்க முஸ்லிம் பெர்களை தாங்கிய மனிதர்கள் நடத்தும் அனேகமான கரையோர ரெஸ்டூரன்கள் உணவகங்களில் மாதுபானமும் வகை வகையா பகிறங்கமா விட்க படுவத கானலாம்

    ஐந்து நேரமும் அதான ஒலிபெருக்கியில் உறக்க முழங்கனும் என்று போராடி ஒலி பெறுக்கி தடையையும் உடைதெறிந்து அதான் சொல்ல படுகிறது ஆனா நாட்டில் உள்ள நகரங்களில் முஸ்லிம்களில் பத்து வீதமானோர் கூட அதான் சொன்னால் மஸ்ஜிதின் பக்கம் விரைவதை கான முடியவில்லை????

    அதிலும் ஸுபஹ் தொழுகை நாடு முழுக்க கூட்டி சேர்தாலும் தொழுபவர்கள் ஒரு இலட்சம் கூட இருக்கமாட்டர்

    குடு கஞ்சா ஹெரோயின் அபின் என எல்லா போத வஸ்தும் நம்ம முஸ்லிம்களுந்தான் அதிகம் வாங்குபவங்களாகும் விட்பவங்களாகும் இருப்பாங்க!!! ஏன் கொஞ்சம் தலை நகரிலும் பிர நகரிலும் உள்ள மதுபான சாலைகளுக்கு அறுகில் நின்று கணக்கெடுத்து பார்தால் தெறியும் ஒரு நாளைக்கி எத்தனை முஸ்லிம்கள் மதுவை கொள்வனவு செய்கிறார்கள் என்பது???

    ஒருவர் முஸ்லிமாக பிறப்பதாலோ முஸ்லிம் குடும்பத்தில் வாழ்வதாலோ முஸ்லிமான வாழ்வை விளங்கி மனதார ஏற்று வாழ முடியாது யார் இஸ்லாத்தை ஈமானிய தன்மைகளுடன் படித்துகொள்கிறார்களோ அவர்களாலேயே இஸ்லாத்துடைய கொள்கையை முதன்மையாக வைத்து வாழ்வை ஓட்ட முடியும் அதட்கு அரசியல்வாதிகளும் விதி விளகல்ல

    பொதுவாக நமது சமூக நிலமை சமூகத்தின் மேல்மட்டம் அரசியல் வாதிகள் அவர்களின் சந்ததிகள் செல்வந்தர்கள் இஸ்லாமிய சூழலில் கல்வி கட்பதைவிட சிறுநீர்கழித்து சுத்தம் செய்யகூட வசதி இல்லாத அந்நிய பாடசாலைகளிலேயே கல்வி கட்கின்றனர் வாழ்வின் நாளில் ஒருபங்கை செலவிடுகின்றனர் அவர்களின் இளமைபருவம் இவ்வாறு இஸ்லாமிய சூழலுடன் தொடர்பற்று இருப்பதால் வாழ்வின் ஏனைய பகுதியும் பெரும்பாலும் அவ்வாறே இருந்து விடுகிறது சிலர் விதி விளக்காக இருக்கலாம்

    இங்கு மட்டும் அல்ல உலகில் எங்கு பார்தாலும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மன்னர்கள் மந்திரிகள்,கோடீஸ்வரர்கள் அப்படி பட்டோரின் சந்ததிகள் என அதிகமாக முஸ்லிம் சமூகத்தில் ஆளுமை செழுத்த வெளிக்கிடும் மனிதர்களில் பெரும்பாலானோரின் இளமை பருவம் இஸ்லாம் என்றால் என்ன இஸ்லாமிய வாழ்வென்றால் என்ன என்று விளங்காத கிருஸ்தவ ,நாஸ்தீக அந்நிய மத கலாசார சூழலிலேயே கழிகிறது இப்படி பட்டோர் பொறுப்புகளுக்கு வரும் போது அவர்களிடன் இஸ்லாத்தின் சாயலை முஸ்லிம்களின் நடத்தையை எதிர்பார்பது யாறின் அறியாமை யாறின் மடமை???

