ஈரானில் விமல்
அஸ்ரப் ஏ ஸமத்: ஈரானுக்கு உத்தியோகபூர்வமாக 3 நாள் விஜயம் மேற்கொண்டு அங்கு சென்றுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச ஈரான் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி அலி அக்பர் சகேகியை சந்தித்து இருநாட்டு உறவு தொடர்பாக கலந்துரையாடியுள்ளார் .
இச் சந்திப்பின்போது அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பொருளாதார தடை மற்றும் அரபுலகினை ஆக்கிரமிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஈரான் முகம்கொடுத்து வரும் சவால்கள் தொடர்பாகவும் ஈரான் வெளிநட்டு அமைச்சர் , அமைச்சர் விமல் வீரவன்சவுடன் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது அமெரிக்காவுக்கு எதிரானரான இலங்கை அமைச்சர் விமல்வீரவன்சவின் செயல்பாடுகள் பற்றி ஏற்கனவே ஈரான் அறிந்துகொண்டுள்ளதாக ஈரான் வெளிநட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார் .








