மருதானையில் இஜ்திமா
ஜெம்ஸித் அஸீஸ்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொழும்பு பிராந்தியத்தின் ஏற்பாட்டில் மருதானை டவர் மண்டபத்தில் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி காலை 8.30 முதல் நண்பகல் 12.00 மணி வரை “கண்குளிர்ச்சி தரும் குடும்பம்; மனிதம் வாழும் தேசம்!” எனும் கருப்பொருளின் இஜ்திமா நடைபெறவிருக்கிறது.
கண்குளிர்ச்சி தரும் குடும்பம், சமூக மாற்றமும் சுவனப் பாக்கியமும், நாடும் நாமும் நலம் பெற ஆகிய தலைப்புக்களில் விஷேட உரை நிகழ்த்தப்படவிருக்கும் இந்நிகழ்வில் பெண்களுக்கும் பிரத்தியேக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.







