Archive for July 2012
தெமட்டக்கொட பொலிஸ் ஏற்பாடு செய்த இfப்தார் நிகழ்ச்சி
அஸ்ரப் ஏ ஸமத்: தெமட்டக்கொட பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இfப்தார் நிகழ்ச்சி இன்று தெமட்டக்கொட பிளேஸ் மஸ்ஜித்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பெளத்த , ஹிந்து, கிறிஸ்தவ மதகுருமார்களும் கலந்துகொண்டனர். Read the rest of this entry »
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை “அம்மையார்” அழைத்த SB
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை “அம்மையார்” (‘Madam President’, Rajapaksa) என்று உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. திசநாயக்க உளறிய சம்பவம் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read the rest of this entry »
செய்தி இணையத்தளங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
அஸ்லம் எஸ்.மௌலானா: செய்தி இணையத்தளங்கள் மீதான புதிய ஒழுங்கு விதிகள் தொடர்பாக இலங்கை பத்திரிகை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. Read the rest of this entry »
இலங்கையில் மத நிந்தனை இடம்பெற்றுள்ளது : அமெரிக்கா
ஏ.அப்துல்லாஹ்: இலங்கையில் மதம், மதத்துடன் தொடர்பானவை மத நம்பிக்கை , மத நடத்தை ஆகியன தொடர்பிலான புறக்கணிப்பு, அல்லது சமூக நிந்தனை இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க அறிக்கை கூறுகிறது .நேற்று வெளியிடப்பட்டுள்ள கடந்த 2011ஆம் ஆண்டுக்கான 2011 International Religious Freedom Report என்ற அந்த அறிக்கை இப்படித் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
இணைந்த வடக்கு கிழக்கில் தங்களைத் தாங்களே ஆளும் தீர்வே தமிழருக்குத் தேவை: இரா.சம்பந்தன்
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். Read the rest of this entry »
இணைந்த வடகிழக்கு மானிலத்தில் தென்கிழக்கு அலகு என்ற யதார்த்தத்திற்கு முரணானது
எஸ்.அஷ்ரப்கான்: சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்-அரசியல்வாதிகள் என்போர் மக்களின் தேவைகளை செவ்வனே நிறைவேற்றுகின்றவர்களாக இருக்க வேண்டும் உரிமைக் கோசங்களுடன் வெற்றுப் பேப்பர்களாக இருப்பவர்கள் மக்கள் மத்தியில் செல்லாக்காசுகளாகும். என கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் Read the rest of this entry »
முஸ்லிம் சமூக விரோத இணையதளங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு
முஹம்மத் அம்ஹர்: அண்மைக்காலமாக 10 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் மிக மோசமான முறையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. Read the rest of this entry »
ஜப்பான் சுமிடோமா நிறுவனம் மீண்டும் இலங்கை வருகிறது
இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கையில் மீண்டும் தமது நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்க ஜப்பான் சுமிடோமா நிறுவனம் தயாராகிவருகின்றது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து தமது செயற்பாடுகளை நிறைவு செய்து கொண்டு ஜப்பான் சென்ற அந்த நிறுவனம் Read the rest of this entry »
ரணில் கூற்று குர்ஆனை எந்த வகையிலும் இழிவுபடுத்தாது
அஸ்லம் எஸ்.மௌலானா: முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள், குர்ஆன் ஹதீதை விட்டு விட்டு மஹிந்த சிந்தனையை கட்டிப்பிடித்துக் கொண்டு திரிகிறார்கள் என்ற ஐ தே க தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கூற்று குர்ஆனை எந்த வகையிலும் இழிவுபடுத்தாது Read the rest of this entry »
ரணிலில் பேச்சு மரண தண்டனைக்குரிய குற்றம்
இஸ்லாத்தை அவமதிக்கும் ரணிலின் பேச்சுக்கள் ஸியோனிஸத்தின் வெளிப்பாடுஅரசியலை மறந்து முஸ்லிம்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்: அஸ்வர் MP.-புனித அல்-குர்ஆனையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் வகையில் உரையாற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சகல முஸ்லிம்களும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டுக் கண்டிக்க வேண்டும் Read the rest of this entry »
ரிஸ்வி முப்தி அடங்களான ஜம்இயதுல் உலமா குழுவினர் தம்புள்ள மஸ்ஜிதுக்கு விஜயம்
மாத்தளை செய்தியாளர்: அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் அதன் தலைவர் ரிஸ்வி முப்தி அடங்கிய குழுவினர் தம்புள்ள மஸ்ஜிதுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர். அந்த குழுவில் மாத்தளை மாவட்ட ஜம்இயதுல் உலமாவின் தலைவர் ஜக்கரியா மௌலவி உட்பட மேலும் பல ஆலிம்கள் சென்றுள்ளனர். Read the rest of this entry »
முதலமைச்சர் பதவியை சந்திரகாந்தனுக்கு என்றால் அதனை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்காது
தமிழர்களும், முஸ்லிம்களும் இந்நாட்டின் சிறுபான்மையினர் என்பதால் அரசாங்கம் தமிழர்களுக்கு வழங்கத் தயாராகும் உரிமைகள் அனைத்தையும் முஸ்லிம்களக்கும் வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
இளைஞர் காங்கிரஸின் பிராந்திய அமைப்பாளர் களுக்கான ஒன்றுகூடல்
எஸ்.அஷ்ரப்கான்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் இப்தாருடன் இன்று சாய்ந்தமருதில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளரும், Read the rest of this entry »
யாழ் சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பை கைவிட்டு நாளை முதல் பணி
யாழ் சட்டத்தரணிகள் சங்கம் இரண்டாக பிளவு பணிப் பகிஷ்கரிப்பை இடைநிறுத்திவிட்டு நாளை முதல் முதல் பணிக்கு திரும்புவதாக ஒரு பிரிவினர் அறிவிப்பு. மற்ற பிரிவினர் வியாழக்கிழமை வரை பகிஷ்கரிப்பை தொடர்வதாக தீர்மானம். Read the rest of this entry »
தம்புள்ளை பள்ளியை நிர்மானிக்கும் பொறுப்பை நானே மேற்கொள்வேன்: சஜித் பிரேமதாச
பன்குளம் அப்துல்சலாம் யாசீம்: எமது கைக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போது தற்போது பிரச்சனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தம்புள்ளை பள்ளியை நிர்மானிக்கும் பொறுப்பை நானே மேற்கொள்வேன் என்பதை இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு கூறிக்கொல்ல விரும்புகின்றேன். திருடனின் தாயிடம் திருடனைப்பற்றி சாத்திரம் கேட்பது போல இவ்வரசாங்கம் செயற்பட்டு Read the rest of this entry »
மின்னல் ரங்கா பகிரங்க விவாதத்திற்கு தயாரா ?
அம்ஜத்: கடந்த பொது தேர்தலில் நுவரெலிய மாவட்டத்திலிருந்து ஐதேக பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீரங்கா எம்பியை, நடுநிலையான நடத்துனரின் பங்குபற்றலுடன் கூடிய நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தம்முடன் கலந்துகொள்ள தயாரா என கேட்டு பகிரங்க அழைப்பை ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ளது. Read the rest of this entry »
முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாத கட்சியல்ல, சிங்கள் வேட்பாளர்களை கிழக்கில் வெற்றிபெறச் செய்வோம்
F.M.பர்ஹான்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாத கட்சியல்லவென்றும், அனைத்து இனத்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் கட்சியென்றும் அதன் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் Read the rest of this entry »
மட்டக்களப்பில் முஸ்லிம் தலைவர்களே அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்: முரளிதரன்
F.M.பர்ஹான்: இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் தலைவர்களே அரசியல் ஆதிக்கம் செலுத்தி அரசின் கூடிய நன்மைகளைப் பெற்று வருகின்றனர்.இந்த ஆதிக்கத்தை தமிழ் மக்களும் எடுக்க வேண்டும். இதனூடாக அதிகமான சேவைகளை அதிகமாக தமிழ்ப் பிரதேசம் பெற்றுக் கொள்ள முடியும். Read the rest of this entry »
காரைதீவு பிரதேச சபை அமர்வில் சர்ச்சை
எமது விசேட செய்தியாளர்: இன்று (30) காரைதீவு பிரதேச சபை அமர்வு இடம்பெற்றுக் காண்டிருந்த வேளையில் எதிர்கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.பாயிஸ் எழுப்பிய கேள்வி ஒன்றின் மூலமாக சர்ச்சை ஏற்பட்டது. உடனடியாக சம்மாந்துறை பொலிஸார் அந்த இடத்திற்கு வந்து விசாரணை நடாத்தியது Read the rest of this entry »
மு.கா புனித அல் குர்ஆனை புறந்தள்ளி விட்டு மஹிந்த சிந்தனையைக் கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளது: ரணில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஹம்மது நபி (ஸல்) பெருமானையும் புனித குர்ஆனையும் புறந்தள்ளி விட்டு மஹிந்த சிந்தனை யைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் மக்களின் வாக்குகளை அரசுக்குத் தாரை வார்க்கும் நோக்கிலேயே மு.கா. கிழக்கில் தனித்துக் களமிறங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். Read the rest of this entry »
தமிழ்நாடு: ரயிலில் தீ 47 பயணிகள் மரணம்
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது அந்த விபத்தில் சிக்கி 47 பயணிகள் மரணமாகியுள்ளனர் என்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்ற Read the rest of this entry »
நாம் பெரும்பான்மை பெற்றால் அரசாங்கத்தையும் சேர்த்து ஆட்சி நடத்த நாம் பின் நிற்கமாட்டோம்: இரா. சம்பந்தன்
ஏ.அப்துல்லாஹ்: தமிழ் மக்கள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ௭ங்களை வெற்றி பெறச் செய்வார்களானால், முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நிலையொன்று உருவாக முடியாது. கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைக்கும் சந்தர்ப்பம் ௭ங்களுக்கு ஏற்படும் போது Read the rest of this entry »
மீண்டும் பெளத்த பிக்குகள் இடையூறு முஸ்லிம் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை
கொழும்பு செய்தியாளர்: ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுக்கு சென்ற பௌத்த பிக்குகள் அங்கு முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று (நேற்று) மாலை இடம்பெற்றுள்ளது . ஆனாலும் இது தொடர்பாக பொலீசில் முறைப்பாடு செய்யப்படவில்லை. இன்று-29.07.2012 (நேற்று) ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள நூர் மஸ்ஜித்தில் இfப்தார் நிகழ்வொன்று Read the rest of this entry »
கிண்ணியாவில் வரவேற்பு கோபுரம் அமைவதைத் தடுக்க பேரின சக்திகள் முயற்சி?
அஸ்லம் எஸ்.மௌலானா: கிண்ணியா பாலத்திற்கு அருகில் முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வரவேற்பு கோபுர நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு பெரும்பான்மை இன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »
தேர்தல் கால மென்பதால் தமிழ் முஸ்லிம் கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றனர்: ரணில்
F.M.பர்ஹான்: மன்னாரில் தமிழ், முஸ்லிம் கலவரத்தை உண்டு பன்ன முயற்சிக்கின்றனர்.தேர்தல் கால மென்பதால் தமிழ் முஸ்லிம் கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றனர்.இதில் இரண்டு சமூகங்களும் கவனமாக இருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் Read the rest of this entry »
தெதுருஓயகம பள்ளி வாசல் சம்பவம் நாட்டில் ஜனநாயகம் இல்லை ௭ன்பதற்கு ௭டுத்துக் காட்டு
சஹீத் அஹமட்: சுமார் 38 வருடம் பழைமை வாய்ந்த குருணாகல் தெதுரு ஓயகம பள்ளி வாசல் புராதன அமைப்புக்களைக் கொண்ட முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத் தலமாகும். புனித ரமழான் நோன்பு திறக்கும் வேளையில் முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒன்று கூடியதை பொறுத்துக் கொள்ள முடியாது பிக்குகளும் சிங்கள கடும் போக்காளர்களும் அத்து மீறி பள்ளி வாசலுக்குள் நுழைந்து Read the rest of this entry »
மன்னார் உப்புக்குளத்தில் ரவூப் ஹக்கீம்
எம் .ஷியாம், F.M.பர்ஹான் : நீதித் துறையின் சுயாதிபத்தியம், சட்டத்தின் ஆட்சி (Rule of Law) என்பவற்றை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையில் எனக்குண்டு. அதேவேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற முறையிலும், Read the rest of this entry »
கருமலையூற்று கிராமத்தினை மீண்டும் முஸ்லிம்களிடம் கையளிக்கவும்: ஹஸன்அலி
திருகோணமலை கருமலையூற்று கிராமத்தினை மீண்டும் முஸ்லிம்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் ௭திர்கொண்டு வரும் இது போன்ற பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் மனது வைத்தால் மாத்திரமே தீர்வினைக் காணமுடியும். அத்துடன் யுத்தம் உக்கிரமாக நடைபெற்றபோதுகூட அமைதி நிலவிய பகுதிகளில் இன்று இராணுவம் முகாம்களை Read the rest of this entry »
தம்புள்ள பள்ளி: சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு உலக தமிழர் பேரவை கண்டனம்
தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பில் இன்னும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிராக உலக தமிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது. சிறுபான்மையினரின் மத உரிமைகளையும், உணர்வுகளையும் பெரும்பான்மை பௌத்த Read the rest of this entry »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் ஒன்றியத்துக்கு ஜனாதிபதி அங்கீகாரம்
கொழும்பு செய்தியாளர்: பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் சந்திப்புஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் ஒன்றியக் குழு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தது. Read the rest of this entry »
மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமை அமைப்பு கோரிக்கை
ஏ.அப்துல்லாஹ்: மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இலக்குவைக்கப் பட்ட படுகொலைகளை சுதந்திரமான முறையில் விசாரணை நடாத்தவேண்டும் Read the rest of this entry »
அஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் போடோ விடுதலைப் புலிகள்
குவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். Read the rest of this entry »
கிழக்கு தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, தமிழ் சிவில் சமூகத்தின் வேண்டுகோள்
யாழ் ஆஷிக்: தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். எமது தாயகத்தில் கடந்த காலத்தில் இரண்டு முறை (1989, 2008) நடந்த மாகாண சபைத் தேர்தல்களை Read the rest of this entry »
முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்படுத்துவதுதான் அரசியல் சமநிலையை ஏற்படுத்தும்
ஏ.அப்துல்லாஹ் : கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் என்பது மிகவும் அவசியமானது. தமிழர்ளை பெரும்பான்மையாக கொண்ட வடக்கில் தமிழ் முதலமைச்சர் என்று வரும் போது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்படுத்துவதுதான் அரசியல் சமநிலை பேணுவதாக அமையும் Read the rest of this entry »
முன்னாள் இலங்கை கிரிக்கெட் நிர்வாகி அபூ புவாத் காலமானார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் முகாமையாளரும் கிரிக்கெட் நிர்வாகியுமான அபூ புவாத் இன்று மாலை காலமானார். தனது 75ஆவது வயதில் இயற்கை எய்திய அன்னார் வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவராவார். Read the rest of this entry »
இலங்கை அரபு மத்ரஸாக்களில் தீவிரவாத செயல்பாடுகள் இல்லை :கோதபாய
முஹம்மத் அம்ஹர்: நாட்டில் உள்ள அரபு மத்ரஸாக்கள் எதிலும் தீவிரவாத செயல்பாடுகள் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . அண்மையில் பாதுகாப்பு செயலாளருடன் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் பிரதிநிதிகள் அடங்கிய முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது ஜம்இயதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி எழுப்பிய கேள்வி Read the rest of this entry »
இணையத்தில் கொரிய வேலை வாய்ப்பு விபரம்
கொரியாவில் வேலை வாய்ப்புக்காக தம்முடைய பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு தற்போது அவகாசம் ஏற்பட்டுள்ளது. Read the rest of this entry »
கருமலையூற்று பள்ளிவாயலுக்குள் சிலை குற்றம் சாட்டுகிறார்: எம்.ஏ.எம்.மஹ்ரூப்
அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை: 300 வருடங்கள் பழைமை வாய்ந்த கருமலையூற்று பள்ளிவாயலுக்குள் இராணுவத்தினர் சிலையை வைத்து வணங்குகின்றார்கள். இதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் சாட்சியாகும். அப்பள்ளியை பார்வையிட அமைச்சரை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. Read the rest of this entry »
உண்மைக்குப் புறம்பான நடவடிக்கைகளின் ஈடுபடாதீர்கள்
F.M.பர்ஹான்: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரும் மட். அலிகார் வித்தியாலய அதிபருமான எம்.ஆர். ஜவாத் ஆசிரியர் அவர்களின் வீட்டில் அனாமோதய துண்டுப்பிரசுரங்கள் இருப்பதாக காத்தான்குடி பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, Read the rest of this entry »
கொழும்பில் இடம்பெற்ற பாரிய ஆர்பாட்ட பேரணி வீடியோ
இர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், முஸ்லிம்களின் பிரதேசங்களிலும் முஸ்லிம் மீள்குடியேற செல்லும் போதும், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்கும் போதும் அதற்கு எதிரான சதி திட்டங்கள் இடம் பெறுவதை கண்டித்து இன்று வெள்ளிகிழமை கொழும்பில் பாரிய எதிர்ப்பு பேரணியொன்று இடம் பெற்றது. Video Read the rest of this entry »
சமூக அக்கறையுடன் செயற்படும் எவரையும் மக்கள் மிக இலகுவாக மறந்து விட மாட்டார்கள்.
எஸ்.அஷ்ரப்கான்: தமிழ், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது, தமிழ் பேசும் சமூகங்களின் குரலாக ஓங்கி ஒலித்த மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்த பலர் இன்று சுயலாப அரசியல் செய்து வருவதானது மிகவும் வேதனையைத்தரும் விடயமாகும் Read the rest of this entry »
முஸ்லிம் கவுன்ஸில் கிழகில் வெளியிட்டத் துண்டுப்பிரசுரம்
F.M பர்ஹான்: முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பினால் சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வடமாகாண முஸ்லிம்களின் அவலக்குரலைக் கேளீர் எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம் : முஸ்லிம் கவுன்ஸில் மேற்படி தலைப்பில் Read the rest of this entry »
இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்
M.ரிஸ்னி முஹம்மட்:,சபீர் அஹமட், எஸ்.அஷ்ரப்கான், F.M: பர்ஹான்,இர்ஷாத் றஹ்மத்துல்லா,யாழ் ஆஷிக், யாழ் இஷாக்: இணைப்பு-6-இன்று -27.07.2012- ஜும்ஆவின் பின்னர் கொழும்பு, காலி, மாத்தரை, கிண்ணியா, கல்முனை, சாய்ந்தமருது, காத்தான்குடி, அகற்றப்பற்று, சம்மாந்துரை, யாழ்பாணம் ஆகிய இடங்களில் ஆகிய பகுதிகளில் ஆர்பாட்டங்கள் இடைபெற்றுள்ளது. படங்கள் Read the rest of this entry »
நோன்பு நோற்றிருந்த மூன்று வாலிபர்களின் வபாத்தால் மூதூர் சோகத்தில்
எஸ்.எச்.அமீர்: மூதூர் ஹபீப் நகர் கடலில் நேற்று வியாழக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த மூன்று பேர் சுழியில் அகப்பட்டு வபாத்தாகியுள்ளனர். மூதூர் ஜாயா வீதியைச் சேர்ந்தவர்களான முஹம்மது ஜுனைத் முஹம்மது ஸஹி (வயது :28), நஸீர் முஹம்மது இர்பான்(வயது 19) மற்றும் லாபிர் றிஜான் (வயது : 19) ஆகியோரே இவ்வாறு வபாத்தானவர்களாகும். Read the rest of this entry »
மக்கள் காங்கிரஸின் பிரமுகர் முஸ்லிம் காங்கிரசில் இணைவு
எஸ்.அஷ்ரப்கான்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், மை பவுண்டேசன் தலைவரும், தொழிலதிபருமான அல்-ஹாஜ் ஏ.சீ. எஹியாகான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் நீதியமைச்சர் றவூப் ஹக்கீம் முன்னிலையில் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். Read the rest of this entry »
உலக வரைபடத்தில் இந்தியா என்றொரு தேசம் உள்ளவரை தமிழ் ஈழம் என்பது சாத்தியமற்ற விடயமாகும்.
எஸ். எம். சறூஜ்: முஸ்லிம்கள் மீதான பிழையான அரசியல் கண்ணோட்டம் களையப்பட வேண்டும் தமிழ் புத்தி ஜீவிகளுக்கு மு.கா பிரதித் தலைவர் வேண்டுகோள்: முஸ்லிம்களைப் பற்றிய ஒரேவிதமான வரலாற்றுப் பார்வை கொண்டிருக்கும் தமிழர்களின் எண்ணப்போக்குகளில் புதிய மாற்றங்கள் வேண்டும். Read the rest of this entry »
ஜம்இயதுல் உலமா பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு
அகில இலங்கை ஜம்இயதுல் உலமா: இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம்களை மீண்டும் தாயக மண்ணில் மீளக் குடியமர்த்துவதற்கான பணிகளை முன்னெடுக்கும் அரசியல் நிலைமைகளின் பணிகளுக்கு திட்டமிட்ட வகையில் போடப்பட்டு வரும் தடைகளைக் கண்டிக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. Read the rest of this entry »
வடக்கு முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க நாடு பூராவுமுள்ள முஸ்லிம்கள் குரல் கொடுக்கவேண்டும்
முஸ்லிம் கவுன்ஸில் அறிக்கையில்: வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ள முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் பாடுபடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இலக்கு வைத்து சில நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. Read the rest of this entry »
முஸ்லிம்கள் என்பதால் அது அரச காணிகளா ?
அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை: திருகோணமலை மாவட்ட அனுராதபுர எல்லைக்கிராமமான ரொட்டவெவ பகுதியில்,பரம்பரை பரம்பரையாக செய்து வரப்பட்ட சேனைப்பயிர்ச்செய்கை காணியும் விவசாயக்காணியும் வனவள அதிகாரிகளினால் பரிமுதல் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். Read the rest of this entry »
‘மவ்பிம’ பத்திரிகையில் நபி என்று குறிப்பிட்டு புகைப்படம்
என்.நிசாம்: கடந்த (24.07.2012) அன்று வெளியான ‘மவ்பிம’ சிங்கள பத்திரிகையில் மனிதர்களுக்கான இறுதித் தூதரை பற்றிய கட்டுரை ஒன்றுடன் நபிகளாரின் புகைப்படம் ஒன்றையும் பிரசுரித்துள்ளது. இது பிரசுரிக்கப்பட்டமையானது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read the rest of this entry »