    எனவே கோபம் கண்டனம் ஆட்சேபம் விலக்கி வைத்தல் நடவடிக்கை எடுத்தல் இவை அல்ல இதட்கு தீர்வுகள்!!! புற்றுநோய்போல் இஸ்லாத்தை மலட்டு தன்மையாக்கி சூழ்நிலைகதையாக சிரைபிடித்து இஸ்லாம் என்றால் என்ன என்று அறியவிடாது உலகம் முழுக்க சதி செய்வோர் வளையில் விழுந்திருக்கும் ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள்,மந்திரிகள்,செல்வந்தர்கள்,உயர் பதவிகள் வகிபோறிடத்திலும் அவர்களின் சந்ததிகள் வாழும் இடங்களிலும் இஸ்லாமிய தஃவா அழகிய முறையில் திட்டமிட்டு முன்னெடுக்கபடவேண்டும் அப்படியான திட்டம் சாராய விட்பனைக்கு அனுமதி பத்திரம் கேட்டவறின் சந்ததிகள் சாராயத்தையும் சாத்தானின் தீங்குகளையும் ஒழித்துகட்ட உயிரையும் கொடுத்து போறாடகூடியவர்களாக மாறும் நிலமை உருவாகும்

    Mohammed Hiraz

    July 5, 2012 at 2:00 am

    • Pls read the news well …before u put that blame on others .

      Truth finder

      July 5, 2012 at 9:32 am

    • yes, pls read the article clearly before putting any comments

      Naheeb

      July 5, 2012 at 8:05 pm

    • ஹிராஸ் நானா இது உங்கள் தலைவரை பற்றிய செய்தியல்ல, செய்தியை சரியாக வாசிக்காமால் உணர்ச்சிவசப்பட்டு லங்காமுஸ்லிமை குறை சொல்லிவிட்டீர்கள். அவசரம் கூடாது நானா .

      ஆனால் செய்தி யாரை பற்றி சொன்னாலும் செய்தி என்ற வகையில் எமது பாராட்டுக்கள் .

      KKboy

      July 6, 2012 at 4:24 pm

  4. The party should take action against him to prevent other members from doing such dirty work in future.

    ACM.Saleem

    July 5, 2012 at 9:35 am

  5. This is a violation of ethics in a so called Muslim party !!!, The said Muslim party must take this seriously .

    Noordeen-Lawyer

    July 5, 2012 at 9:44 am

  6. marhoom leader ashraf avarkalin kaalathil current deputy minister hisbullah avarkal thaan mathupaana koatta onrai valangi irunthaar ithai arintha leader avarkal itharkaana vilakkaththai koari irunthathudan “ummai naan ean katchiyil vaiththirukka vendum” atharkaana niyaayamaana kaaranaththai therivikkumaarum kettiruntha santharpaththileye leader avarkal vapaththaanaarkal (innalillah)

    ameen

    July 5, 2012 at 10:20 am

  7. Yaaru allahwin peyarai ….. konda …… koottaththin thalaiwara?

    Fasly

    July 5, 2012 at 11:33 am

    • கேட்பதை எல்லாம் பேசுபவன் பொய்யன் என்று நான் சொல்லவில்லை அல்லாஹ்வின் தூதர் சொல்கிறார்கள் நீங்கள் யார் என நீங்களே முடிவெடுங்கள் மேலும் இட்டுகட்டலுக்கும் வீன் பழிக்கும் முழு உலகமக்களின் முன்னால் அஹ்ஹாவின் சந்நிதானத்தில் தலை குனிந்து நிட்க வேண்டி இருக்கும் என்பதை மறவாதீர்கள்

      Mohammed Hiraz

      July 6, 2012 at 4:29 pm

  8. @Br.Hiras….Please read the article carefully before blaming Lanka Muslim.Bcs it clearly stated one of the parliamentarian during Leader Ashroff’s period.Its not him.

    Eng.Nishath

    July 6, 2012 at 10:53 am

    • மன்னிகவும் மேலே உள்ள கருத்தில் அஸ்ரப் றஹிமல்ஹுல்லாஹ் என்ற வசனத்தின் பின் “அவர்கள் காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் எம்பியாக இருந்த ஒருவர் ” என்ற வசனம் எப்படியோ விடுபட்டு இருக்கிறதது அதனாலேயே இந்த கருத்து மயக்கம் ஆனால் நான் கேட்ட விடயம் தெளிவானதே ஹிஸ்புல்லாஹ் மதுபானகடைக்கு அனுமதி பெற்று கொடுத்தார் என்ற செய்தியை மீண்டும் நாபகபடுத்தி இருக்கும் லங்கா முஸ்லிமுக்கு முஸ்லிம் என்ற வார்தையை கூற தகுதி இருந்தால் எங்கே எப்போது யாறுக்கு என்ன இலக்க மதுபான விட்பனை அனுமதி பத்திரத்தை பெற்று கொடுத்தார் என்ற ஆதாரங்களை வெளி இட திறானி இருக்கிறதா???

      Mohammed Hiraz

      July 6, 2012 at 4:28 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,827 other followers

%d bloggers like this: