Lankamuslim.org

One World One Ummah

அம்பாறை கரையோர துறைமுக வேலைகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி

leave a comment »

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட துறைமுகத்தின் வேலைகள் இந்த வருட இறுதிக்குள் பூர்த்தியடைந்து விடுமென ௭திர்பார்க்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு மே மாதத்தில் டென்மார்க் அரசாங்கத்தின் 46.1 மில்லியன் யூரோ செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த துறைமுகம் இரு பிரிவுகளாக அமைக்கப்படுகிறது.

ஒன்று மீன் பிடித் துறைமுகமாகவும் மற்றது வர்த்தகத் துறைமுகமாகவும் நிர்மாணிக்கப்படுகிறது. ஒலுவில் கடற்கரைப் பகுதியை அண்டியுள்ள 58 ஹெக்டேயர் பரப்புள்ள பிரதேசத்தில் இந்த துறைமுகம் அமைக்கப்படுகிறது. ஒலுவில் துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் 330 மீற்றர் நீளமான பகுதியில் வர்த்தகக் கட்டிடத் தொகுதிகளும், பத்து மீற்றர் ஆழமான கப்பல்கள் சரக்கு இறக்கும் இடத்துடன் இணைக்கப்பப்படுகிறது

துறைமுகத்தின் வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு மதில் அமைக்கப்படுவதுடன், பாதுகாப்புப் படையினர் முகாமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஒலுவிலில் துறைமுகம் அமைப்பதன் மூலம் வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பல்வேறு தொழில்களையும் இந்தப் பிரதேசத்தில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள்.

இதேநேரத்தில் ஆழ்கடல் மீன் பிடித் தொழிலும் அபிவிருத்தி செய்யப்படுகிறது. மீன் பிடி இயந்திரப் படகுகள் நிறுத்தி வைப்பதற்கும், பிடிக்கப்படும் மீன்கள் பழுதுபடாது பாதுகாப்பாக வைப்பதற்கான குளிர்சாதன அறைகளும் அமைக்கப்படவிருக்கின்றன. கரையோரங்களில் குடியிருந்து மீன் பிடி துறைமுகத்திற்கான நிலத்தைக் கொடுத்து உதவுபவர்களுக்கு ஒலுவில் பிரதேசத்தில் வீடுகள் அமைத்துக் கொடுத்துக் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு பகுதியினருக்கு பொருத்தமான நஷ்ட ஈடுகள் கிடைக்கவில்லை ௭ன்று தெரிவிக்கின்றனர்.

About these ads

Written by lankamuslim

July 4, 2012 at 10:56 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers

%d bloggers like this: